என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, November 09, 2011

30 புதிய தலைமுறைக்கு ஆப்படிக்கப்போகும் சன்?!தமிழ் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் அசைக்கமுடியாத ஜாம்பவானாக விளங்கும் சன் டி.வி. குழுமத்தின் செய்தி சேனலான சன் செய்திகள் சேனலை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே முதலிடம் பிடித்திருக்கிறது புதிய தலைமுறை சானல். டி.ஆர்.பி., ரேட்டின் படி சற்றேறக்குறைய இரண்டு புள்ளிகளே சன்னைவிட புதிய தலைமுறை அதிகம் பெற்றிருந்தாலும், இது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

சன்.டி.வி., கலைஞர் டி.வி., ஜெயா டி.வி. என்று முந்தைய ஆட்சியாளர்களாலும், இன்றைய ஆட்சியாளர்களாலும் நடத்தப்படும் செய்தி சானல்களை பின்னுக்குதள்ளிவிட்டு  ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஒரு சானல் முன்னணிக்கு வருவதென்பது சாதாரணமான விஷயமில்லை..

சன்னை திறந்தால், நடு நிலை என்ற பெயரில் கலைஞருக்கு ஆதரவாகவும், ஜெயலலிதாவிற்கு எதிராகவும் செய்திகள் வரும். முக்கியமாக தயா நிதிக்கு எதிரான செய்திகள் வரவே வராது. அதுபோலத்தான், கலைஞர் டி.வி.யிலும் இதே நிலைதான், ஜெயாவிற்கு எதிரான செய்திகளே அதிகம் இடம் பிடிக்கும். ஜெயா டி.வி.யை பற்றி சொல்லவே வேண்டாம்......ஒரெ கலைஞருக்கு அர்ச்சனைதான் அதிகமாக இருக்கும். கருணாநிதி என்ற பெயரை அதிகம் உச்சரிப்பது யார் என்று ஒரு போட்டிவைத்தால் அதில் ஜெயா டி.வி.க்குட்தான் முதலிடம். செய்திகள் ஒளிபரப்பும் முப்பது நிமிடங்களில் பத்து நிமிட விளம்பர இடைவேளை தவிர்த்து மீதி, இருபது நிமிடங்களில் பதினைந்து நிமிடங்கள் ஜெயலலிதாவின் அறிக்கைகளே ஆக்கிரமித்திருக்கும். இப்படி ஆண்டவராலும், ஆள்பவர்களாலும் நடத்தபடும் டி.வி.யில் தான் இப்படி என்றால்....ஒரு போதும் ஆட்சிக்கே வரமுடியாதவர்களால் நடத்தப்படும் கேப்டன் டி.வி., மக்கள் டி.வி., வசந்த் டி.வி. , மெகா டி.வி., போன்றவற்றிலும் இதே நிலைமைதான்.
கட்சிக்கு கொள்கை இருக்கிறதோ இல்லையோ ஒரு டி.வி. சானல் இருக்கிறது.  இப்படி கட்சிக்காரர்களால் நடத்தப்படும் சேனல்கள் ஒருபக்க சார்புடன் தான் செய்திகளை தருகிறார்களே தவிர யாரும் மக்களுக்கு உண்மைகளை சொல்லவில்லை. சரி...விடுங்க...யாராவது சொந்த சிலவில் சூன்யம் வைத்துக்கொள்வார்களா?


இந்த நிலையில்தான், செய்திகள் சானலில் ஒரு புதிய விடியலாக புதிய தலைமுறை வந்தது. அனைத்துக்கட்சி செய்திகளையும் விருப்பு, வெறுப்பின்றி தொகுத்து ஒரு மிக்சராக, ஜூஸாக கொடுத்தது புதிய தலைமுறை. செய்திகளை அலசும் விதமும் சுவாரஸ்யமாகவே இருந்தது. இதை...இதை...இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதன் மூலம், இப்போது முத்லிடம் பிடித்திருக்கிறது புதிய தலைமுறை. வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம் அதற்கு....

இதன் அசுர வளர்ச்சியால் பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டி.வி., இதை ஆரோக்கியமான போட்டியாக நினைக்காது. தன் சன் டைரக்ட்(DTH) மூலம் வழங்கிவரும் புதிய தலைமுறை சானலுக்கு ஆப்படிக்கவே நினைக்கும். எனக்கிருக்கும் பயமும் அதுதான். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று?....Post Comment

இதையும் படிக்கலாமே:


30 comments:

 1. மக்கள் விரும்பியதால்தானே புதிய தலைமுறை முதலிடம் பெற்றது? சன் அதை அமுக்க முயன்றால் மக்கள் ஆதரவு இருந்தால் புதிய தலைமுறை அதை முறியடித்து விடும்.

  ReplyDelete
 2. ஏற்கனவே அரசு கேபிள் புதிய தலைமுறை சேனலை தரம் குறைவான பேண்ட்க்கு மாற்றி விட்டது

  ReplyDelete
 3. புதிய தலைமுறை அதை கட்டாயம் முறியடிக்கும்!உண்மைவிரும்பி.மும்பை.

  ReplyDelete
 4. சன்னுக்கு மாற்றாக புதிய தலைமுறை வந்திருக்கிறது..

  மக்களின் ஆதரவு கண்டிப்பாக இச்சானலுக்கு இருக்கும்...

  ReplyDelete
 5. ரொம்ப சந்தோஷ படாதீங்க

  புதிய தலைமுறை , உருவாக்கியதே SRM குரூப் ,நம்ம IJK தான் .

  http://www.srmgroup.org/

  எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்காங்கன்னு பாப்போம்

  ReplyDelete
 6. //இந்த தளத்தில் இடம்பெறும் பதிவுகள் அனைத்தும் பதிப்புரிமை பெற்றது. என் பதிவுகளை உங்கள் தளத்தில் புதுப்பிக்க விரும்பினால் தயவு ஒரு மெயில் மூலம் என்னிடம் அனுமதி கேட்டுவிட்டே செய்யுங்கள். தேவையில்லாமல் திருட்டு பட்டம் சுமக்காதீர்கள்.//

  முடியாதுய்யா... அப்பிடித்தான் திருடுவோம்... என்ன வேணாலும் பண்ணிக்க... திருடன்னு சொல்லு.. எங்களுக்கு வெக்கம் மானம் இல்ல... இதுக்கு முன்னாடி மக்கள் எத்தன பேர திருடன்னு சொன்னாங்க.. ஆனா, அவிங்கள நாடாள விடும்போது, நாங்க பண்ணுரதுல என்ன தப்பு?

  :)

  ReplyDelete
 7. எதற்காக புதியதலைமுறை ஆரம்பிக்கப்பட்டதுன்னு தெரியுங்களா? தெரிஞ்சதும் இன்னொரு பதிவு போட்டு நொந்துக்குவீங்க

  ReplyDelete
 8. இதை ஆரோக்கியமான போட்டியாக நினைக்காது. தன் சன் டைரக்ட்(DTH) மூலம் வழங்கிவரும் புதிய தலைமுறை சானலுக்கு ஆப்படிக்கவே நினைக்கும். எனக்கிருக்கும் பயமும் அதுதான்.// செஞ்சாலும் செய்வாங்க..

  ReplyDelete
 9. சண்டைரக்ட்ல வரலன்னா என்ன? 70 ரூபா கேபிள் இருக்கே :-)

  நானும் தேர்தல் அறிக்கை முதல் திநகர் கட்டடம் இடிப்பு வரை புதிய தலைமுறை தான் பார்த்தேன்!

  நடுநிலைமை அங்கே தான் இருக்கிறது. செய்தி வாசிக்கணும்னா சுத்த தமிழ்ல சேல கட்டி தான் வந்து வாசிக்கணும்னு இல்லாம புதிய தலைமுறைக்கு ஏற்றார்போல் நல்லா இருக்கு!

  ReplyDelete
 10. புதிய தலைமுறை .......அணைத்தும புதிய முயற்சி என்றும் நினைக்க முடியாத உண்மை தகவல்கள்

  ReplyDelete
 11. புதிய தலைமுறை .......
  அணைத்தும புதிய முயற்சி என்றும் நினைக்க முடியாத உண்மை தகவல்கள்

  ReplyDelete
 12. but this channel also belong to a political party and u can see that already. so much for being "NEW"surya

  ReplyDelete
 13. உண்மை தாங்க அப்படி தான் செய்யும்

  ReplyDelete
 14. சன் நிச்சயம் அதைத் தான் செய்யும்..

  ReplyDelete
 15. அப்படிக்க போறாங்களா...? ஆப்படிக்க போறாங்களா....???

  ReplyDelete
 16. அட..நானும் படித்தேன்..புதியமுயற்சிதான்..புதிய தலைமுறை..

  இது தலைமுறைக்கும் தடங்களில்லாது தொடரணும்ங்கிறதுதான் பொதுநலம் விரும்புவோர் அவா...

  http://pattarivu.blogspot.com/2011/11/blog-post_09.html

  ReplyDelete
 17. ஆஹா.. அருமை. நல்ல விரிவான அலசல். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 18. நல்ல செய்தி ... இப்படியே சன் டிவியின் மாயை யில் இருந்தும் மக்களை காக்க ஒரு டிவி வரணும் ... வரும்

  ReplyDelete
 19. யானைக்கும் அடிசறுக்கும்..சன் டிவி ஒன்றும் யானை அல்ல..ஒழிந்து போய்விட்டால் இன்னும் மகிழ்ச்சி சன் டிவி..

  ReplyDelete
 20. ஹஹாஹா..உங்க கமெண்ட் பாக்ஸ் கிட்ட உங்க கமெண்ட் சூப்பருங்க..கலக்குங்க..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. பார்ப்போம்....

  ReplyDelete
 22. சொந்த சுயலாபங்களுக்காக சேனல் வைத்துக்கொண்டு நம்மை பாடாய் படுத்துகிறார்கள்.வேறென்ன சொல்ல?இத்ல் புதிய தலை முறை எப்படி என தெரியவில்லை.

  ReplyDelete
 23. புதிய தலைமுறை நிறுவனர் ஒரு கல்வி வியாபாரி, கட்சியின் நிறுவனர். இப்போதே காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடிப்பது போல் தெரிகிறது. போக போகத்தான் நடுநிலை தெரியும்.

  ReplyDelete
 24. puthiya thalaimurai makkalin vaalthukkal melum valara valthum nalla ullam gtudayar kadayampatty

  ReplyDelete
 25. வணக்கம் புதிய தலைமுறைக்கு எனது வாழ்த்துக்கள் மேலும் உங்களது சேவை தொடரட்டும் நாட்டு மக்களுக்கு உண்மை உரைக்கட்டும் ஆளும் கட்சியானாலும் எதிர் கட்சியானாலும் உண்மை மட்டுமே சொல்லும் ஒரே சேனல்

  ReplyDelete
 26. Puthiya thalaimurai TV is god gifted to all public, I like all your programme and Online streaming of Puthiya Thalaimurai channel is very nice

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.