என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, December 14, 2011

13 மு(தொ)ல்லைப்பெரியாறும் கையாலாகாத அரசும்......அடடே....வாப்பா உளறுவாயா....எங்கே கொஞ்ச நாளா ஆளையே காணாம்?

கொஞ்சம் வேலையா போச்சுப்பா....அதான்

சரி...சரி...இந்த முல்லைப்பெரியாறு பிரச்சினை பத்திக்கு எரியுதுபோல?

ஆமாப்பா...இந்த கேரளாக்காரனுங்கள நினைச்சா கடுப்பா இருக்குப்பா.... நல்லா இருக்கிற அணையை உடைச்சு புதுசா கட்டப்போறாய்ங்களாம்...

இப்ப அதுக்கென்ன அவசரம்?

அதைத்தான் எல்லோரும் கேட்கறாங்க.... நல்லாருக்கற அணையை ஏண்டா உடைக்கப்போறீங்கன்னு...அதுக்கு புயலு பூகம்பம்ன்னு கதை சொல்றாய்ங்க அந்த நாதாரிங்க...

புதுசா கட்டிட்டா மட்டும் பூகம்பத்தை தாங்கிடுமா? மொத்தமா எல்லோரும் சேர்ந்து தமிழ்நாட்ட வஞ்சிக்கற வேலையை செய்யிறாங்க....

ஆமாம்....முல்லைப்பெரியாறு தொல்லைப்பெரியாறு ஆகிடுச்சு....

மலையாளிகள் மட்டும்தான் நமக்கு தொல்லையா இருக்காங்களா என்ன?

அவங்க மட்டுமில்ல....ஏற்கனவே, கர்நாடகாக்காரன் காவிரி பிரச்சினை பன்றான். இந்தப்பக்கம் இலங்கைக்காரன் மீனவர்களுக்கு பிரச்சினையா இருக்கான். எல்லாப்பக்கமும் தமிழன் அடி வாங்குறான்.

மத்திய அரசு என்னதான் செய்யுது?

ஆமா...செய்யறாங்க பானையும் சட்டியும்.... அவங்கள்லாம் சும்மாப்பா....மத்தியில எந்த அரசு வந்தாலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கற வேலையை மட்டும் கரக்டா செய்றாங்க.

ஏப்பா... எனக்கொரு சந்தேகம்? நாம இந்தியாவுலதான் இருக்கோமா? இல்லை தனி நாடா இருக்கோமா?

என்ன இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்ட.... நாம இந்தியாவுலதான் இருக்கோம்...

பார்த்தா அப்படி தெரியலியேப்பா....பக்கத்து நாட்டிலிருந்து, பக்கத்து மாநிலம் வரை எல்லோராலையும் நம்ம வஞ்சிக்கப்படறோம்...அடி வாங்குறோம். இதையெல்லாம் இந்த கையாலாகாத மத்திய அரசு பார்த்துக்குத்தான் இருக்குது. இப்ப சிங்கப்பூரை எடுத்துக்க....அது மலேசியாவுல ஒரு மாநிலமா இருந்து, வலுக்கட்டாயமா தனி நாடா பிரிக்கப்பட்டுச்சு. அப்படி இருந்தும் மலேசியாவுக்கான குடிதண்ணீரை சிங்கப்பூர்தான் சப்ளை செய்யுது. ஆனா, நாம ஒரே நாடா இருந்தும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்க...இதுக்கு பேசாம நாம தனி நாடாவே இருந்திடலாம்.

உஷ்...அப்படி பேசாதே....அப்புறம் பிரிவினை, இறையாண்மைன்னு சொல்லி உள்ளே பிடிச்சு போட்டுட போறாங்க...

என்ன இறையாண்மையோ....என்ன எலவோ? இதுக்கு வேற வழியே இல்லையா?

சுப்ரீம் கோர்ட்தான் ஒரே ஆறுதல்....இப்பக்கூட அணையை 120 அடியா குறைக்கக்கூடாதுன்னு கேரளா அரசுக்கு தடை போட்டுருச்சு சுப்ரீம் கோர்ட்...

என்னவோ போ.....இப்ப தமிழ்நாட்டு கவர்மெண்டையும், கேரளா கவர்மெண்டையும் கோர்ட்டுதான் நடத்துது போல...

சரியாத்தான் சொல்றே....அதுதான் உண்மை.


Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. எல்லாத்துக்குமே காரணம் மத்தி தான்!அவங்க ஆட்சிய காப்பாத்திக்க,ஓட்டு வாங்க இப்புடி சொல்லிகிட்டே போவலாம்!எதுவுமே தெரியாத மாதிரி கம்முன்னு இருக்காங்க,பாருங்க!ஒண்ணும் சரியில்லீங்க.

  ReplyDelete
 2. என்னவோ போ.....இப்ப தமிழ்நாட்டு கவர்மெண்டையும், கேரளா கவர்மெண்டையும் கோர்ட்டுதான் நடத்துது போல...சரியாத்தான் சொல்றே....அதுதான் உண்மை.

  ReplyDelete
 3. மத்திய அரசு சரியில்லை என்ன செய்வது..நம் தளத்தில்'அய்ம்புலனுக்கும் அறிவில்லை'

  ReplyDelete
 4. மத்திய அரசு சரியில்லை என்பது ஒருபுறம். தமிழ் நாட்டிலேயே இதைவிட வலுவாக குரல் எழுந்திருக்க வேண்டும். தலைவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கட்சிக் காரங்களை வெச்சு போராட்டம் நடத்தறேன்னு ஷோ காட்டறாங்க. எல்லாரும் ஒருங்கிணைஞ்சு இந்த விஷயத்துல எல்லாக் கட்சித் தொண்டர்களையும் ஒருங்கிணைச்சா... நல்ல பலன் கிடைக்கும். ஆனா... நடக்கற விஷயமா தம்பி இது? பெருமூச்சுதான் விட முடியுது!

  ReplyDelete
 5. ”சுப்ரீம் கோர்ட்தான் ஒரே ஆறுதல்....இப்பக்கூட அணையை 120 அடியா குறைக்கக்கூடாதுன்னு கேரளா அரசுக்கு தடை போட்டுருச்சு சுப்ரீம் கோர்ட்...”

  இங்க தாங்க நம்ம மரமண்டை வித்தியாசமா யோசிக்குது. அணையை 142 அடி வரை ஏத்திக்கலம். பேபி அணையின் மராமத்து பணி முடிந்தவுடன் 152 அடிக்கு பழைய நிலைக்கே உயர்த்திக்கலாம்ன்னு இதே உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை ஏன் நிறைவேற்றவில்லைன்னு கேரளாவை ஒரு காட்டு காட்டாமா... இப்ப இருக்கறதே இருக்கட்டும்ன்னு சொன்னதை வச்சு நாம சந்தோஷப் படவே கூடாது.

  ReplyDelete
 6. மன்மோகன் அரசே அனைத்திற்கும் காரணம்..

  ReplyDelete
 7. இடுக்கி பிரச்சினையால், இடிந்த கரை பிரச்சினை முதல் அனைத்து பிரச்சினையும் மறந்து விட்டான் மறத் தமிழன்...

  ReplyDelete
 8. கேரளா கவர்ன்மென்ட் முதல்ல இருந்தே.. இந்த விசயத்துல அநியாயம் தான் பண்றானுங்க.. :-(

  ReplyDelete
 9. நாம்ம ஊரில் நம்ம ஆள்கடைவச்சால் யாரும்போக மாட்டாங்க.ஆனால்
  வெலியாலுவச்சா அங்கதான்போவாங்க.ஏனா திராவிடண் என்றவார்த்தை நம்ம மனசுல பதுஜிடுசி. சிந்திக்கவேண்டிய தருணம் இது,
  இனி நாம் தமிழனாக இருப்போம்,நமக்கு திராவிடண் என்றவார்த்தை
  வேண்டாம்.தமிழன்அழித்தது எல்லாம் தோல்வியால்அல்ல, துரோகதால்தான்.

  ReplyDelete
 10. சரியா சொன்னீங்க ரஹீம்.

  ReplyDelete
 11. ரொம்ப சரியா சொன்னீங்க !!

  ReplyDelete
 12. [@]c8360481008449528322[/@]

  நல்லா சொன்னிங்க.. அதானே

  ReplyDelete
 13. //மலேசியாவுக்கான குடிதண்ணீரை சிங்கப்பூர்தான் சப்ளை செய்யுது//
  தவறான தகவல்..மலேசியாதான் சிங்கபூருக்கு தண்ணீர் சப்ளை செய்கிறது..

  சரி..
  ஒருத்தன் ஒருவனிடம் தகராறு செய்தால் தவறு யாரிடம் என்று ஆராயாலாம்...
  ஆனால் ஒருத்தனே எல்லாரிடமும் - அல்லது ஒருத்தனிடமே எல்லாரும் தகராறு செய்தால்...? அப்போ....தவறு யாரிடம் என்று சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்..
  இலங்கையில் தமிழன் தாக்கப்படுகிறான்,
  மலேசியாவில் தமிழன் தாக்கப்படுகிறான்
  கர்நாடகாவில் தமிழன் தாக்கபடுகிறான்
  கேரளாவில் தமிழன் தாக்கப்படுகிறான்
  ஆந்திராவில் தமிழன் தாக்கப்படுகிறான் என்றால் ..தவறு யாரிடம்..?
  வெறும் புனைக்கதைகளையும், காலத்துக்கு ஒவ்வாத தர்பெருமைகளையும் விட்டு விட்டு தமிழன் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளட்டும்..
  இனப்பெருமை கொள்பவன் சோம்பேறி..
  சோம்பேறி உழைக்க மாட்டான்..
  தன தவறுகளை மற்றவனிடம் சாட்டி இன வெறி கொள்வதை நிறுத்திவிட்டு தமிழன் உருப்படுகிற வழியை காணட்டும்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.