என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, November 22, 2011

19 தெளிந்த கேப்டனும், ஏமாந்த மக்களும்.....இதுவரை http://ragariz.blogspot.com/ என்ற வலைப்பூ முகவரியில் இயங்கிவந்த என் தளம் இனி http://www.rahimgazzali.com/ என்ற புதிய டொமைனில் இயங்கும். இதுவரை நீங்கள் எனக்கு வழங்கிவந்த ஆதரவை இனிமேலும் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன். என் வலைத்தளத்தின் இணைப்பை தங்களின் தளத்தில் கொடுத்திருந்தால் அதை http://ragariz.blogspot.com/ என்ற முகவரியிலிருந்து http://www.rahimgazzali.com/ என்று சற்று மாற்றியமைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் நான் எப்போது புதிய பதிவிட்டாலும் உங்கள் தளத்தில் update ஆகும்.

.

இந்த ஆட்சியை ஒரு வருடத்திற்கு விமசிக்க மாட்டேன்...குழந்தை நடக்கட்டும் பார்க்கலாம் என்றெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வரை சால்ஜாப்பு சொல்லிவந்த கேப்டன், ஜெயாவின் இதயத்தில்கூட தனக்கு இடமில்லை என்று தெரிந்ததும், தன் முடிவை மாற்றிக்கொண்டு மவுனம் கலைத்திருக்கிறார். பால் விலை, பேருந்து கட்டணம் உயர்வு போன்ற ஜெயா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து உண்ணாவிரதமும் அறிவித்திருக்கிறார். சபாஷ் கேப்டன் இப்போதாவது தெளிந்தீர்களே என்று சொல்லத்தோன்றுகிறது.

அதேநேரம், உள்ளாட்சித்தேர்தலுக்கு முன்பே இந்த விலையேற்றத்தை அறிவித்துவிட்டு தேர்தலை சந்தித்திருக்க வேண்டியதுதானே என்று ஜெயாவை நோக்கி, கேள்விகளையும் வீசியிருக்கிறார் கேப்டன். விலையேற்றத்தை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திக்க ஜெயா என்ன முட்டாளா? அப்படி செய்திருந்தால் தேர்தலில் தோல்வியுற்று தே.மு.தி.க.,விற்கு துணையாக அண்ணா.தி.மு.க.,வும் மூலையில் முடங்கவேண்டியதுதான் என்பதைக்கூடவா ஜெயா அறியாமலிருப்பார்?

==============================

எங்கள் ஊரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அறந்தாங்கிக்கு வேலை விஷயமாக அடிக்கடி பேருந்தில் சென்று வருபவர்கள் அதிகம். அப்படி செல்வதற்கு கடந்த வாரம் வரை, அரசு பேருந்துகளில் 4 ரூபாயும், தனியார் பேருந்துகளில் 5 ரூபாயாகவும் கட்டணம் இருந்தது. அதுவே இப்போது அரசு பேருந்துகளில் 8 ரூபாயாகவும், தனியார் பேருந்துகளில் 9 ரூபாயாகவும் உயர்ந்துவிட்டது.

ஒரு நபர் அறந்தாங்கிக்கு சென்றுவர பேருந்து கட்டணமாக முன்பு 8 ரூபாய் சிலவிட்டாலே போதும். அதுவே இப்போது இருமடங்கு அதிகமாகி 16 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
ஒரு நாளைக்கு எட்டுரூபாய் கூடுதல் என்று வைத்துக்கொண்டால்,ஒரு மாதத்திற்கான கூடுதல் சிலவு= 240ரூபாய்
இதுவே ஒரு வருடத்திற்கு 2880 ரூபாய். இதுவே ஐந்து வருடத்திற்கு 14,400 ரூபாய் கூடுதலாக சிலவாகிறது. இதில் தினமும் பயணம் செய்யாமல் இருக்கும் சில நாட்களை கழித்தால்கூட ஏறக்குறைய 14,000 ரூபாய் வருகிறது.

சரி இப்போது எதற்காக இந்தக்கணக்கு என்று நினைக்கிறீர்களா? சொல்றேன்.
ஒரு மின்விசிறியின் விலை = 2000
ஒரு மிக்ஸியின் விலை =        1500
ஒரு கிரைண்டரின் விலை =   2000
-----------------------------------------------
                                    மொத்தம்= 5500
-----------------------------------------------

ஆக, இந்த 5500 ரூபாய் இலவச பொருட்களுக்கு ஆசைப்பட்ட மக்கள், அதைவிட ஒரு மடங்கு அதிகமாக ஏறக்குறைய 14,000 ரூபாய்களை இழந்திருக்கிறார்கள். அதுதான் ரேசன் கடைகளில் இலவசமாக அரிசி கொடுக்கிறார்களே என்று சொல்கிறீர்களா?

முந்தைய ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி  போடும்போது மாதம் 20 ரூபாய் வீதம் வருடத்திற்கு 240 ரூபாயும், ஐந்து வருடங்களுக்கு 1200 ரூபாயும் மட்டுமே சிலவாகியது. அந்த சிலவை இந்த 14000 ரூபாயில் கழித்தால்கூட, மீதி 12,800துண்டுவிழுகிறது.

 இந்த 12,800 ரூபாயில் இலவச பொருட்களின் விலையான 5500-ஐ கழித்தால் கூட மீதி 7300 ரூபாய் மிச்சமிருக்கிறது. அடப்பாவி மக்களே இந்த 7300 ரூபாய்க்கு இன்னும் சில பொருட்களை நீங்களே சொந்தமாக வாங்கியிருக்கலாமே?

எப்படியோ மக்கள் தலையில் துண்டு விழுந்துவிட்டது. இதுதான் சட்டிக்கு பயந்து நேரடியாக அடுப்பில் விழுந்த கதை.


Post Comment

இதையும் படிக்கலாமே:


19 comments:

 1. இதெல்லாம் வெறும் ட்ரைலர்தான்...
  மெயின் பிக்சர் இன்னும் பாக்கி!

  :)

  ReplyDelete
 2. இலவசங்களையும் விலையேற்றத்தையும் சரியாக ஒப்பிட்டு விட்டீர்கள்.

  ReplyDelete
 3. டாட் காம் க்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 4. வணக்கமுங்க!என்னங்க பண்ணுறது? நீங்க சொன்னாப்பில தான் நெலம இருக்குது!இன்னும் நாலர வருஷத்துல என்னவெல்லாம் ஏறப்போவுதோ?

  ReplyDelete
 5. அடாடா... இப்படிக் கணக்கிட்டுப் பார்த்தால் மிஞ்சுவது வயிற்றெரிச்சல் மட்டுமே... பாவம் மக்கள். உரலுக்குப் பயந்து உலக்கையில் அடிபட்ட மாதிரி ஆகிப் போய் விட்டனரே... (மக்கள் என்பதில் நானும் நீங்களும் அடக்கம்தானே...)

  ReplyDelete
 6. அதாங்க அம்மா இலவசம் என்ற சின்ன மீனை போட்டு
  பெரிய மீனை பிடிக்கிறாங்க..


  செய்யட்டும்...

  மக்களைப்பற்றி அவர்களுக்கு என்ன ஆகப்போகிறது.

  ReplyDelete
 7. இதுக்கே இப்படி என்றால் இனி வரும் கால கட்டங்களில், மக்கள் நலப் பணியாளர்களை மட்டும் தானே வேலையே விட்டு தூக்கி இருக்கிறார்கள்... பார்க்கலாம்

  ReplyDelete
 8. //இதெல்லாம் வெறும் ட்ரைலர்தான்...
  மெயின் பிக்சர் இன்னும் பாக்கி!
  //

  ரிபீட்டு...

  ReplyDelete
 9. அட போங்கப்பா இவரு பெரிய புளியங்கொட்டை ...மாற்றத்தை ஏற்ப்படுத்த ..அம்மா எலைட் பாரே இவருக்காக தான் திறக்குறாங்க

  ReplyDelete
 10. Perfect ......comparesen.......

  ReplyDelete
 11. unga alavukku ellorum yosichiruntha, anna aasarey, fasting irukkavendiya avasiayam illama poi irukkum.

  ReplyDelete
 12. வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 13. இன்னாபா தப்பு தப்பா கணக்க ஃபைசல் பண்றே!
  லாப்டாப் கீது, அப்பாலிகா கொயந்தைங்களுக்கு மாம்பழ மில்க்சேக்கீது
  அப்பாலிகா டாஸ்மாக்லே தாலி அறுத்த பொம்ளேக்கு கவுர்தயா வாய வயிகாட்டனுமேபா.
  இதெல்லாம் வெறும் வர்வுசெல்வுதான்பா...
  ஆனா இந்த வெலயேத்தத்துலே, ஒதுக்குனதுபா?!?!?
  அத்த தனி பதிவா கொண்டாபா!

  ReplyDelete
 14. கேப்டன் இப்பதான் வாய திறக்கிறார் .. பாப்போம்
  அன்புடன்
  ராஜா

  நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.

  ReplyDelete
 15. நல்ல குடும்பஸ்தன் மாதிரி கணக்குப் போட்டிருக்கீங்க..!

  ReplyDelete
 16. மிக சரியாக கணக்கிட்டு சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அதிமுகவிற்கு விழுந்த முக்கால்வாசி ஓட்டுகள் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் தான் என்பதே என் கருத்து.

  ReplyDelete
 17. இந்த ஆட்சியை ஒரு வருடத்திற்கு விமசிக்க மாட்டேன்........./ ஆறு மதம் ன்னு சொன்னார் . அதோடு இதே மாறி அண்ணாதுரை, காமராஜர் எல்லாரும் சொன்னாக அவங்க எதிர் அனில இருக்கும் போது.

  ReplyDelete
 18. இப்போது ஜே . அடுத்தது

  ReplyDelete
 19. இப்போது ஜே . அடுத்தது

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.