என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, November 01, 2011

7 ஒரு கட்சியின் உண்மையான பலத்திற்கான அளவுகோள், உள்ளாட்சித்தேர்தல் அல்ல...உள்ளாட்சித்தேர்தலில் அண்ணா.தி.மு.க.,அபாரமான வெற்றியை பெற்றிருக்கிறது. அண்ணா.தி.மு.க.,ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்த 40 ஆண்டு காலத்தில் அந்தக்கட்சியின் நிறுவனர் அமரர் எம்.ஜி.ஆர்.,கூட சாதிக்காததை ஜெயலலிதா சாதித்துள்ளார். ஆம்.....சென்னை, திருச்சி போன்ற மாநகராட்சிகளை முதன்முறையாக கைப்பற்றியும், எம்.ஜி.ஆர்.,
காலத்தில் கைவிட்டுப்போ மதுரை மாநகராட்சியை மீண்டும் கைப்பற்றியும் சாதனை படைத்துள்ளது அந்தக்கட்சி.

மேலும், நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றையும், மாவட்ட ஒன்றிய கவுன்சில்கள் போன்றவற்றையும் அதிகமதிகம் கைப்பற்றியுள்ளது. மொத்த வாக்குகளில் ஏறக்குறைய 39 சதவிகித்தை கூட்டணி ஏதுமில்லாமல் தனித்தேஅண்ணா.தி.மு.க., கைப்பற்றியதன் மூலம் அதுதான் அந்தக்கட்சியின் உண்மையான பலம் என்று எடுத்துக்கொள்ளலாமா என்று பார்த்தால்.... நிச்சயமாக இல்லை. அது அண்ணா.தி.மு.க.,வின் பலமல்ல.....ஆளுங்கட்சியின் பலம்தான் என்பது நிதர்சனம்.

நான் ஏற்கனவே பதிவிட்டதைப்போல உள்ளாட்சி தேர்தல் என்பது கட்சிகளின் களமல்ல....மாறாக, அந்தந்த பகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கை பெற்றிருக்கும் தனிப்பட்ட வேட்பாளர்களின்(மனிதர்களின்) களம். மாநகராட்சிகள் தவிர்த்து மற்ற இடங்களில் வேட்பாளர்களின் களப்பணியும், தனிப்பட்ட செல்வாக்கும்தான் வெற்றியை தீர்மாணிக்கிறதே தவிர கட்சியல்ல....பெரும்பாலான இடங்களில் கட்சியில் சீட் கிடைக்காமல் தனியாக போட்டியிட்டவர்களும், சுயேட்சை வேட்பளர்களும் வெற்றிபெற்றிருப்பதன் மூலம் இது நிரூபணமாகிறது.

அதே நேரம், ஆளுங்கட்சிக்கு இணக்கமான கவுன்சிலர்கள் வந்தால் நம் பகுதிக்கும், நமக்கும் நல்லது நடக்கும் என்பது பொதுவான மக்களின் மனநிலை.அதுதான் ஆளுங்கட்சியின் பலமும்கூட....(கவனிக்க...ஆளுங்கட்சியின் பலம்தானே தவிர...அண்ணா.தி.மு.க.,வின் பலமல்ல....ஆளுங்கட்சி என்ற ஸ்தானத்தில் தே.மு.தி.க.,இருந்தாலும் கூட...) அப்படி பெற்றதுதான் இந்த வாக்குசதவீதம். ஆகவே உள்ளாட்சித்தேர்தல் ஒரு கட்சியின் உண்மையான பலத்திற்கான அளவுகோள் இல்லை.

அதற்கான உதாரணம் ஒன்றை பார்க்கலாம்.
எங்கள் பகுதியில் வழக்கமாக., தி.மு.க.விற்கு வாக்களிக்கும் சிலரிடம் எந்தக்கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டேன். நான் அப்படி கேட்கவும் காரணம் இருந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அண்ணா திமு.க.,
வேட்பாளரின் பின்னால் அவர்கள் போனதால்தான் அப்படி ஒரு கேள்வியை அவர்களிடம் முன் வைத்தேன். அதற்கு அவர்கள், இந்தமுறை ரெட்டை இலைக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்றார்கள்.
வழக்கமாக தி.மு.கவிற்குத்தானே வாக்களிப்பீர்கள்
இந்தமுறை மாற்றி வாக்களிக்கப்போவதற்கு என்ன காரணம் என்றேன்.
தி.மு.க., வேட்பாளர்களைவிட அண்ணா.தி.மு.க., வேட்பாளர் நல்லவர். நம்ம பகுதிக்கு நல்லது செய்வார். அதோடு ஆளுங்கட்சியாகவும் இருக்கிறார் என்றார்கள்.


ஆம்...அதுதான் உண்மையும் கூட, வழக்கமாக தி.மு.கவிற்கு வாக்களிப்பவர் இந்த முறை அண்ணா.தி.மு.க.,விற்கு வாக்களித்தது அவரின் தவறல்ல...தி.மு.க.,வின் தவறு... நல்ல வேட்பாளர்களை களமிறக்காமல் காசு கொடுத்தவர்களை களமிறக்கியது தி.மு.க.,வின் மாபெரும் தவறு.

அப்படியானால், தி.மு.க.,வும் கணிசமான அளவிற்கு வென்றுள்ளதே என்று நினைப்பவர்களுக்கு....
நிஜம்தான். ஆளுங்கட்சியையும் மீறி நகராட்சி, பேரூராட்சி என்று சில இடங்களை தி.மு.க.,பிடித்ததற்கான காரணம், அந்த வேட்பாளர்கள் மக்களுக்கு இணக்கமாக, மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர்களாக இருந்திருப்பார்கள். அல்லது லோக்கலில் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்திருப்பார்கள். வெற்றிபெற்றிருப்பார்கள்.


மொத்தத்தில் இந்த தேர்தலில் எந்தக்கட்சியும் பெற்றது உண்மையான வாக்குகள் இல்லை...இப்போது ஒரு கட்சி பெற்றுள்ள வாக்குகளை அளவுகோலாக வைத்து ஒரு கட்சியின் பலத்தை எடை போடமுடியாது. . ஒரு கட்சியின் உண்மையான பலத்தை எப்போது அறியலாம் என்றால்...பொதுத்தேர்தல் நடைபெறும் போதே உள்ளாட்சித்தேர்தலையும் நடத்தவேண்டும். அப்போது அனைத்துக்கட்சியும் கூட்டணி இல்லாமல் நிற்கும் பட்சத்தில் ஒரளவு அந்தத கட்சிகளின் உண்மையான பலத்தை அறியலாம். அப்போதுதான் யார் ஆளுங்கட்சி என்று அறியாமலே மக்கள் உள்ளாட்சிக்கான பிரதி நிதியையும் தேர்ந்தெடுப்பார்கள்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. கட்சிகளின் பங்களிப்பை அப்படி முழுதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாதுன்னு நான் நினைக்கிறேன்...

  ReplyDelete
 2. நீங்க சொல்றது கரெக்ட்தான். ஆனா இந்த தோல்வியை வைத்து விஜயகாந்தை மிக மட்டமாக பேசுகிறார்களே அது சரியா?

  ReplyDelete
 3. மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறீர்கள்! நம்பறோம்..

  ReplyDelete
 4. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 5. உள்ளாட்சி தேர்தல்,,,,,,,?எப்பொழுதும் நடப்பதுதானேய்து. சுயேச்சைகளுக்கு ஒரு பாராட்டு சொட்டு வைக்கலாம்.

  ReplyDelete
 6. அருமையான விளக்கம்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.