என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, October 17, 2011

30 தமிழ்மணத்துக்கு ஒரு பகிரங்க கடிதம்.....


தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு ..... அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).... சலாம் என்னும் முகமன் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் கூட, சொல்வது என் கடமை. கடந்த இரண்டு நாட்களாக நீங்கள் நலமாக இல்லை என்பதை நான் அறிந்தாலும், வழக்கமாக கடிதம் எழுதும்போது நலமா என்ற சம்பிரதாய வார்த்தையை கேட்டுத்தான் ஆகவேண்டி இருக்கிறது. நலமா?

கடந்த சில நாட்களுக்கு முன் டெர்ரர் கும்மி தளத்தில் நண்பர் பன்னிக்குட்டி ராமசாமி ஒரு பயோடேட்டா போட்டதுதான் இத்தனை பிரச்சினைக்கும் ஆரம்பப்புள்ளி என்பதை அனைவரும் அறிவோம். அந்த பதிவில் தமிழ்மணம் சார்பில் என்று பகிரங்கப்படுத்தியே பெயரிலி  என்ற ரமணீதரன் என்ற ஒருவர் இருக்கும் இடம் மறந்து, மிகவும் கீழ்த்தரமாக இறங்கி பின்னூட்ட வாந்தி எடுத்துவிட்டு போயிருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது சார்...உங்களின் பிரதிநிதி டெர்ரராகவே கும்மி இருந்தார். அதுசரி.... நான் கேட்பதெல்லாம்.....அந்த பதிவில் ஏன் சம்பந்தமில்லாத இஸ்லாமிய முகமனை கிண்டல் செய்யும் பின்னூட்டம்? யாரை திருப்திப்படுத்த சார் இந்த கிண்டல்?

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற முகமன் (இஸ்லாமியர்களின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் சலாம்) எச்சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. அன்பையும்,சகோரதத்துவத்தையும் வலியுறுத்தும் அருமையான சொற்றொடர். ஒரு மரண நிகழ்வுகளில் கூட சொல்லலாம். மரண வீட்டில் போய் குட் மார்னிங் சொல்லிப்பாருங்கள் அப்புறம் தெரியும் இந்த முகமனின் மகத்துவம். அப்படிப்பட்ட ஒன்றை கிண்டலடிக்கும் உங்களின் நிர்வாகிக்கு எவ்வளவு வக்கிரப்புத்தி இருந்திருக்கும்?.

எனக்கு ஒரு சந்தேகம் சார்? அப்படி என்ன தப்பாக கூறிவிட்டார் பன்னிக்குட்டி? காசு கொடுத்தால் எந்த கர்மத்தையும் தமிழ்மணம் முகப்பில் காட்டுவோம் என்ற உங்களின் உன்னதமான கட்டண சேவை கொள்ளையை மன்னிக்கவும் கொள்கையை சுட்டிக்காட்டியிருந்தார். இதில் என்ன தவறு இருக்கிறது? அதுதானே உண்மை.உங்களின் யோக்கியதையும் அதுதானே?
அந்த பதிவில் பின்னூட்டம் போட்ட என் பதிவுலக நண்பர்கள் சிலரை தமிழ்மணத்திலிருந்து தூக்கிவிட்டதாக மெயிலும் அனுப்பியுள்ளீர்களாமே?
என்ன ஒரு சர்வாதிகார போக்கு? இப்படி ஒரு சட்டாம்பிள்ளை தனத்தை உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது எந்த மடையன்?

உங்கள் அறியாமையை நினைத்து அழுவதா? சிரிப்பதா என்று விளங்கவில்லை எனக்கு? பின்னே என்ன சார்? தமிழ்மணம் என்ற கட்டிடத்தின் அஸ்திவாரங்களான பதிவர்களை நீக்கிவிட்டு எப்படி தமிழ்மணம் என்ற கட்டிடத்தை நிறுத்தப்போகிறீர்கள்? ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்....தமிழ்மணத்தை வைத்து பதிவர்கள் இல்லை....பதிவர்களை வைத்துதான் தமிழ்மணமும் இன்னபிற திரட்டிகளும்.

நீங்கள் இல்லாமல் எங்களால் ஹிட்ஸ் கொடுக்கமுடியும். எங்களை போன்ற பதிவர்கள் இல்லாமல் உங்களால் பத்து பைசா கூட சம்பாதிக்க முடியாது. எங்களை வைத்துதான் உங்களுக்கு விளம்பரம், வருமானம் எல்லாம் என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் கொடுக்கும் தரவரிசையை வைத்து எங்களால் ஒரு வேளை சாப்பிடக்கூட முடியாது சார்...ஆனால், எங்கள் பதிவுகளை வைத்து  நீங்க ஒரு ஹோட்டலை வாங்கும் அளவிற்கு சம்பாதிக்க முடியும்.

எங்கள் பதிவுகளில் யாரேனும் ஒருவர் அனானியாக வந்து ஆபாசமாகவும் அருவருக்க தக்கதாகவும் பின்னூட்டமிட்டால், அந்த பின்னூட்டங்களுக்கு நாங்கள் தான் பொறுப்பு என்று குற்றம்சாட்டி எங்கள் பதிவுகளை தமிழ்மணத்திலிருந்து நீக்கும் உங்கள் நிர்வாகிகள், இப்போது பெயரிலியாகிய உங்கள் நிர்வாகி டெர்ரர்கும்மி தளத்தில் எடுத்த பின்னூட்ட வாந்திக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?.

இவ்வளவு நடந்தபின்னும் அந்த பெயரிலி தமிழ்மணம் நிர்வாகக்குழுவில் இல்லை என்று பொறுப்பில்லாமல் கூறி நழுவமுடியாது. உங்கள் பிரதிநிதி என்று சொல்லித்தானே பின்னூட்ட வாந்தி எடுத்திருக்கிறார் அவர். உங்கள் மின்னஞ்சலில் இருந்துதானே பதிவர்களை நீக்குவதாக மிரட்டல் போயிருக்கிறது? அத்தனையும் அந்த பெயரிலி என்ற ரமணீதரன் தானே அனுப்பியிருக்கிறார்?அப்புறம் எப்படி அவர் தமிழ்மணத்தில் இல்லாமல் இருப்பார்? அல்லது அவர் உங்கள் மின்னஞ்சல் ID-யை ஹேக் செய்து விட்டாரா?

அவர் எடுத்த அத்தனை பின்னூட்ட வாந்திகளுக்கும் தமிழ்மணமே பொறுப்பு. இதற்கான பதிலை சொல்லுங்கள் தமிழ்மணம் நிர்வாகிகளே....

நன்றி....

-இப்படிக்கு-
நீங்கள் தமிழ்மணத்திலிருந்து நீக்கிவிட்டதால் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவிக்கும் ஒரு அப்பாவி பதிவர்.

முக்கிய அறிவிப்பு: நம் பதிவுலக நண்பர்களுக்கும், தமிழ்மணம் திரட்டிக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையில் நான் என் பதிவுலக நண்பர்களின் பக்கமே நிற்க விரும்புகிறேன். அதனால், இன்றுமுதல் தமிழ்மணம் வாக்குப்பட்டையை என் பதிவுகளிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கிறேன். இனி, என் பதிவுகள் தமிழ்மணத்தில் வராது. இது தற்காலிகமா? நிரந்தரமா என்று தமிழ்மணம் கொடுக்கும் விளக்கங்களை பொருத்தே அமையும்.
-----------------------------
படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

அண்ணா.தி.மு.க-வை எம்.ஜி.ஆர்.,ஆரம்பித்த வரலாறுPost Comment

இதையும் படிக்கலாமே:


30 comments:

 1. பகிர்வுக்கு நன்றி சகோ

  //நீங்கள் கொடுக்கும் தரவரிசையை வைத்து எங்களால் ஒரு வேளை சாப்பிடக்கூட முடியாது சார்...ஆனால், எங்கள் பதிவுகளை வைத்து நீங்க ஒரு ஹோட்டலை வாங்கும் அளவிற்கு சம்பாதிக்க முடியும்.//

  இந்த பதிவில் உங்களின் மனவேதனையை முழுமையாக அறிகிறேன் சகோ.

  ReplyDelete
 2. ///-இப்படிக்கு-
  நீங்கள் தமிழ்மணத்திலிருந்து நீக்கிவிட்டதால் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவிக்கும் ஒரு அப்பாவி பதிவர்///

  எனக்கும் இதே நிலமைதான் சார்.. இது வர தமிழ்மணம் புண்ணிய்த்துல எங்க பொழப்பு ஓடிச்சு...
  இனிமே எங்க பாடு திண்டாட்டம்தான்..

  ReplyDelete
 3. //ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்....தமிழ்மணத்தை வைத்து பதிவர்கள் இல்லை....பதிவர்களை வைத்துதான் தமிழ்மணம் திரட்டி.//

  சரியான சாட்டையடி நண்பரே

  பதிவர்கள் பலரும் தமிழ்மணத்தை விட்டு வெளியே வந்தால்தான் உண்மை நிலை அவர்களுக்கு புரியவரும்.

  நான் காலையிலேயே வெளியேறி விட்டேன்.தமிழ்மணத்தில் இனி இணைய போவதும் இல்லை இணைக்கபோவதும் இல்லை..வேண்டாம் இந்த மானம் கெட்ட பொழப்பு..
  என் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்தால்தான் பலர் படிப்பாங்க என்றால் அப்படி ஒரு கேவல பொழப்பு எனக்கு வேண்டாம்

  நன்றியுடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 4. Click the link below and read.

  1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...

  2.தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.

  3.தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!

  4.தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

  5.தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!

  6.தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?

  7.தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..

  8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க

  9.மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

  10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?

  11.தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா

  12.அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >

  13.தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???

  14.தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்

  15.தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!

  16.விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

  17.தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

  18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...

  19.தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்

  20.தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!

  21.யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

  22.பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

  23.தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?

  24.சீ தமிழ் மனமே ..

  25.தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?

  ReplyDelete
 5. பெயரிலி ஒரு தரங்கெட்ட மனிதர் கஸாலி...உங்கள் கேள்விகள் நியாயமானவை.


  மத சம்பந்தப்பட்ட பதிவுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ்மணம், இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

  ReplyDelete
 6. இந்த மாதிரி ஆட்களும் தரும் ரேங்க்கையா நாம் தலையில் தூக்கி வைத்து ஆடினோம்?

  ReplyDelete
 7. கடை ஓனரைக் காணோமே...

  ReplyDelete
 8. நீங்கள் கொடுக்கும் தரவரிசையை வைத்து எங்களால் ஒரு வேளை சாப்பிடக்கூட முடியாது சார்...ஆனால், எங்கள் பதிவுகளை வைத்து நீங்க ஒரு ஹோட்டலை வாங்கும் அளவிற்கு சம்பாதிக்க முடியும்./////


  நானும் தரவரிசைக்கு ஆசைப்பட்டேன் எண்டு நினைக்கும் போது கேவலமா இருக்கு

  ReplyDelete
 9. நான் ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 10. நம்முடைய பலத்தை காட்டுவோம்...

  பதிவர்கள் அடிமைகள் அல்ல என்பதை உணர்த்த வேண்டிய தருணம் இது

  ReplyDelete
 11. என்கண்டனகங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்கிரேன்.

  ReplyDelete
 12. /////நீங்கள் இல்லாமல் எங்களால் ஹிட்ஸ் கொடுக்கமுடியும். எங்களை போன்ற பதிவர்கள் இல்லாமல் உங்களால் பத்து பைசா கூட சம்பாதிக்க முடியாது. எங்களை வைத்துதான் உங்களுக்கு விளம்பரம், வருமானம் எல்லாம் என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் கொடுக்கும் தரவரிசையை வைத்து எங்களால் ஒரு வேளை சாப்பிடக்கூட முடியாது சார்...ஆனால், எங்கள் பதிவுகளை வைத்து நீங்க ஒரு ஹோட்டலை வாங்கும் அளவிற்கு சம்பாதிக்க முடியும்.//////

  செம செம....

  ReplyDelete
 13. //////எங்கள் பதிவுகளில் யாரேனும் ஒருவர் அனானியாக வந்து ஆபாசமாகவும் அருவருக்க தக்கதாகவும் பின்னூட்டமிட்டால், அந்த பின்னூட்டங்களுக்கு நாங்கள் தான் பொறுப்பு என்று குற்றம்சாட்டி எங்கள் பதிவுகளை தமிழ்மணத்திலிருந்து நீக்கும் உங்கள் நிர்வாகிகள், இப்போது பெயரிலியாகிய உங்கள் நிர்வாகி டெர்ரர்கும்மி தளத்தில் எடுத்த பின்னூட்ட வாந்திக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?.///////

  அப்படி போடுங்க.....

  ReplyDelete
 14. சரியான பதிலடி..

  ReplyDelete
 15. சலாம் சகோ.கசாலி...

  ஆணவம், திமிர், அகந்தை, மண்டைகனம், கர்வம், சர்வாதிகாரம், ஏமாற்றுவித்தை, திருட்டுத்தனம், பொய், பித்தலாட்டம் அனித்தும் அவர்களிடம் இருப்பதால்... இனி... தமிழ்மணம் நமக்கு தேவை இல்லை. அவர்களுக்குத்தான் நாம் தேவை.

  இது அந்த மரமண்டைகளுக்கு உங்கள் மரண அடி பதிவை படித்தால் கூட விளங்குமா என்று எனக்கு நம்பிக்கை வர வில்லை.

  எனவே...

  இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். இவர்களை ஒட்டுமொத்தமாக அனைத்து பதிவர்களும் புறக்கணிப்போம்.

  பயணிகளும்.. பேருந்துகளும் இல்லாமல் ஒரு பஸ் ஸ்டாண்டு... நடத்திக்கொள்ளட்டும்.

  ReplyDelete
 16. தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.
  பதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா?

  ReplyDelete
 17. 2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

  1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

  வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

  SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

  2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

  ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

  ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

  Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

  3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
  மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

  உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

  இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

  SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

  ReplyDelete
 18. எனது நண்பர் நீங்களும் இணைய தளத்துக்கு வாருங்கள் என்றபோது,சந்தோசப்பட்டேன் இப்போது,ஏன் வந்தேன் என்று வருந்துகிறேன்.தமிழ்மணம் சர்ச்சைகள் வருத்தம் தருகிறது. நல்ல மட்டுக்கு ஒருசூடு!

  ReplyDelete
 19. தமிழ்மணமே மன்னிப்புகேள்


  தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

  தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்
  http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

  ReplyDelete
 21. ஆகா............அரசியல் சமூகம் என எங்கு நோக்கினாலும் கலவரம் பதிவுலகிலுமா?

  ReplyDelete
 22. ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....(நன்றி ரமேஷ்)

  எனக்கு இது தான் ஞபாகம் வந்தது

  ReplyDelete
 23. உங்கள் கோபத்தின் நியாங்களை தமிழ்மணம் புரிந்து பதில் தரும் என நம்புகிறேன் .

  ReplyDelete
 24. நல்லா கேட்டீங்க அண்ணே

  ReplyDelete
 25. /////நீங்கள் இல்லாமல் எங்களால் ஹிட்ஸ் கொடுக்கமுடியும். எங்களை போன்ற பதிவர்கள் இல்லாமல் உங்களால் பத்து பைசா கூட சம்பாதிக்க முடியாது. எங்களை வைத்துதான் உங்களுக்கு விளம்பரம், வருமானம் எல்லாம் என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் கொடுக்கும் தரவரிசையை வைத்து எங்களால் ஒரு வேளை சாப்பிடக்கூட முடியாது சார்...ஆனால், எங்கள் பதிவுகளை வைத்து நீங்க ஒரு ஹோட்டலை வாங்கும் அளவிற்கு சம்பாதிக்க முடியும்.//////

  மிகச் சரி

  ReplyDelete
 26. நகைச்சுவை என்பது வேறு, அடுத்தவர் மனதை, அதுவும் முன்பின் தெரியாதவர் மனதை காயப்படுத்துவது என்பது வேறு. கேலியும் கிண்டலுமாக, பலநேரங்களில் ஆபாசமான வார்த்தைகளையும் மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி சிலர் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

  தனது முகத்தையும் முகவரியையும் மறைத்துக்கொள்ள முடியும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா?

  இப்படியொரு சிக்கல் ஏற்பட்டது வியப்பளிக்கக் கூடியதாக இல்லை. இது ஒருவகையான "பட்டாம்பூச்சி விளைவு": http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

  தமிழ் மணத்திற்கு பயோடேட்டா வெளியிட்ட வகையில் - தொடர் விளைவுகள் நிகழ்ந்துள்ளன. எது எப்படியோ "டெர்ரர் கும்மி: இது ரத்த பூமி...!" என்கிற அவர்களது தலைப்பை காப்பாற்றி விட்டார்கள்.

  ReplyDelete
 27. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

  http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.