என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, December 05, 2011

21 கனிமொழிக்கு இதுதான் சரி......தன் சகோதரர்கள் அழகிரி, ஸ்டாலின் போல் நேரடியாக அரசியலில் ஈடுபடாமல், தன் சகோதரி செல்வியைப்போல் குடும்பத்தலைவியாகவும், தன் தந்தை கலைஞரை போல் கவிஞராக மட்டுமே அடையாளம் காணப்பட்ட கனிமொழியை காலம் அரசியலுக்கு அழைத்து வந்தது இல்லை...இல்லை...இழுத்துவந்து திணித்தது.

கனிமொழியின் அரசியல் பிரவேசத்தை ஒரு திட்டமிட்ட விபத்து என்றும் சொல்லலாம். தினகரன் சர்வேயால் தயாநிதியின் பதவிக்கு ஆபத்து வந்ததும், அந்த இடந்தை நிரப்ப கனிமொழி எம்.பி.,யாக்கப்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு ஆனால், அது நடக்காமல் எம்.பி.யாகவே தொடர்ந்தார்.

கலைஞர் டி.வி.,க்காக ஸ்பெக்ட்ரம் பணத்தை முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஜெயிலுக்கும் போனார். புதுமாப்பிள்ளையான தன் மகன் ஸ்டாலினை எமெர்ஜென்ஸியில் கைது செய்தபோது கூட கலங்காத கலைஞர், கனிமொழியின் கைதின்போது கலங்கித்தான் போனார். கனிமொழியின் கைதுக்குமுன்னே அந்தக்கட்சியின் கொ.ப.செ.,யான ஆ.ராசா கைதுசெய்யப்பட்டபோது கவலைப்படாமல் இருந்த கலைஞர் தன் மகள் விஷயத்தில் தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று காட்டினார்.

இப்போது நீண்ட சிறைவாசத்திற்கு பின் கனிமொழி சுதந்திரக்காற்றை சுவாசித்தப்பின் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் கலைஞர், தன் மகளுக்கு என்ன பதவி கொடுப்பது என்று குழப்பமாகவே இருப்பார்.

கனிமொழிக்கு கட்சிப்பதவி ஏதும் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கலைஞர் அதை கட்சி முடிவுசெய்யும் என்றார். கட்சி என்றால் செயற்குழு பொதுக்குழு என்று அர்த்தம். எந்த ஒரு கட்சியின் பொதுக்குழுவும், செயற்குழுவும் கட்சித்தலைமையின் எண்ணத்தைதான் பிரதிபலிக்கும். அதற்கு தி.மு.க.,மட்டும் விதிவிலக்கல்ல....
கலைஞர் மனதில் இப்போது என்ன ஓடுகிறது என்று அந்தக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் ஓரளவு யூகித்திருப்பார்கள். அதாவது, கனிமொழிக்கு பதவி கொடுப்பதுதான் அவரின் எண்ணமாக இருக்கும். தன் துனைவியார் ராஜாத்தியம்மாளை திருப்திபடுத்தவாவது இப்படி சிந்தித்திருப்பார்.

தலைவரிடம் நல்லபெயர் எடுக்க கனிமொழிக்கு பதவி என்ற விஷயத்தை ஒட்டியே செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பேசுவார்கள்  என்பது எல்லோருக்கும் தெரியும். அதன்பிறகு கனிமொழிக்கு ஏதாவது கட்சிப்பதவி வழங்கப்படும். 

கலைஞரே....உங்கள் மகள் ஒன்றும் தியாகியல்ல....எமெர்ஜென்சி போன்றவற்றில் கலந்துகொண்ட எத்தனையோ தி.மு.க.,தொண்டர்கள்,இன்று எந்தப்பதவியும் இல்லாமல் மிசா என்ற பெயரைமட்டும் தன் பெயருக்கும் முன்னால் போட்டுக்கொண்டு தெருவில் நிற்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய எத்தனிக்காமல், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஜெயிலுக்கு போய்வந்த ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு பதவி கொடுப்பதென்பது அநியாயம். இன்னும் சொல்வதென்றால், கனிமொழிக்கு அரசியலே தேவையில்லை.

அரசியலில் உங்களுக்கு பிறகான வெற்றிடத்தை நிரப்ப உங்களின் மகன்கள் இருக்கிறார்கள். ஆனால், எழுத்துலகில்தான் உங்கள் இடத்தை நிரப்ப ஆளில்லை. அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளட்டுமே கனிமொழி. எதற்காக தேவையில்லாமல் கனிமொழியை அரசியலில் திணித்து கோஷ்டிகளில் ஒன்றை கூட்டுகிறீர்கள்?
கனி இனி தொடரட்டும் அரசியல்வாதியாக அல்ல....கவிதாயினியாக......Post Comment

இதையும் படிக்கலாமே:


21 comments:

 1. கவிதாயினியாகத் தொடரட்டும் கனிமொழி! நன்றே சொன்னீர்கள.

  ReplyDelete
 2. //எழுத்துலகில்தான் உங்கள் இடத்தை நிரப்ப ஆளில்லை. அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளட்டுமே கனிமொழி//\

  நல்ல யோசனை தான் - ஆனா செவிடன் காதில் ஊதிய சங்குதான்

  ReplyDelete
 3. சொன்னதென்னமோ நியாயமாத் தான் சொல்லிருக்க தம்பி! ஆனா நான் தீவிரமா அரசியல்ல ஈடுபடுவேன்னு இன்னிக்கு கனி பேட்டி குடுத்திருக்காங்க. என்னைப் பொறுத்த வரையில நானும் உங்க கட்சிதான். கனி இலக்கியத்துல மட்டும் ஈடுபட்டா நல்லதுதான்.

  ReplyDelete
 4. அண்ணே! அவிங்க இப்போ பெயிலில் தான் வந்து இருக்காவ!!! இன்னும் மெயின் பிக்சர் பாக்கி அப்பு!!!

  ReplyDelete
 5. ஆமாம் அவர்கள் இலக்கிய பக்கங்களில் வந்தாள் நிறைய சாதிக்க வாய்ப்புண்டு..

  ReplyDelete
 6. ;;;கலைஞரே....உங்கள் மகள் ஒன்றும் தியாகியல்ல....எமெர்ஜென்சி போன்றவற்றில் கலந்துகொண்ட எத்தனையோ தி.மு.க.,தொண்டர்கள்,இன்று எந்தப்பதவியும் இல்லாமல் மிசா என்ற பெயரைமட்டும் தன் பெயருக்கும் முன்னால் போட்டுக்கொண்டு தெருவில் நிற்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய எத்தனிக்காமல், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஜெயிலுக்கு போய்வந்த ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு பதவி கொடுப்பதென்பது அநியாயம். இன்னும் சொல்வதென்றால், கனிமொழிக்கு அரசியலே தேவையில்லை.
  ;;;

  அருமையாக சொன்னிங்க நண்பா அதுதான் சரியான முடிவு. இன்னும் கட்சிக்காக உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க

  ReplyDelete
 7. கவிதாயினியாகவே தொடரட்டும் கனிமொழி..சரிதான்..

  ReplyDelete
 8. ஜெயிலுக்கு போயிட்டு வந்ததையே பெரிய தகுதியாக்கிடுவாங்க போல.... அண்ணன் தம்பி குடுமிப்புடி சண்டைல இவங்க காட்டுல மழையடிக்க போவுது பாருங்க.....

  ReplyDelete
 9. உங்கள் கேள்வியிலும் நியாயம் உண்டு தான்!ஆனாலும்,"கவி"யில் இருக்கும் சுவையை விட "களி"யில் அதிகம் சுவை இருக்கிறதோ,என்னமோ?பதவி கொடுத்தால் "களி" நிச்சயம்!

  ReplyDelete
 10. எம்.ஜி.ஆர். பதிவு பாதியிலேயே விட்டு விட்டேர்களே? ஏன்? முடிந்தால் தொடருங்கள். மிகச் சுவையாக இருக்கிறது.

  ReplyDelete
 11. இனி நீ பூங்கொடி அல்ல... போர்க்கொடி...!

  ReplyDelete
 12. [@]c4607739072491363869[/@] பாதியிலேயே விட்டுவிடவில்லை சூர்யா.
  கனினி பிரச்சினை காரணமாக தகவல் திரட்டுவ்தில் சிரமம் ஏற்பட்டுவிட்டது.
  இந்த வாரம் அதன் தொடர்ச்சி வரும்

  ReplyDelete
 13. சரிதான் கனிமொழி கவிதாயினியாகவே இருக்கட்டும்..

  ReplyDelete
 14. நம் தளத்தில்'அடிக்க வர்றாங்க MY LORD'

  ReplyDelete
 15. நல்ல கருத்து அனால் கருணா காதில்ஏறaது

  ReplyDelete
 16. பொறுத்திருந்து பார்க்கலாம் கனியுமா காயுமான்னு

  ReplyDelete
 17. nalla karuthu.... kanimozhi kaathil erinaal sari... www.rishvan.com

  ReplyDelete
 18. என்ன தான் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
  நம்ம தளத்தில்:
  "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

  ReplyDelete
 19. உங்கள் யோசனையை நான் கனிமொழிக்கு திருப்பி விடுகிறேன்.

  ReplyDelete
 20. உங்கள் வாக்கு பலிக்கட்டும்.............

  ReplyDelete
 21. கன்னல் தமிழ் கனிமொழியில் கவிதை பாட அந்தக் கனிமொழி களத்தில் இறங்கட்டும்..........

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.