என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, November 02, 2011

10 கனிமொழி ஜாமீன், ஆ.ராசா, பரிதி பற்றி கலைஞர் பரபரப்பு பேட்டி.........கலைஞர் மு.கருணாநிதி இன்று கோபாலபுரத்தில் சிறப்பு பிரஸ்மீட்டில் கொடுக்காத பேட்டி.

கேள்வி: கனிமொழி நாளை விடுதலை ஆவார் என்று செய்திகள் வருகிறதே?

கலைஞர்: ஆம்.... நாளை விடுதலை ஆகிறார்.

கேள்வி:  அதெப்படி கனிமொழி உட்பட ஐந்து பேரின் ஜாமீன் மனுவை மட்டும் சி.பி.ஐ. எதிர்க்கவில்லை?

கலைஞர்: அது நான் கடந்த வாரம் டெல்லி போயிருந்தபோது.....மன்னிக்கவும்...சில ரகசியங்களை வெளியில் சொல்ல முடியாது. இந்தக்கேள்வியை நீங்கள் சி.பி.ஐ-யிடம்தான் கேட்கவேண்டும்.

கேள்வி: அப்படியானால் ஆ.ராசாவின் கதி?
கலைஞர்: ராசாவா? யார் அது?

கேள்வி: என்னங்க இப்படி கேட்கறீங்க? உங்க கட்சியோட கொள்கை பரப்பு செயலாளரா இருந்தாரே அவருதான்.
கலைஞர்: அப்படியா? அவரும் ஜெயிலில்தான் இருக்காரா? மறந்தே போயிட்டேன். நல்லவேளையா ஞாபகப் படுத்திட்டீங்க...உடனே மத்திய அரசுக்கு அவரு ஜாமீன் பற்றி ஒரு தந்தி அடிச்சிட வேண்டியதுதான்....இல்லாவிட்டால் ஒரு கடிதமாவது எழுதிடனும்.

கேள்வி: உங்கள் மகள் என்றதும் நேரா டெல்லிக்கே போனீங்க...இப்ப ராசான்னதும் தந்தி அடிக்கனும்ன்னு சொல்றீங்களே?

கலைஞர்: அப்படியல்ல...என்ன இருந்தாலும் கனிமொழி ஒரு பெண்ணல்லவா? பெண் கஷ்டப்பட்டால் என் மனசு தாங்காது.

கேள்வி: கனிமொழி மட்டும்தான் பெண்ணா? அப்படின்னா ஒரு ஆயுள் தண்டனையை கழித்தப்பின்னும் இன்னும் ஜெயிலிலேயே இருக்காரே நளினி அவரும் பெந்தானே?..அவரு விடுதலைக்கும் ஏதாவது செய்திருக்கலாமில்லையா?

கலைஞர்: நான் பெண் என்று சொன்னது என் சொந்த பெண் என்ற அர்த்தத்தில்....ஆனால், நளினி என் பெண்ணல்லவே?

கேள்வி: நல்ல கொள்கை அய்யா.....இன்னொரு கேள்வி....பரிதி ராஜினாமா பற்றி?

கலைஞர்: அதான் ராஜினாமா பன்னிட்டாரே....அப்புறம் என்ன?

கேள்வி: அதில்லை. ஏன் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை?.

கலைஞர்: அப்படி கேளுங்க சொல்றேன்... வழக்கமா நான் ராஜினாமா செய்கிறேன்...அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னால்...அது நாடகம் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி தெரிந்திருந்தாலும், என்னிடம் வந்து நீங்கள் விலகக்கூடாது என்று மன்றாடுவார்கள். நானும் கொஞ்சம் அப்படி,இப்படி பிகு பன்னிட்டு கடைசியில் ராஜினாமா நாடகத்தை வாபஸ் வாங்கிக்கொள்வேன். இது என்னை பற்றி அறிந்த  அனைவருக்கும் தெரியும். ஆனால், பரிதி அப்படியில்லை.  சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க முடியாது என்று நிஜமாகவே ராஜினாமா செய்தார். அப்புறம் எதுக்கு அவரை சமாதானப்படுத்த வேண்டும். ஆனால், ஒன்று....அவர் சொன்னதில் ஒரு விஷயம் என் மனதை காயப்படுத்தியது.

கேள்வி: என்ன அது?

கலைஞர்: சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க விரும்பவில்லை என்று பரிதி சொன்னது என்னை காயப்படுத்தியது. 
சுயமரியாதை இல்லை என்று தெரிந்தும் நான், பேராசிரியர் போன்றவர்களெல்லாம் இந்த கட்சியில் இல்லை. அப்படி நானே சுயமரியாதை என்றால்கிலோ என்னவிலையென்று கேட்டுக்கொண்டு இருக்கும்போது பரிதிக்கு என்ன வந்தது?....இறுதியாக ஒன்று....சுயமரியாதை, மானம், ரோசம் பார்க்கறவன் அரசியலுக்கே லாயக்கில்லை என்பதே என் கருத்து. நான் இப்போது என் மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததால் சந்தோசமாக இருக்கிறேன். என் மூடை கெடுத்துவிடாதீர்கள். இதோடு பேட்டியை முடித்துக்கொள்வோம், நீங்கள் கிளம்பலாம்


 


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. கலைஞரின் மனசாட்சியின் பேட்டியா?

  ReplyDelete
 2. //
  கேள்வி: அப்படியானால் ஆ.ராசாவின் கதி?
  கலைஞர்: ராசாவா? யார் அது?
  //
  கண்டிப்பா இப்டி நடக்கும்

  ReplyDelete
 3. உம்!என்னத்தச் சொல்ல?தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கென்று!!!!!!!

  ReplyDelete
 4. ஹி ஹி ஹி
  நோ கமெண்ட்ஸ்

  ReplyDelete
 5. இன்னுமா அவரு பெட்டி தராரு... வயசான காலத்துல...

  ReplyDelete
 6. I think its real interview - not reel!!!!???

  ReplyDelete
 7. இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவும்
  அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


  அன்புடையீர்,

  அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


  //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
  .

  ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.