என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, November 14, 2011

7 கலைஞரும்-எம்.ஜி.ஆரும் ஆடிய நீயா? நானா?


முந்தைய பாகங்கள: 1 , 2  


பாநாயகர் கே.ஏ.மதியழகனை தன் கைக்குள் போட்டுக்கொண்டு எம்.ஜி.ஆர்.ஆடிய விளையாட்டை ரசிக்காத கலைஞர் ஒரு அதிரடி முடிவு எடுத்தார்.

மதியழகன் டிசம்பர்-5 ஆந்தேதிக்கு சபையை ஒத்திவைத்தார். ஆனால், அதற்கு முன்னரே சபையை கூட்ட முடிவு செய்தார் கலைஞர். ஆனாலும், சபாநாயகர் சபையை ஒத்திவைத்துவிட்டால் பின்னர் சபாநாயகர் அறிவித்த தேதியில்தான் சபையை கூட்டமுடியும் என்பது விதி.

சபா மீண்டும் சபை கூடுமென அறிவித்ததோ டிசம்பர்- 5. ஆனாலும் அதுவரை பொறுக்காத கலைஞர் கவர்னரை சந்தித்தார்.  அந்தக்கூட்டத்தொடர் அன்றோடு முடிந்துவிட்டதாகவும் புதிய கூட்டத்தொடர் டிசம்பர் 2 ஆம் தேதியே கூடுமென கவர்னரையே அறிவிக்க வைத்தார்.

இதனால், கடுப்பான மதியழகன், சபையைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் சபாநாயகருக்கே உரிமையுண்டு. தம் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கவர்னர் கூட்டத் தொடரையே ரத்து செய்தது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அப்படி டிசம்பர்-2 ஆம் தேதி கூட்டப்படும் சட்டமன்றத்தில்  சபா நாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவர முடிவு செய்தது தி.மு.க. அதன்படி தீர்மானம் தயாரிக்கப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 185 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திருந்தனர். அதேநேரம், எம்.ஜி.ஆரும் கலைஞர் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர முடிவுசெய்தார்.

திட்டமிட்டது போல டிசம்பர்-2 சட்டமன்றக் கூடியது.
சபா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரினார் ஆற்காடு வீராசாமி.
185 எம்.எல்.ஏ.,க்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட மதியழகன் இனி சபா நாயகராக நீடிக்கக்கூடாது இந்த சபைக்கு விருதுநகர் சீனிவாசன் (காமராஜரை தோற்கடித்தாரே...அவருதான்) தலைமை தாங்குவார் என்று அறிவித்தார் நாவலர் நெடுஞ்செழியன்.

இத்தனைக்கு பிறகும் மதியழகன் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்திருந்ததால், அவருக்கு அருகில் மற்றொரு நாற்காலி போடப்பட்டு, அதில் துணை சபா சீனிவாசன் அமரவைக்கப்பட்டார். தி.மு.க.,மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலில் விசாரிக்க வேண்டும் என்றனர் எம்.ஜி.ஆரும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும்.
சபா மதியழகன் மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைத்தான் முதலில் விசாரிக்க வேண்டுமென கூறினர் தி.மு.க.,வினர். சபை ஒரே கூச்சலும், அமளியாகவும் இருந்தது.


எம்.ஜி.ஆரின் தீர்மானத்தை விவாதத்திற்காக எடுத்துக்கொண்டதாக அறிவித்தார் மதியழகன். எம்.ஜி.ஆரும் பேச ஆரம்பித்தார். ஆனால் மைக் துண்டிக்கப்பட்டது. ஒலிபெருக்கி இல்லாமலே பேசினார் எம்.ஜி.ஆர். கூச்சலால் அவரின் பேச்சு யாருக்கும் கேட்கவில்லை.

இன்னொருபக்கம் சபா நாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தார் துணை சபா சீனிவாசன். மீண்டும் சபையை ஒத்திவைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் மதியழகன், கூடவே எம்.ஜி.ஆரும். சட்டமன்றம் செத்துவிட்டதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர்., இனிமேல் சட்டசபைக்கு நான் வரவே மாட்டேன் என்றும் அறிவித்தார்.(சொன்னதுபோலவே தி.மு.க.,ஆட்சி முடியும் வரை அவர் சட்டசபைக்குள் நுழையவே இல்லை. பின்னர் முதல்வராகத்தான் நுழைந்தார் எம்.ஜிஆர்) அப்போது எம்.ஜி.ஆர்.,மீது செருப்பு வீசப்பட்டது. அதை பொருட்படுத்தாமல் ஏற்கனவே மதியழகன் தம்பி கே.ஏ.கிருஷ்ணசாமியின் ஏற்பாட்டில் தயாராக நின்றிருந்த காரில் மதியழகனோடு கிளம்பினார்.

எம்.ஜி.ஆரும், மதியழகனும் வெளியேறிய பின்னரும் சபையை தொடர்ந்து நடத்தினார் சீனிவாசன்.

அதன்பின் அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் டிசம்பர்-7 ஆம் தேதி கூடியது. அப்போது எம்.ஜி.ஆரால் கலைஞர்அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றை கலைஞர் கொண்டுவந்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
அந்த தீர்மனத்திற்கு ஆதரவாக 176 வாக்குகள் கிடைத்தது, எதிராக 1 வாக்குகூட கிடைக்கவில்லை. ஆம்...ஆளே இல்லாமல் டீ ஆற்றுவதுபோல எம்.ஜி.ஆரும். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் இல்லாமலே தீர்மானம் நிறைவேறியது.

சபா நாயகர் தன் கையில் இருந்தும் எதையுமே சாதிக்க முடியவில்லையே என்று அதிருப்தியின் உச்சிக்கே சென்ற எம்.ஜி.ஆர். தன் செல்வாக்கை நிருபிக்கவேண்டுமே என்று யோசித்தார். அப்போதுதான் அந்த செய்தி வந்தது.

இன்னும் வள(ரு)ம்

Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. ஹா ஹா...

  சபாஸ்.... சரியான போட்டி....

  #சரியான நடையில், பாதையில் போகிறது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அரசியல் திரில்லர்:)

  ReplyDelete
 3. மிக திரில்லிங்கா இருக்கிறது...

  ReplyDelete
 4. மது தாத்தா ஆரம்பத்தில் இருந்தே ஊழல் பேர்வழியா? அப்ப சர்தான்.

  ReplyDelete
 5. தொடர் பதிவு அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
 6. இந்த தொடருக்கான உங்கள் உழைப்பு அபாரமானது தலைவா..


  பல தெரியாத தகவல்கள் தொகுத்து ஒரு தொடர்.. ஹாட்ஸ் ஆப்..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.