என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, October 13, 2011

8 தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்ட வரலாறு

முந்தைய பாகங்கள்....எம்.ஜி.ஆரின் தொலைபேசி அடித்தது.. எம்.ஜி.ஆர்.. எடுத்தார். அதன் மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டதும் எம்.ஜி.ஆர். முகம் சிவந்தார். அந்த செய்தி சமாதானத்தை முறிக்கும் அளவிற்கு அவரை கோபத்தில் தள்ளியது.
எம்.ஜி.ஆரை பார்க்கவந்த ரசிகர்களை வழிமறித்து தி.மு.க.,வினர் தாக்குகிறார்கள் என்ற செய்திதான் மறுமுனையிலிருந்து அவருக்கு கிடைத்த செய்தி.
உடனே எம்.ஜி.ஆருக்கு ரத்தம் கொதித்துவிட்டது. உடனே தன் மேனேஜர் ஆர்.எம்.வீரப்பனுக்கு போன் போட்டார்ஒரு பக்கம் சமாதானம் பேசுகிறார்கள், மறுபக்கம் நம் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித் தாக்ககுதல்களை ஏவி விட்டிருக்கிறார்கள், இது என்ன நாடகம்? இனி மேல் அவர்களோடு சமரசத்திற்கே இடமில்லை. பிற்பகலில் பேச்சுவார்த்தை எதுவும் தேவயில்லை, நாஞ்சிலாரிடமும், மாறனிடமும் சொல்லிவிடுங்கள்”, என்று கோபத்துடன் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

பேச்சுவார்த்தை முறிந்துவிஷயம் தி.மு.க.,தலைமைக்கு எட்டியதும், ஒரு அவசர/ அதிரடி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
தி.மு.க.,செயற்குழு. எவ்வளவோ வாய்ப்பளித்தும், எம்.ஜி.ஆர்.,அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. கழக பொதுச்செயலாளர் நாவலர் அவர்களால் எம்.ஜி.ஆர்.,மீது கழக சட்ட திட்ட விதியின்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்த செயற்குழு ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானத்தை பொதுக்குழுவிற்கு பரிந்துரை செய்கிறது என்பதே அந்த தீர்மானம்.

எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கவேண்டும் என்று செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் பொதுக்குழுவில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. எம்.ஜி.ஆர்.,மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதுதான் என்று பேராசிரியர் அன்பழகன், சிட்டி பாபு, கோ.சி.மணி, கோவை ராமனாதன் ஆகியோர் பேசினார்கள். மொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் 310 பேரில் 277 பேர் அதில் கலந்துகொண்டார்கள். இவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர்.,மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் இனி எம்.ஜி.ஆர் விவகாரம் குறித்து எந்த ஒரு சமரச முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

இன்று (14-10-1972) முதல் எம்.ஜி.ஆர்., திமு.கவை விட்டு முற்றிலும் நீக்கப்பட்டு விட்டார். இனி சமரசத்திற்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது தி.மு.க.,பொதுக்குழு.

அதே நாளில் எம்.ஜி.ஆரும், நான் தி.மு.கவிலிருந்து விலகிவிட்டேன். இரண்டொரு நாளில் புதிய அமைப்பு ஒன்றை துவங்குவேன் என்று அறிவித்தார்.

முதல் அத்தியாயம் முற்றுகிறது. இதன் தொடர்ச்சி கேள்விகளை நண்பர் செங்கோவி கேட்டுள்ளார். அந்த கேள்விக்கான பதில்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. அன்பின் கஸாலி - இத்தலைமுறையினருக்கு வரலாறு தெரிய வேண்டும் அல்லவா ? இடுகை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. முப்பது வருஷம் ஓடிப்போச்சி அண்ணே, தமிழக அரசியலை புரட்டிப்போட்ட முடிவு!!

  ReplyDelete
 3. நல்லாவே போய்க்கிட்டிருக்கு... எல்லாப் பாகங்களையும் எழுதி முடிச்சதும் ஒண்ணா இணைச்சு ஒரே பைலா கிடைக்கற மாதிரி போடுங்க கஸாலி சார். வரலாறு விரும்பிகளுக்கு உபயோகமா இருக்கும்.

  ReplyDelete
 4. ஒரு வழியாக எம்.ஜி.ஆர், தி.மு.க வை பிரிந்த வரலாறை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. பரபரன்னு விறுவிறுன்னு எழுதிட்டீங்க..சீக்கிரம் அடுத்த பகுதியை ஆரம்பிங்க.

  ReplyDelete
 6. இப்ப வரைக்கும் வாத்தியார் பேர வச்சி தான எல்லா கட்சியுமே ஓட்டு கேக்குறாங்க ॥

  ReplyDelete
 7. மிகச்சிறப்பான பதிவுகள்..எதற்கோ ஆரம்பிக்கப்பட்ட கழகங்கள் இன்று எதை எதை நோக்கியோ சென்று கொண்டிருக்கின்றன..சினிமாக்காரர்களை பூஜிக்கும் தமிழர்களுக்கு இது ஒரு சாபக்கேடுதான்..தமிழகத்தை சினிமாக்காரர்கள் அல்லாதவர்கள் என்று ஆளப்போகிறார்கள் என்றே தெரியவில்லை.

  ReplyDelete
 8. Sir, Oru nalla Malarum Ninaivukal.When i was a presidency Studnt.Manavarkal anivarum Thailvar pinnal Thiranda kalam.Thank u verymuch sir.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.