என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, November 11, 2011

9 கலைஞருக்கு கெடு விதித்த எம்.ஜி.ஆர்.,
அண்ணாவின் பெயர் கட்சியிலும், அண்ணா உருவப்படம் கொடியிலும் இடம்பெற்றிருப்பதை ஆட்சேபித்து அண்ணாவின் மனைவி ராணி அம்மாள் அவர்கள் ஒரு வழக்கு தொடர்ந்தார். சில நாட்களிலேயே அந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

அதன்பின், எம்.ஜி.ஆரின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தது. தி.மு.க.,அமைச்சரவை மீது ஒரு ஊழல் பட்டியல் மனுவை முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் தயாரித்துக்கொடுக்க, எம்.ஜி.ஆரும்., கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாண சுந்தரமும் அதை எடுத்துக்கொண்டு போய் ஆளுனர் ஷாவிடம் கொடுத்தார்கள்.  ஒரு வாரத்திற்குள் அந்த மனுமீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் பந்த் நடத்தப்படும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

அரசியல் சட்டப்படி  ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய அந்த மனுவை முதலமைச்சர் கலைஞரின் பார்வைக்கு அனுப்பி, அவரின் கருத்தையும் கேட்டபின்பே அது ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்று சொன்னார் கவர்னர் ஷா. இது வேலைக்காகாது என்று முடிவுசெய்த எம்.ஜி.ஆரும்., கல்யாணசுந்தரமும்  நேரடியாக டெல்லிக்கே சென்று ஜனாதிபதியிடமே அந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனுவை கொடுக்க முன்வந்தனர். அதன்படி 1972, நவம்பர் 7-ஆந்தேதி ஜனாதிபதி வி.வி.கிரியை சந்தித்து அந்த மனுவை கொடுத்தனர்.

முதலமைச்சர் கலைஞர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் விசாரணை முடிந்து தீர்ப்புவரும்வரை கலைஞர் பதவியில் நீடிக்கக்கூடாது அதே நேரம், கலைஞர் ஆசிபெற்ற யாருக்கும் முதல்வர் பதவி தரக்கூடாது என்று சொன்னார் கல்யாணசுந்தரம்.
தமிழ் நாடு சட்டசபை கலைக்கப்படவேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், முதல்வராக கலைஞர் நீடிக்கக்கூடாது என்றார் எம்.ஜி.ஆர்.,ஆனால், இதையெல்லாம் நிராகரித்தார் கலைஞர்.

இவர்கள் கொடுத்த மனுவை பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்தார் ஜனாதிபதி வி.வி.கிரி. இந்திரா அதை கலைஞருக்கு அனுப்பி விளக்கம் கேட்டார். ஆனால், அந்த மனுக்களிலுள்ள குற்றச்சாட்டுக்களையெல்லாம் மறுத்த கலைஞர், இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள், பொய்யானவை என்று கூறினார். அந்த மனுவையும், அவரது பதிலகளையும் சட்டசபையில் சமர்பித்தார்.

இதற்கிடையே, சபாநாயகர் கே.ஏ.மதியழகனை அடிக்கடி ரகசியமாக சந்தித்தார் எம்.ஜி.ஆர்., கே.ஏ.மதியழகனும் எம்.ஜி.ஆர்.,பக்கம் சாய்ந்த்தார். அவர் அப்படி சாயவும் காரணம் இருந்தது. அண்ணா அமைச்சரவையிலும், அவர் மறைவிற்கு பின் முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் அமைச்சரவையிலும் நிதி மற்றும் வருவாய்துறை அமைச்சராக இருந்தார் மதியழகன். முந்தைய (1969-71) கலைஞர் ஆட்சியில் கே.ஏ.மதியழகனின் சகோதரர் கே.ஏ.கிருஷ்ணசாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்து காரணமாக ஒரு பிரச்சினை வந்தது. பதவியை துஷ்பிரயோகம் செய்து தன் தம்பிக்கு மதியழகன் உதவினார் என்று அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் கலைஞர். அதனால் கலைஞர் மீது அதிருப்தியில் இருந்தார் மதியழகன். கலைஞர் இரண்டாவது முறை(1971) முதல்வரானதும், மதியழகனுக்கு அமைச்சர் பதவி தராமல் சபாநாயகர் ஆக்கியிருந்தார். இது மேலும் அதிருப்தியை தந்தது அவருக்கு. இந்த அதிருப்தியை எம்.ஜி.ஆர்., சரியாக பயன்படுத்திக்கொண்டு மதியழகனை தன் பக்கம் சாய்த்தார்.

அடுத்ததாக, ஆட்சிக்கு எதிராக சென்னையில் அண்ணா.தி.மு.க.,வும், கம்யூனிஸ்டும் நடத்திய பிரமாண்டமான ஊர்வலத்தில் கலந்துகொண்டார் மதியழகன். அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய சபாநாயகர் எப்படி ஒருபக்கம் சாயலாம் என்று தி.மு.க.,வில் குரல்கள் ஒலித்தது.


இதன்பின், சட்டசபை கூடியது......
இன்றைய அமைச்சரவை நம்பிக்கை இழந்துவிட்டது. ஆகவே இந்த அமைச்சரவை நீடிப்பது சட்டவிதிகளுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார் எம்.ஜி.ஆர்.,அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் கே.ஏ.மதியழகன், எம்.ஜி.ஆரின் குற்றச்சாட்டிற்கு முதல்வரின் பதில் என்ன?...என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் சட்டசபையை கலைத்துவிட்டு மறுதேர்தலை சந்தியுங்கள். இந்த சட்டசபையை கலைக்க கவர்னருக்கு யோசனை தெரிவித்துக்கொள்கிறேன். என்று சொல்லிவிட்டு சட்டசபையை ஒத்திவைத்தார்.

சபாநாயகரை  கைக்குள் போட்டுக்கொண்ட எம்.ஜி.ஆரின் விளையாட்டை கலைஞர் ரசிக்கவில்லை. ஒரு அதிரடி முடிவை எடுத்தார். இதுவரை இந்திய சட்டசபை வரலாற்றில் அப்படி ஒரு விசித்திரம் நடந்தது இல்லை....அது.....

இன்னும் வ(ள)ரும்.....படிக்காமல் தவற விட்டவர்களுக்காக......Post Comment

இதையும் படிக்கலாமே:


9 comments:

 1. நடத்துங்க நடத்துங்க....

  :)

  ReplyDelete
 2. பல வரலாற்று, அரசியல் உண்மைகள் இந்த தொடர் மூலம் அறிகிறேன்..

  பகிர்வுக்கு நன்றி தலைவரே...

  ReplyDelete
 3. புதிய தெரியாத தகவல்கள் .. நன்றி

  ReplyDelete
 4. Assalamu Alaikum,

  too good brother...keep up the good work..

  your brother,
  Aashiq Ahamed

  ReplyDelete
 5. சினிமா கதைகள் கூட இந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்காது. தொடருங்கள்...

  ReplyDelete
 6. அவசியமான வரலாறுப் பதிவு!தொடருங்கள்,பின்தொடர்கிறேன்!

  ReplyDelete
 7. காலை(11.11.11)வணக்கம்!அருமையான,ஆப்படித்த கதை!தொடருங்கள்,தொடர்வோம்!

  ReplyDelete
 8. //அது.....

  இன்னும் வ(ள)ரும்..... //

  வரட்டும் பார்த்திடறேன்... (படிச்சிப் பார்த்திடறேன்-னு சொன்னேன்)

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.