என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, October 14, 2011

10 சிவாஜி ஏன் தி.மு.க.,விலிருந்து விலகினார்?.


எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் சேர்ந்து வளர்ந்த வரலாறு என்ற பதிவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திருப்பதி போய்வந்த சர்ச்சையால் தி.மு.க.,வை விட்டு விலகினார் என்று குறிப்பிட்டிருந்தேன். அது எம்.ஜி.ஆரை பற்றிய பதிவென்பதால் சிவாஜியை பற்றி மேலோட்டமாகவே குறிப்பிட்டிருந்தேன். அதை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் என்று ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அந்த பின்னூட்டத்திற்கான பதில்தான் இது....

1957-ஆம் ஆண்டு, பெரும் புயலில் சிக்கியது. தி.மு.க.,சார்பில் புயல் நிவாரண நிதி திரட்டுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் கோரிக்கை விடுத்தார். அண்ணாவின் கோரிக்கையை ஏற்று நிதி திரட்டும் பணியில் நடிகர்கள் ஈடுபட்டனர். அதில் சிவாஜியும் ஒருவர். நிறைய நிதி வசூலானது.

அதிக நிதி வசூலித்தவர்களுக்கு பாராட்டுவிழாவும் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள சிவாஜிக்கு அழைப்பில்லை. அதே நேரம், அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு எம்.ஜி.ஆர்., அழைக்கப்பட்டிருந்தார். அதிக நிதி வசூலித்து தந்ததாக எம்.ஜி.ஆரை அண்ணாவும் மற்றவர்களும் பாராட்டினார்கள்.

என்னை ஒதுக்கவேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆரை பாராட்டியிருக்கிறார்கள், என்னை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறார்கள் என்று அதிருப்தி தெரிவித்தார் சிவாஜி.
கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்த சிவாஜியை, அவருக்கு தி.மு.க.மீதிருந்த அதிருப்தியை பயன்படுத்தி அந்த நேரத்தில் அவரை திருப்பதி அழைத்து சென்று சிறப்பு தரிசனம் செய்யவைத்தார் இயக்குனர் பீம்சிங்.

 நாத்திகரான சிவாஜி திருப்பதிக்கு சென்றதை அறிந்த பத்திரிகையினர்  நாத்திகரான சிவாஜி ஆத்திகராக மாறினார் என்று செய்தி வெளியிட்டனர். திருப்பதியிலிருந்து சென்னை திரும்பும் வழிகளில் சுவரெங்கும் திருப்பதி கணேசா கோவிந்தா..கோவிந்தா என்று எழுதியிருந்தனர். இதை கவனித்த சிவாஜி மனம் வேதனை அடைந்தார். மேலும், சிவாஜியின் போஸ்டர்களில் சாணி அடித்த செய்தியும் அவரின் கவனத்திற்கு வந்தது. கடுப்பாகிவிட்டார்.


இனிமேலும், பொறுமையாக இருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவுசெய்து உடனே காமராஜரை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வினர்தான் என்னை தூக்கிக்கொண்டு போய் காங்கிரசில் போட்டனர் என்று பேட்டியும் அளித்தார்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. ஒரு சிறந்த நடிகனுக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லையே என்பது வேதனை தான்.

  ReplyDelete
 2. பாவம்... அரசியலில் நடிக்கத் தெரியாத அப்பாவிதான் சிவாஜி...

  ReplyDelete
 3. பாவம்... அரசியலில் நடிக்கத் தெரியாத அப்பாவிதான் சிவாஜி...

  ReplyDelete
 4. காமராஜர் மேல் பக்தியே உண்டு சிவாஜிக்கு. கடைசிவரை காமராஜரைப் புகழ்ந்து கொண்டே வாழ்ந்தார் சிவாஜி..காங்கிரஸ்க்குப் போனதில் இழப்பு தான் அவருக்கு.

  ReplyDelete
 5. உணர்ச்சி வசப்படுவது அரசியலில் வேலைக்காகது எனபதருக்கு சரியான உதாரணம்..பகிர்வுக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 6. அன்பின் கஸாலி - சிவாஜியின் அரசியல் வாழ்க்கை வெற்றி பெற வில்லை - ம்ம்ம்ம்

  ReplyDelete
 7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!!

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. ஒருவரை வெளியே அனுப்ப முடிவு செய்து விட்டால்அவர்களாகவே வெளியேறும் படி செய்வதில்திமுக விற்கு நிகர் கிடையாது.

  ReplyDelete
 10. முன்னரே அறிந்த செய்திதான் என்றாலும் சுவை பட சொன்னீர்கள் அரசியலில் எந்த ஒரு கட்சியும் யோக்கியமானது இல்லை என்பதே உண்மை.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.