என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, November 10, 2011

16 காப்பி/ பேஸ்ட் பதிவர்களுக்கு சில யோசனைகள்.....இது யாரையும் தாக்குவதற்காக எழுதப்படவில்லை. இப்போதெல்லாம் வெட்டி ஒட்டுதல் எனப்படும் காப்பி/ பேஸ்ட் சர்வசாதாரனமாக நடக்கிறது. சமீபத்தில் கூட ஒரு இணையத்தளம் என் பதிவுகளை காப்பி செய்து அவர்கள் தளத்தில் போட்டிருந்தார்கள். அதைப்பற்றி ஏற்கனவே ஒரு எச்சரிக்கை பதிவு போட்டிருந்தேன். ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் யாரும் கேட்பதாக இல்லை. மீண்டும் என் பதிவு திருடப்பட்டிருக்கிறது. அதை அடையாளம் காட்டி ஒரு பத்து பேர்மட்டும் போகும் அந்த தளத்தை பிரபலமாக்கவிரும்பவில்லை. சரி....இவர்கள் திருந்தப்போவதில்லை என்று முடிவு செய்து அவர்களுக்கு சில யோசனைகளை முன்வைக்கிறேன்.

1) ஒரு பதிவை படிக்கும்போது, அட...இது நல்லா இருக்கே....இதை பகிர்ந்து கொண்டால் தேவலையே என்ற எண்ணத்தில், அந்தப்பதிவை எடுத்து உங்கள் தளத்தில் போடுவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட பதிவரிடம் மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ முறைப்படி அனுமதி வாங்கிய பின்னே அதை செய்யுங்கள். அப்படி அவர்களை தொடர்புகொள்ள முடியாவிட்டால்  அந்த பதிவின் கீழ் நன்றி என்று அந்த பதிவரின் பெயரை போட்டு, அந்த பதிவின் ஒரிஜினல் லிங்கையும் இணைத்து விடுங்கள்.

2) நாளிதழ்களிலோ, வாரஇதழ்களிலோ, இணைய இதழ்களிலோ இருக்கும் ஒரு பதிவை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக அடிக்காதீர்கள். அந்த செய்தியை மட்டும் மூலக்கருவாக வைத்துக்கொண்டு, முடிந்தவரை அதை உங்கள் பாணியில் அலசுங்கள்.

3) அப்படியே அந்த பத்திரிகை செய்தியை பகிர்வதாக இருந்தால், எந்தப்பத்திரிகைகளில் அந்த செய்தி இடம் பெற்றதோ அந்த பத்திரிகையின் பெயரை அந்தப்பதிவின் கீழ் குறிப்பிட்டுவிடுங்கள்.

4) சொந்தமாக யோசித்து எழுதுவதற்காக ஒரு தளமும்,  செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு தளமும் வைத்துக்கொள்ளுங்கள். அது, இன்னும் நலம்.

5) குறிப்பாக ஹிட்ஸ் கிடைக்கவேண்டும் என்பதற்காக கண்டதையும் காப்பி/ பேஸ்ட் செய்யாதீர்கள். அப்படி செய்வதால் உங்கள் பெயர்தான் கெடும்.

பின் குறிப்பு: இந்தப்பதிவை(மட்டும்) காப்பி செய்வதாக இருந்தால் என்னிடம் அனுமதியெல்லாம் வாங்கத்தேவையில்லை. என் பெயரை போட்டாலே போதும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


16 comments:

 1. நெறைய பேரு copyrights வாங்கி வச்சுருபாங்க. அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை, உங்கள் பிளாக்-க்கு சென்று ctrl+s கொடுத்து save பன்னிட்டு copy பண்ணினால் easy-யாக copy ஆகிறதுன்னு யருகிட்டயுமே நான் சொல்லல, நீங்களும் சொல்லாதீங்க...

  ReplyDelete
 2. நீரு கெட்ட கெட்ட வார்த்தைல வேணும்னாலும் திட்டும்...

  நாங்க திருந்தவே மாட்டோம்....

  :)

  ReplyDelete
 3. யோவ்... இதுக்கும் "உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...அன்புடன்:ரஹிம் கஸாலி" அப்டீன்ற டெம்ப்ளேட் ரிப்ளை வந்துச்சு... கடுப்பு ஆயிடுவேன்...

  ReplyDelete
 4. விளங்காதவன் நண்பரே.... நீங்கள் என்னை திட்டினாலும் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...அன்புடன்:ரஹிம் கஸாலி என்றுதான் பதில் வரும்.

  ReplyDelete
 5. காபி பேஸ்ட் பண்றது அரசியல்ல சாதாரணம் ஆகிப்போனது....

  ReplyDelete
 6. பின்னூட்டமும் காபி பேஸ்ட்டா!

  ReplyDelete
 7. அப்படியே செய்யுறோம் மை லார்ட்...

  ReplyDelete
 8. என்னுடைய பதிவு ஒன்று கோப்பி செய்யப்பட்டுள்ளது நண்பரே....இது என்னுடைய பதிவு http://kingrobba.blogspot.com/2011/11/facebook-virus-௧௧௧௧௧.html
  கோப்பி செய்யப்பட்ட இடம் http://thaainilam.com/yarl/?p=2251

  ReplyDelete
 9. உங்க ப்ளாக்கின் மொத்த பதிவையும் என் ப்ளாக்கில் காப்பி பண்ண அனுமதிக்க வேண்டுகிறேன் :-) ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 10. சொன்னா புரியாது..சொல்லுக்குள்ள அடங்காது!

  ReplyDelete
 11. சொந்த மூளை வேலை செய்யாவிட்டால் நாம் என்ன தான் செய்வது?பெயரும் வர வேண்டும்,பணமும்?!வர வேண்டும்!ஆனானப்பட்ட அமைச்சரே,பரீட்சை எழுத வேறொருவரை நாடுகையில்???????????????

  ReplyDelete
 12. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. நீங்கள் என்னதான் சொன்னாலும் சில மக்கள் திருந்தவே மாட்டாங்க

  ReplyDelete
 14. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

  ReplyDelete
 15. நான் காபி கூட இப்ப குடிக்குறது இல்லை , உங்களை நினைத்தால் பயம்மா இருக்கு

  ReplyDelete
 16. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.