என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, November 28, 2011

17 டாக்டர் ராமதாசின் அபாரமான நகைச்சுவை உணர்வு...
ஆனந்தவிகடன் கேள்வியும் நானே...பதிலும் நானே பாணியில் நான் யோசித்தது.

1)தமிழகமே பா.ம.க.,வைத்தான் நம்பியிருப்பதாக டாக்டர் ராமதாஸ் சொல்லியிருப்பது எதை காட்டுகிறது?...
ராமதாசுக்கு நகைச்சுவை உணர்வு அபாரமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது

2) பொய்யின் ஆயுட்காலம்  எவ்வளவு நாட்கள்?
ஆளுங்கட்சியாக ஐந்து வருடங்கள் .....அரசியல்வாதியாக ஆயுள் முழுவதும் ...

3) எனக்கு தெரியாது என்ற பதிலை அதிகமாக உபயோகப்படுத்திய இருவர்?
பிரதமர் மன்மோகன் - எப்போதும்
முதல்வர் ஜெயலலிதா -  நீதிமன்றங்களில் மட்டும் 


4) சீமானும் ஆளுங்கட்சியை விமர்சிக்க ஆரம்பித்து விட்டாரே?
உள்ளே போக ஆயத்தமாகிறார் என்று அர்த்தம் .


5) இன்றைய அரசியல்வாதிகளில் நல்லவர்கள் யார்?
பதவிக்கு அல்லது அதிகாரத்திற்கு வராத அனைவரும்


6)சரத்குமார்?
முன்பு வைகோ செய்த ரோலை இப்போது சரத்குமார் செய்கிறார், அண்ணா.தி.மு.க.,வில்.

7) 2016- ஆம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க.,ஆட்சி என்று ராமதாஸ் சொன்னதும் உங்கள் நினைவுக்கு வருவது?
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர், வானம் ஏறி வைகுண்டத்தை காட்டுகிறேன் என்றாராம்....


Post Comment

இதையும் படிக்கலாமே:


17 comments:

 1. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

  இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

  இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

  "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

  சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

  ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****


  .

  ReplyDelete
 2. நல்ல இருக்கு ...சம்பந்தி என்ற மரியாதைக்கு அல்ல நிஜமாகவே நல்ல இருக்கு

  ReplyDelete
 3. கற்பனை நன்றாக இருக்கிறது தோழரே..

  ReplyDelete
 4. நல்லாவே இருக்கு,

  ReplyDelete
 5. அசத்தலான கேவி, பதில்கள் ..

  ReplyDelete
 6. நல்லாவே யோசிக்கிறீங்க தல...

  ReplyDelete
 7. ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு தண்டனை உண்டு என்பார்கள்.
  கடந்த திமுக ஆட்சி என்ற பாவத்திற்கு தண்டனையாக அதிமுக ஆட்சி வந்துள்ளது.
  இந்த அதிமுக ஆட்சி என்ற பாவத்திற்கும் கண்டிப்பாக தண்டனையாக் கிடைக்கப்போவது பமக ஆட்சிபோல!

  ReplyDelete
 8. கிரேட் ஜோக்ஸ்...!!!

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. அண்ணே வாஞ்சூர் அண்ணே!!!

  நல்லது எது கேட்டது எது என உணரும் நிலையில் மக்களாகிய நாம் உள்ளோம்!!!!

  பிரிவினையை அகற்றுவோம்.... ஒற்றுமை நிலை நாட்டுவோம்...

  சாதாரணமான நாமும், அரசியல்வாதிகள் போல் நிலைப்பாடு கொல்ல வேண்டாமே???!!!

  ReplyDelete
 11. இதையெல்லாம் ஆனந்த விகடனுக்கு அனுப்பி வச்சீங்களா... ஒன்னாவது பிரசுரமாகக் கூடும்...

  ReplyDelete
 12. தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  ReplyDelete
 13. Haa.... Haa... Haa..
  Super...
  S. Lurthuxavier
  Arumuganeri

  ReplyDelete
 14. எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? நல்லாதான் இருக்கு. ரசிச்சேங்க.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.