என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, November 23, 2011

20 இன்றைய சூழ் நிலைக்கு இதுதான் சரியா இருக்குமோ?ஒரு ஊர்ல ஒரு ராஜா...ராஜான்னதும் ராஜ்ஜியம் இழந்து திகாரில் களிதின்னும் ராஜாவ நினைக்காதீங்க.....
நான் சொல்ற ராஜா நாட்ட ஆண்ட ராஜா.......அவரு மக்களுக்கு நல்லதும் செஞ்சாரு...கெட்டதும் செஞ்சாரு.....மக்கள்ட்ட நூத்துக்கு இருபது ரூவான்னு வரி போட்டாரு....

மக்கள்லாம் கதறுனாங்க.....அய்யோ...அம்புட்டு வரிய எங்களால கட்ட முடியாது....கொஞ்சம் கொறச்சுக்கங்கன்னு....
ராஜா யாருக்கும் அசஞ்சு கொடுக்கல.....

குடிமக்கள் எல்லோரும் அவர திட்டி தீர்த்தாங்க....இந்த சனியன் பிடிச்ச மன்னன் எப்பத்தான் தொலைவானோ....நமக்கெல்லாம் எப்பத்தான் விடிவுகாலம் வருமோன்னு கடவுள வேண்டினாங்க...

ஒரு நாளு பக்கத்து நாட்டு ராஜா அந்த நாட்டுமேல படையெடுத்து போர் தொடுத்து அந்த நாட்ட கைப்பற்றினான். மக்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்.அப்பாடா....சனியன் பிடிச்ச ராஜா தொலஞ்சான்.இனிமேல நிம்மதியா இருக்கலாம்ன்னு பட்டாசு வெடிச்சு  கொண்டாடுனாங்க.....

புது ராஜாவும்  பதவியில் உக்காந்தாரு .  கொஞ்ச நாளு சந்தோசமா மக்களை வச்சுருந்தாரு.. மக்களும் அடடா நம்ம புது ராஜா  எம்புட்டு நல்லவரா  இருக்காருன்னு நெனைச்சுகிட்டாங்க....எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்....

இப்ப புது ராஜா  ஒரு அறிவிப்பு செஞ்சாரு. இந்த நாட்ட நிர்வகிக்க நிதி இல்லாததால எல்லோரும் நூத்துக்கு அம்பது சதவீதம் வரி கட்டனும்...யாரும் கட்டாம விட்டா அவங்க சிறைத்தண்டனை பெறுவாங்கன்னு பறை போட சொல்லிட்டாரு...

தலையில தூக்கிவச்சு கொண்டாடுன மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. சே பழைய ராஜா எம்புட்டு நல்லவரா இருந்தாரு இந்த புது ராஜா  மோசமானவரா இருக்காரேன்னு திட்டினாங்க....ரோட்டுல எறங்கி போராடுனாங்க....ஆனா புது ராஜா  அசைஞ்சே கொடுக்கலியே...

மறுபடியும் மக்கள்  கடவுள்ட்ட வேண்டினாங்க....கடவுளே இந்த சனியன் புடிச்ச ராஜா  ஒழியனும் பழைய படி எங்க நாட்ட பழைய ராஜாவ ஆளனும்,  இவருக்கு  அவரு எவ்வளவோ தேவலைன்னு.....

இது ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு
டிஸ்கி: இந்த கதை என் சின்ன வயசுல படிச்சது....அத....நம்ம பாணியில கொஞ்சம் மாத்தி சொல்லிருக்கேன்....
 டிஸ்கி: இந்த கதைக்கு எதுக்கு அரசியல்வாதிகள் படம்ன்னு கேட்பவர்களுக்கு.....சும்மா ஒரு எ ஃபெக்டுக்குத்தான்  


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 comments:

 1. ரசிக்கும்படியா இருந்தது

  ReplyDelete
 2. மாற்றம் தேவை என்று ஜெக்கு வாக்களித்த மறத்தமிழன் ஜெவை நோக்கி, "நீங்க செய்த அக்கிரமத்துக்கும் அநியாயத்துக்கும் பாவத்துக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கப்போகிறது"
  இதைக் கேட்ட ஜெயின் பதில், "அக்கிரமம், அநியாயம் மற்றும் பாவம் கடந்த முறை நடந்த மைனாரிட்டி ஆட்சிதான். எனவே எங்கள் ஆட்சிதான் தண்டனை"

  ReplyDelete
 3. இன்னைக்கு நம்ம தமிழகத்தில் நடப்பது இதுதாங்க...

  ReplyDelete
 4. கொஞ்சமில்ல... படங்கள் ரொம்பவே எஃபெக்டோட இருக்கு... பாவம் ஜனங்களுக்கு இந்த ரெண்டு ராஜாக்களை விட்டா வேற மூணாவது ராஜாவை (கதைலகூட) யோசிக்கத் தோணலையே... என்ன பண்ண?

  ReplyDelete
 5. கொஞ்சமில்ல... படங்கள் ரொம்பவே எஃபெக்டோட இருக்கு... பாவம் ஜனங்களுக்கு இந்த ரெண்டு ராஜாக்களை விட்டா வேற மூணாவது ராஜாவை (கதைலகூட) யோசிக்கத் தோணலையே... என்ன பண்ண?

  ReplyDelete
 6. ஸலாம் சகோ.கஸாலி,

  //புது ராஜாவும் பதவியில் உக்காந்தாரு . கொஞ்ச நாளு சந்தோசமா மக்களை வச்சுருந்தாரு........எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்....//

  ஹலோ... என்ன சகோ..? அந்த ராஜா காலத்திலேயுமா உள்ளாட்சித்தேர்தல் வந்தது..?

  கதையில் லாஜிக் இடிக்குதே..!?!?!?

  ReplyDelete
 7. Blogger ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

  ஸலாம் சகோ.கஸாலி,

  //புது ராஜாவும் பதவியில் உக்காந்தாரு . கொஞ்ச நாளு சந்தோசமா மக்களை வச்சுருந்தாரு........எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்....//

  ஹலோ... என்ன சகோ..? அந்த ராஜா காலத்திலேயுமா உள்ளாட்சித்தேர்தல் வந்தது..?

  கதையில் லாஜிக் இடிக்குதே..!?!?!?

  ராஜராஜசோழன் காலத்திலேயே குடவோடை மூலம் தேர்தல் நடத்தும் முறை அறிமுகமாகிவிட்டது

  ReplyDelete
 8. எல்லா ராஜாக்களுமே இப்படித்தானோ அவங்களும் தான் என்ன பண்ணுவாங்க?

  ReplyDelete
 9. அருமையா தான் எழுதுறீங்க நாசூக்கா ...

  ReplyDelete
 10. அந்த புகைப்படம் பற்றி நான் கருத்து சொல்லவிரும்பவில்லை.

  ReplyDelete
 11. சும்மா ரீல் விடாதீங்க,சார்!பேரூந்துக் கட்டண உயர்வைத் தானே கிண்டலடிச்சிருக்கீங்க?

  ReplyDelete
 12. புதுசா வந்தவங்க ராணி மகாராணியாச்சே... ராஜான்னு எழுதியிருக்கீங்க...

  ReplyDelete
 13. இந்த மாதிரி அம்மையார் படம் இன்னும் நாலைஞ்சு போடுங்க... வர்ற வாரம் பிரபா ஒயின்ஷாப்ல ஜொள்ளு விட்டுறலாம்...

  ReplyDelete
 14. ஹா..ஹா..ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே...


  சைதை அஜீஸின் கமெண்ட்டும் சூப்பர்.

  ReplyDelete
 15. மிகச்சரியாச் சொன்னீங்க....
  ஒரு பட்டனை அழுத்தியதின் பலனை இன்று அனுபவிக்கிறோம்.
  இன்னும் என்னென்ன காட்சி மாற்றங்களோ..

  ReplyDelete
 16. ரெண்டு ராஜாவும் தேவையில்ல மக்களே ஆன்டுகிடட்டும்யா

  ReplyDelete
 17. நண்பரே.. வாசித்தேன்.. ஒன்று போல்தான் தோன்றுகிறது.. அந்த கதயை என் பக்கத்து வீட்டு பெரியவர் ஒருவர் கூற கேட்டேன்.. அவருக்கு படிப்பறிவு கிடையாது என்பதால் வாய் வழியாக கேட்ட கதை என்று சொன்னார். நன்றாக இருக்கிறது என்பதால் அதை பதிவிட்டேன்..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.