என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, November 04, 2011

13 இனி கருணாநிதி பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது-ஜெயலலிதா அறிக்கை

அண்ணா நூற்றாண்டு நூலக திறப்பாளர் என்று கலைஞர் பெயரை தாங்கி ஒரு கல்வெட்டு இருப்பதால் அதைப்பொறுத்துக்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சியால் இப்போது நூலகத்தை இடம் மாற்றம் செய்ய முடிவு செய்திருக்கிறார் ஜெயலலிதா...கலைஞர் பெயர் எங்கேயும் இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஜெ அழைவதாகவே தெரிகிறது. இப்படியே போனால்.... இனி ஜெயலலிதாவிடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்தாலும் வரலாம்.....( வரும் ஐந்து ஆண்டுகளில் இதில் ஏதேனும் ஒன்று நடக்கவும் வாய்ப்பிருக்கிறது)


புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே.....அண்ணா நூலகம் மாற்றப்படும் என்று நான் அறிவித்ததன் மூலம் ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இதற்கெல்லாம் அஞ்சுகிற ஆளா நான்?. ஆரம்பத்தில் இப்படித்தான் எதிர்ப்பு கிளம்பும். கொஞ்ச நாளில் அது அடங்கிவிடும் என்பதை நான் அறியாமலில்லை. நீங்கள் எனக்கு வழங்கியுள்ள அபாரமான ஆதரவினால் இன்னும் சில மாற்றங்களை கொண்டு வரப்போகிறேன்.

1) கன்னியாகுமரி கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் தெரியாமல் அங்கிருக்கும் வள்ளுவர் சிலை மறைப்பதாகவும், அதனால், மீனவர்கள் வழி தவறி இலங்கைக்கு சென்றுவிடுவதாகவும் எனக்கு வந்துள்ள புகாரையடுத்து அந்த திருவள்ளுவர் சிலை சென்னையில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த சிலையை சென்னைக்கு எடுத்து வருவதற்காக சுமார் 300 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்திலிருந்து  ராட்சச கிரேன்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

2) தமிழகத்தில் இருக்கும் கலைஞர் கருணாநிதி  நகர் முழுவதும் இன்றிலிருந்து கடவுள் கண்ணன் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. மக்கள் எல்லோரும் வழக்கம்போல் அதை கே.கே. நகர் என்றே ஆங்கிலத்தில் அழைத்துக்கொள்ளலாம்.

3) சென்னையில் இருக்கும்  நடிகர் திலகம் சிவாஜி சிலை, போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக ட்ராபிக் வீராசாமி ஒரு மணு கொடுத்துள்ளதால் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு சிவாஜி வீடான அன்னை இல்லம் வாசலில் நிறுவப்படும். இதற்காக தனியாக கிரேன் எல்லாம் வாங்கப்போவதில்லை. திருவள்ளுவர் சிலை எடுத்துவர பயன்படுத்தப்படும் கிரேனையே இதற்கும் பயன் படுத்துவேன்.

4) தமிழ் எழுத்துக்களிலிருந்து க-ரு-ணா-நி-தி-  என்ற எழுத்துக்கள் நீக்கப்படுகிறது. இதற்கு பதிலாக புதிய எழுத்துக்களை உருவாக்க சுமார் 50 அறிஞர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்தக்குழுவினர் மக்களின் வரிப்பணத்தில் மொசபடோமியா சென்று இதற்கான ஆராய்சியில் ஈடுபடுவார்கள்.  

5) கருணாநிதி என்ற பெயர் கொண்டவர்களுக்கு இனி ரேசனில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது.

6) அதேநேரம் அந்தப்பெயரை மாற்றி புதிய பெயர் வைத்துக்கொள்வதற்கு என் அரசு அவகாசம் வழங்குகிறது. ஜெ என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு புதிய பெயர் ஆரம்பித்தால், அப்படி பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட  வாய்ப்பு வழங்கப்படும்.

6) தி.மு.க.,என்ற பெயர் கருணாநிதி கட்சிக்கு இருப்பதால் இனி அண்ணா.தி.மு.க.,என்ற என் கட்சியின் பெயர் அண்ணா.எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

7) சுதந்திரதினத்தன்று மாநில முதலமைச்சர்கள் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத்தந்ததால் இனி வரும் காலங்களில் சுதந்திர தினத்தன்று நான் கோட்டையில் கொடியேற்ற மாட்டேன். அதற்கு பதிலாக ஜனவரி முதல் நாள் கொடியேற்றுவேன்.

8) கருணா நிதி கட்டிய பாலங்கள் மூலம் இனி பயணிக்க மாட்டேன். அந்தப்பாலங்களை ஹெலிக்காப்டர் மூலம் கடப்பேன். அந்த சிலவு மக்களின் வரிப்பணத்திலிருந்தே கழிக்கப்படும்

9) முதலமைச்சர் என்ற பெயரை கடந்த காலத்தில் கருணாநிதி பயன்படுத்தியதால் இனி அந்த பெயரை நான் பயன்படுத்தப்போவதில்லை. அதற்கு பதிலாக மங்குனி அமைச்சர் என்ற பெயரை பயன்படுத்துவேன்.

உங்கள் அன்புச்சகோதரியான என் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதை எதிர்த்து பேசினால் என்னவாகும் என்பதையும் நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். விடைபெறுகிறேன்.
அண்ணா(வுக்கு) நாமம் (போட்டு) வாழ்க...... புரட்சித்தலைவர்(ருக்கு) நாமம்(போட்டு) வாழ்க....

டிஸ்கி:  இந்த பதிவை காப்பியடிப்பதாக இருந்தால் தயவுசெய்து ஒரு மெயில் மூலம் என்னிடம் கேட்டுவிட்டே செய்யுங்கள். தேவையில்லாமல் திருட்டு நாய்கள்  என்று பெயர் வாங்காதீர்கள்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. நீங்க சொன்னதெல்லாம் நடக்க 100 சதவீதம் வாய்ப்பு இருக்குதுங்கோ

  ReplyDelete
 2. who knows,anything and everything may happen.

  ReplyDelete
 3. அம்மான்னா சும்மா இல்லடா!தலைமைச் செயலகத்தை கொட நாட்டுக்கு மாற்றும் யோசனை கூட பரிசீலனையில் இருக்கிறதாம்!இப்ப என்ன செய்வீங்க,இப்ப என்ன செய்வீங்க??????

  ReplyDelete
 4. ஆமா.............கருணாநிதி யாரு?

  ReplyDelete
 5. நடந்தாலும் நடக்குமப்பா,நெலம அது போலதான் போய்கிட்டு இருக்கு.

  ReplyDelete
 6. From Facebook ''EnnA KodumaA SiR IthU''கலைஞர் ஆட்சியில் காலத்தில் நடந்த திருமணங்கள் செல்லாது - அம்மா அறிவுப்பு (மனைவிகள் திண்டாட்டம், கணவர்கள் கொண்ட்டாட்டம்

  ReplyDelete
 7. இது போன்ற நிகழ்வுகள் கருணாநிதி ஆட்சியிலும் நடந்தவைகள் தான்..அப்போதெல்லாம் உங்களை போன்றவர்கள் எங்கே போய் இருந்தீர்கள்?

  ReplyDelete
 8. ஜெயலலிதா எதற்காக இதை செய்தார் என்று விமர்சனம் செய்வதை விட..இதனால் இனி என்ன மாற்றம் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே..

  ReplyDelete
 9. ஹா ஹா ஹா....
  சரியான செருப்படி....

  #யாருக்கு?
  யாருக்கோ!!!

  ReplyDelete
 10. NEXT LADY HITLER...
  She will fail very soon......

  ReplyDelete
 11. ஹா ஹா ஹா செம நக்கல். கடைசியில போட்டிருக்கீங்களே டிஸ்கி. அதுக்கெல்லாம் மசியுர ஆளா நாங்க...

  ReplyDelete
 12. அருமையான கற்பனை

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.