என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, October 05, 2011

13 இன்னும் போதை தெளியாத கேப்டன் விஜயகாந்த்.சங்கரன் கோவில் பிரச்சாரத்திற்கு  நேற்று மதியம் வரவேண்டிய  விஜயகாந்த், இரவு தான் வந்தாராம். இதனால், அனுமதி மறுத்த போலீசார் விஜயகாந்த் பேசவிருந்த மைக்கை பிடிங்கிட்டு போய்ட்டாங்களாம். ஆனால், சளைக்காத கேப்டன் இன்னொரு மைக்க வாங்கி

சங்கரன் கோவில் போலீஸ் என்ன புதுசா, வழியில நான் எத்தனை போலீசை பார்த்தவன் தெரியுமா?  நான் ஒரு எதிர்க்கட்சி தலைவர்.  எனக்கு கொடுக்க வேண்டிய முழு பாதுகாப்பை நீங்க  தரணும்.

இது உங்களுக்கு தெரியாதா?  இதென்ன புதுசா ஆட்டம் போடுறீங்க.  குறிப்பிட்ட நேரம் தவறி வந்தாலும்,  தேர்தல் நேரம் அனுமதியோ, முன் அனுமதியோ பெறணும் என்கிற அவசியம் இல்ல.

நான் விபரம் தெரியாதவன்னு நினைச்சீங்களா?  மக்களைக்காக்க வேண்டியதுதான் போலீசின் வேலை.  அதை விட்டுட்டு இந்த மாதிரி செய்யச்சொல்லியாரேனும் சொன்னாங்களா?

முன்னால் நாங்க ஒரு எம்.எல்.ஏவா இருந்தோம்.  இப்ப 27 எம்.எல்.ஏவாக இருக்குறோம்.   நாளைக்கு நாங்கதான்.  இதை நல்லா ஞாபகம் வச்சுக்குங்க. உங்ககிட்ட நான் பேசனும்னு அவசியமில்ல.  தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்கிட்ட நான் பேசிக்குறேன்.   உங்க நண்பன்னு  காவல்நிலையத்தில்  போர்டு போட்டிருக்கீங்களே.  முதல்ல அத தூக்கி தூர வீசுங்க
”ன்னு பேசினாராம்.

சரி இப்ப அதுக்கென்ன எங்கிறீங்களா? விஷயத்திற்கு வாரேன். உள்ளாட்சி மன்றத்தேர்தலுக்கான அதிகாரி பிரவீன்குமார் இல்லை. சோ.அய்யர். இதுகூட தெரியாத கேப்டன் இப்ப எதிர்கட்சித்தலைவரு....என்ன கொடுமை சார் இது?

அதுசரி, ஏற்கனவே அவரு கட்சியோட தர்மபுரி வேட்பாளர் பாஸ்கர்  பேரையே பாண்டியன்னு சொன்னாரு நம்மாளு,  என்பேரு பாண்டியன் இல்லை பாஸ்கருன்னு  திருத்திசொன்ன வேட்பாளரை நடு மண்டையில நங்கு நங்குன்னு குட்டி மஹாராஜன் ஆக்கினாரு. இப்போ அய்யரு பேரை மாத்தி பிரவீன் குமாருன்னு சொல்லிருக்காரு..
நல்லவேளையா அய்யர் அங்கில்லை. இருந்திருந்தால் என் பேரு பிரவீன்குமாரு இல்லை அய்யருன்னு சொல்லி கேப்டன் கிட்ட அடி வாங்கி மஹாராஜன் ஆகிருப்பாரு.

இவ்வளவு விபரம் தெரிஞ்ச கேப்டன் எதிர்கட்சி தலைவரா மட்டுமல்ல....பிரதமராகவே தகுதியானவருதான்.
விளங்கிரும் போங்க....

சரி,  யாராவது கேப்டன்கிட்ட எடுத்து சொல்லி மஹாராஜன் ஆக ரெடியா இருக்கீங்களா?
எதுக்கும் நீ எச்சரிக்கையா இரு...உன்னை மஹாராஜன் ஆக்கினாலும் ஆகிடுவாரு கேப்டன்னு  அங்கே யாருப்பா குரல் கொடுக்கறது?

வந்தது வந்துட்டீங்க....அப்படியே இதையும் படிச்சிடுங்க.....

ஓட்டைவாயனும் உளறுவாயனும்......Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. அது சரி - என்ன செய்யறது .......

  ReplyDelete
 2. காமெடில கேப்டனை மிஞ்ச ஆள் கிடையாது.

  ReplyDelete
 3. // நான் விபரம் தெரியாதவன்னு நினைச்சீங்களா? //

  சிரிப்புதான் வருது Brother

  ReplyDelete
 4. எதுக்கும் நீங்க எச்சரிக்கையா இருங்க ...உங்களையும் மஹாராஜன் ஆக்கினாலும் ஆக்கிடுவாரு கேப்டனு!ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 5. செங்கோவி said... காமெடில கேப்டனை மிஞ்ச ஆள் கிடையாது.///பாவம் கேப்டன்!

  ReplyDelete
 6. எல்லாம் உள்ள போன கேப்டன் பண்ற வேலை ....(அதான் கேப்டன்???)

  ReplyDelete
 7. வாழ்க சனநாயகம்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. திருப்பூரில் பேசினார் பாருங்க ஒரு பேச்சு...
  கேப்டன் டிவி யில் நேரடி ஒளிபரப்பு..
  நம்ம காந்தி கஷ்டப்பட்டு நம்மை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிடம் இருந்து சுதந்திரம் வாங்கி குடுத்தார் அப்படின்னு சொன்னார்...
  என்னடா இது கொடுமை என்று உத்து கேட்டா, அந்த நேரம் போட்டாங்க பாருங்க ஒரு மியூசிக்... முடியல
  ஆனா நல்லா பொழுது போகுது இல்ல

  ReplyDelete
 9. :-)) சிரிச்சுட்டு தலையெழுத்தை நொந்துக்கணும்

  ReplyDelete
 10. :-)) சிரிச்சுட்டு தலையெழுத்தை நொந்துக்கணும்

  ReplyDelete
 11. அவரது சினிமாவுக்கு வசனம் எழுதிய யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டால்தான் என்ன ...அக்காங்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.