என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, November 26, 2011

7 வராத மின்சாரத்திற்கு இவ்வளவு கட்டணம்.....தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (மின்வாரியம்) சமர்ப்பித்த புதிய மின் கட்டணம் குறித்த மனு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை ஆணையம் ஏற்றுக்கொண்டது.

இந்த நிகழ்ச்சியில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் எஸ்.கபிலன், மின்வாரிய தலைவர் ராஜீவ்ரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பின்னர் ஆணைய தலைவர் கபிலன் செய்தியாளர்களிடம்,

’’மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சமர்ப்பித்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் விவரம் ஆங்கிலத்தில் மின்வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்தில் இன்றே வெளியிடப்படும். 4 வாரங்களுக்கு இது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை ஆணையத்தில் பதிவு செய்யலாம்.

அடுத்த மாதம் 2 தமிழ் மற்றும் 2 ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படும்.

அதன் பின்னர் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும்.

இதிலும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறலாம். தேவைப்பட்டால் இந்த இடங்கள் அதிகப்படுத்தப்படும்.

மின்கட்டண உயர்வு குறித்து 90 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும்.


வருடத்திற்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்’’ என்று  கூறினார்.


மின்சார வாரியம் பரிந்துரைத்து இருக்கும் புதிய கட்டண விகிதம் :தற்போது வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 50 யூனிட் வரை மின் கட்டணமாக யூனிட்டுக்கு 65 பைசா வசூலிக்கப்படுகிறது. 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை 75 பைசா வசூலிக்கப்படுகிறது. இனி 100 யூனிட் வரை ஒரே கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.50 வீதம் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


2 மாதங்களுக்கு 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு முதல் 50 யூனிட்டுகளுக்கு தற்போது 75 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரூ.2 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை தற்போது 85 பைசாவாக இருக்கும் கட்டணத்தை ரூ.2 ஆகவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை தற்போது ரூ.1.50 ஆக இருக்கும் கட்டணத்தை 2 ரூபாயாகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


201 யூனிட் முதல் 500 ïனிட் வரை உபயோகப்படுத்துபவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.2.20 கட்டணத்தை ரூ.3.50 ஆகவும், 501 யூனிட் முதல் 600 ïனிட் வரை வசூலிக்கப்படும் ரூ1.80 கட்டணத்தை ரூ.5.75 ஆகவும், 601 ïனிட்டுக்கு மேல் வசூலிக்கப்படும் ரூ.4.05 கட்டணத்தை இனி ரூ.5.75 ஆகவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.


வீடுகள் தவிர மற்ற நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள கட்டண விவரம் :


(தற்போது ஒரு யூனிட்டுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.5 (ரூ.4.80)

சினிமா தியேட்டர்கள்- யூனிட்டுக்கு ரூ.7 (ரூ.5.50)


தனியார் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.8.50 (ரூ.5.50)


பொது வழிபாட்டு தலங்கள் -120 யூனிட் வரை ரூ.2.50 (ரூ.1.50), 120 ïனிட்டுக்கு மேல் ரூ.5 (ரூ.3)


குடிசை மற்றும் குறுந்தொழில்கள்- 500 யூனிட் வரை ரூ.3.50 (ரூ.1.80), 501 முதல் 1500 யூனிட் வரை ரூ.4 (ரூ.2.70), 1500 யூனிட்டுக்கு மேல் ரூ.4 (ரூ.3.50)


விசைத்தறிகள்- 500 யூனிட் வரை இலவசம். 501 யூனிட் முதல் 1000 யூனிட் வரை ரூ.4 (ரூ.1.25), 1001 யூனிட் முதல் 1500 யூனிட் வரை ரூ.4 (ரூ.2.25), 1501 யூனிட்டுக்கு மேல் ரூ.4 (ரூ.2.50)


தொழிற்சாலைகள்- 1500 யூனிட் வரை ரூ.5.50 (ரூ.4), 1500 ïனிட்டுக்கு மேல் ரூ.5.50 (ரூ.5)

விவசாய இணைப்புக்கு ஆண்டு கட்டணம்- ரூ.1750 (ரூ.250)


வர்த்தக நிறுவனங்கள்- 100 ïனிட் வரை ரூ.7 (ரூ.4.30), 200 ïனிட் வரை ரூ.7 (ரூ.5.30), 201 ïனிட்டுக்கு மேல் ரூ.7 (ரூ.6.50)  தற்காலிக இணைப்புகள்- ரூ.10.50 (ரூ.10.50)


தொழிற்சாலைகள்- யூனிட்டுக்கு ரூ.5 (ரூ.4)

ரெயில்வே மின் இணைப்பு- யூனிட்டுக்கு ரூ.5 (ரூ.4)

அரசு மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.4.50 (ரூ.4)

சினிமா தியேட்டர்கள், ஸ்டூடியோக்கள்- யூனிட்டுக்கு ரூ.6.80 (ரூ.4.50)

தனியார் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.5.50 (ரூ.4.50)

வழிபாட்டு தலங்கள்- யூனிட்டுக்கு ரூ.4.50 (ரூ.2.80)

வர்த்தக நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.6.80 (ரூ.5.80)

இறவை பாசனம்- யூனிட்டுக்கு ரூ.3.50 (50 பைசா)


மேற்கண்டவாறு கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணத்தில் இரு பிரிவிலுமே அரசு வழங்கும் மானியம் கழித்து கூறப்பட்டுள்ளது.

இது ஒரு பத்திரிகை செய்தி. 
செய்தி என்ற அடிப்படையில் இது பகிரப்படுகிறது. நன்றி: தமிழக பத்திரிகைகள்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. இதோட முடியுதா இன்னும் ஏதாவது ஏத்தப்போறாங்களா...

  ReplyDelete
 2. வெளி நாடுகளில் ஆண்டுக்கு ஒரு தடவை அல்ல,சமயத்தில் இரு தடவைகள் கூட மின் கட்டணம் உயர்த்துவார்கள்!கூடவே பேரூந்து,தொடரூந்துக் கட்டணங்கள் ஆண்டுக்கொரு தடவை உயர்த்தப்படுகின்றன!சம்பளம் ஒன்று புள்ளி ஐந்து விகிதம் கூட்டுவார்கள்!அது விலை,மற்றும் கட்டண உயர்வுகளை சரி செய்து விடும்,ஹி!ஹி!ஹி!!!

  ReplyDelete
 3. தலைப்பிலேயே ஒரு விசயத்தை விதைக்கிறீர்களே..

  ReplyDelete
 4. நல்லாவே ஷாக் அடிக்குது.

  ReplyDelete
 5. அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.