என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, December 31, 2011

25 கனத்த இதயத்துடன் நான் விடைபெறுகிறேன் நண்பர்களே.....

இதுவரை
நான் உங்களில் சிலருக்கு
மகிழ்ச்சியை தந்திருக்கலாம்
சிலருக்கு சோகத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு வேதனையை தந்திருக்கலாம்
சிலருக்கு சந்தோசத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு சங்கடத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு ரணத்தை தந்திருக்கலாம்..
சிலருக்கு இழப்பை தந்திருக்கலாம்.
சிலருக்கு இழப்பை தந்திருக்கலாம்
அதற்காக உங்கள்
அனைவரிடமும் மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்.
அதெற்கெல்லாம் வரும்
ஆண்டாவது உங்களுக்கு
மருந்திடும் என்று நம்பிக்கையில்
புறப்படுகிறேன்...
இனி உங்கள் வாழ்நாளில்
நான் உங்களைத்தேடி
மீண்டும்  ஒருமுறை
வரவே மாட்டேன்.
கனத்த இதயத்துடன்......
இன்றோடு நான்
விடைபெறுகிறேன்

இப்படிக்கு
2011

டிஸ்கி:   சனியன் விட்டுச்சுன்னு வந்திருந்தீங்கன்னா.... அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல....என்னடா இவன் போன வருஷம் போட்ட பதிவையே, இப்போது கொஞ்சம் மாற்றி மீண்டும் போட்டுட்டானே என்று நினைக்கவேண்டாம். ஏனெனில், நான் வருடத்திற்கு ஒரு பேச்சு பேசுபவன் அல்ல. எப்போதும் ஒரே பேச்சுதான்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


25 comments:

 1. நகைச்சுவை மிகுந்த பதிவு நன்றி வணக்கம் திரு ரஹீம் அவர்களே, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பேச்சு மாறாத நீங்க ரொம்ப நல்லவர்

  ReplyDelete
 3. தலைப்பைப் பாத்து கொஞ்சம் திடுக்கிட்டுப் போயிதான் உள்ள வந்தேன் பிரதர். அழகா புத்தாண்டு வாழ்த்து சொல்லிருக்கீங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. கடைசி வரிவரை ஒரு சங்கடம் இருந்தது நிஜம்
  கடைசி வார்த்தையைப் படித்தவுடன் என்னையும் அறியாது
  சிரித்துவிட்டேன்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  எனது மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 5. தலைப்பில் தான் எல்லாம் என்பது உண்மையாகிறது இப்போது!, அருமை

  ReplyDelete
 6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி

  ReplyDelete
 7. நக்கல் ஜாஸ்திதான்.

  ReplyDelete
 8. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் சார்!

  ReplyDelete
 9. Kalakkittinga Sago. Ennamo ethonnu odi vanthen. Avvv....Tamilmanam 5.

  ReplyDelete
 10. எப்படில்லாம் யோசிக்க வேண்டி இருக்கு பொருத்தமான தலைப்புக்கு.
  இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. இது ஒரு மீள்பதிவு என்று போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...
  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

  ReplyDelete
 12. இருந்த கொஞ்சநஞ்ச சந்தோசத்தையும் கடைசி வரி கெடுத்துடுச்சே.....!

  ReplyDelete
 13. இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. பயந்து போய் வந்தால் ...... கலக்கலான பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. நானும் நம்ம நானாவுக்கு என்னாச்சு என்று ஓடிவந்தால் இப்படி சிரிக்கவைத்துவிட்டீர்கள்!

  ReplyDelete
 17. "எப்போதும் பேச்சு மாறமாட்டேன்." நல்ல முடிவு. வாழ்க.

  ReplyDelete
 18. மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 19. கனத்த இதயம் கடைசி வரி படித்தவுடன் லேசாகிவிட்டது.

  ReplyDelete
 20. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. கலக்கல் நண்பரே! நன்றாக இருந்தது! நன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.