என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, December 22, 2011

18 ஜெயலலிதா புனிதரா? கைப்பாவையா?... சில சந்தேகங்கள்.....சசிகலாவை அண்ணா.தி.மு.க.,விலிருந்து வெளியேற்றியதன் மூலம் ஜெயலலிதா புனிதமடைந்து விட்டார். இதுவரை நடந்த அத்தனை தவறுகளுக்கும் சசிகலாவே காரணம் என்பதுபோல் இந்த ஊடகங்கள் எழுதித்தள்ளி வருகிறது. இது எந்த அளவில் உண்மை? என்று பார்ப்போம்.

1) அத்தனை தவறுகளுக்கும் சசிகலா தான் காரணமா?

அப்படி சொல்லமுடியாது. சசிகலாவும் ஒரு காரணம். அண்ணா.தி.மு.கவிலிருந்து வெளியேறிவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும் வைக்கும் வழக்கமான குற்றச்சாட்டு அண்ணா.தி.மு.க.,வில் சசிகலாவின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது என்பதுதான். அது அவர்களின் உள்கட்சிப்பிரச்சினை. ஆனால், பல லட்சம் மக்கள் வாக்களித்து ஆட்சிப்பொறுப்பை எற்ற ஜெயலலிதா, ஆட்சி,அதிகாரத்தில் சசிகலாவை நுழைத்ததை எப்படி ஏற்கமுடியும்?
கட்சியில் இரண்டாம் கட்டத்தலைவர்களுக்குக்கூட கிடைக்காத மரியாதை ஒரு சதாரணமான உறுப்பினரான சசிக்கு கிடைத்ததென்றால் அது ஜெயலலிதாவின் தோழி என்ற உரிமையில்தான்.
அந்த உரிமையில்தான் ஆட்சி, அதிகாரத்தில் அதிகமாக மூக்கை நுழைத்துள்ளார் சசி. அதை அப்போதே தடுத்திருக்கனும் ஜெயா. ஆனால், அப்போதெல்லாம் அனுமதித்துவிட்டு, இப்போது தனக்கு பிரச்சினை என்றதும் பழியை சசி மீது போடுவதை ஏற்க்கமுடியாது. இத்தனை தவறுகளுக்கும் சசிகலா மட்டுமே காரணம் என்று ஒத்துக்கொண்டால், ஆட்சிசெய்யத்தெரியாத, ஆட்சி செய்யமுடியாத, சசிகலாவின் கைப்பாவையாக செயல்பட்ட ஒருவரிடம் தான் 3 முறை ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துள்ளேம் என்பதையும்  நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

2) இதை ஒப்பிட்டு ஒரு குட்டிக்கதை சொல்லுங்களேன்...
ஒரு ராஜா, ஆட்சியை விட்டு இறங்கும்போது புதிதாய் பொறுப்பேற்க இருக்கும் ராஜாவை அழைத்து, ஒரு பெட்டியை கொடுத்து இதை நீ வைத்துக்கொள், ஆட்சி செய்யும்போது நிறைய பிரச்சினைகள் வரும். அப்படி வரும் பிரச்சினையை உன்னால் சமாளிக்க முடியாதபோது இந்தபெட்டியை திறந்துபார். இதில் ஒரு கடிதம் இருக்கும். அதைப்படித்து அதன்படி நடந்தால் சமாளிக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். புதிய ராஜாவும் ஆட்சிபுரிந்தார். சிலகாலத்திற்கு பின் பிரச்சினை வந்தது. அதை சமாளிக்க முடியாமல் தவித்தபோது பழைய ராஜா கொடுத்த பெட்டி நினைவுக்கு வந்தது. அந்தப்பெட்டியை திறந்து உள்ளே இருக்கும் கடிதத்தை பிரித்தான். அதில்,
எல்லாப்பிரச்சினைக்கும் காரணம் முந்தைய ராஜாதான் என்று என் மீது பழியைப்போட்டுவிட்டு நீ தப்பித்துக்கொள் என்று எழுதியிருந்தது. அதன்படி பழைய ராஜா மீது பழியைப்போட்டு  தற்போதைய ராஜா தப்பித்தானாம்.

3)இப்போது சசி இடத்தில் சோ ராமசாமி வந்திருப்பதாக செய்திகள் வருகிறதே?

யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஆட்சி,அதிகாரத்தில் தலையிடாதவரை பிரச்சினையில்லை. அப்படி தலையிட்டு வேறு ஏதாவது பிரச்சினை வந்தால், இப்போது சசி மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டுதான் சோ மீதும் வைக்கப்படும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரையும் குற்றம் சொல்வதை விடுத்து ஆட்சியையே அவர்களிடம் ஒப்படைத்து விடலாம்.

4) சசிகலா நடராஜனை ரகசியமாக சந்தித்த்தாக சொல்லப்படுகிறதே?

ரகசியமாக சந்திக்கும் அளவிற்கு நடராஜன் யாரோ அல்ல...சசியின் கணவர்.
தன் கணவரையே ரகசியமாக சந்திக்கும் அளவிற்கு   நிலைமையை கொண்டுபோனது ஆட்சி அதிகார போதையில் இருந்த சசிகலாவின் தப்பு.

5) அப்படி சந்திக்கக்கூடாது என்பது கட்சியின் கட்டுப்பாடாக இருந்திருந்தால்?
கட்சிக்கட்டுபாடு என்பது கணவன் மனைவியையுமா கட்டுப்படுத்தும். அப்படி ஒரு கட்டுப்பாடு விதித்ததும் அதை எதிர்த்து அப்போதே சசி குரல் கொடுத்திருக்க வேண்டும். கணவரைவிட அதிகாரம்தான் முக்கியம் என்று அப்போது அமைதியாக இருந்ததால் தான்  இப்படி. ஆனால் ஒன்று சசிகலா நடராஜனை மட்டுமல்ல
தாமரைக்கனிக்கு எதிராக அவர் மகன் இன்பத்தமிழனையே கொம்பு சீவி விட்டவர் ஜெயா....தாமரைக்கனி மறைவிற்கு பின் இன்பத்தமிழன் காணாமல் போய்விட்டார்.
அதுபோல சொல்லின்செல்வர் என்று அழைக்கப்பட்ட ஈ.வி.கே.சம்பத்தின் மனைவியான சுலோச்சனா சம்பத்தை தன்கட்சியில் வைத்துக்கொண்டு, அவர் மகனான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக பேச வைத்ததும் ஜெ.,தான். என் மகனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சுலோச்சனா சம்பத் கூறினார். இப்படி கட்சி கட்டுப்பாடு என்ற முறையில் நிறையவே நடந்திருக்கிறது. அதேநேரம் கட்சிக்கட்டுப்பாடு குடும்பத்தை பிரிக்குமளவிற்கு பதவி சுகமும், அதிகார போதையும் அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது என்றும் சொல்லலாம்.

6)  நடராஜனையும் நீக்கிவிட்டதாக சொல்லியிருக்காரே ஜெ?
இதுதான் எனக்கு புரியவில்லை. அவரை ஏற்கனவே நீக்கியதாக சொல்லியவர் ஜெ... மறுபடியும் நடராஜன் எப்போது கட்சியில் சேர்ந்தார் என்று தெரியவில்லை.  நீக்கியவரையே இன்னொறு முறை நீக்கும் காமெடி  இங்குதான் நடக்கிறது.

7)இனிமேல் யாரும் சசி குடும்பத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவித்திருக்காரே?

அப்படின்னா டாஸ்மாக்கே இயங்காதே...சரக்கு சப்ளை செய்யும் மிடாஸ் நிறுவனம் சசிகலாவுக்கு சொந்தமானது என்றுதானே சொல்லுகிறார்கள்.


 Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. வணக்கம்,சார்!என்னமோ போங்க.எல்லாருக்குமே இந்தப் பிரச்சினை "அவலாத்"தான் போயிட்டுது!

  ReplyDelete
 2. ஆனது ஆகிப்போச்சு..இனிமேல் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்..


  அன்போடு அழைக்கிறேன்..

  இறப்பதை எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 3. ///ஆட்சிசெய்யத்தெரியாத, ஆட்சி செய்யமுடியாத, சசிகலாவின் கைப்பாவையாக செயல்பட்ட ஒருவரிடம் தான் 3 முறை ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துள்ளேம் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.///

  இப்படி எடக்கு மடக்கா கேள்விக் கேட்டு ஓட்டுப் போட்ட எல்லாரையும் சிக்க வைக்கறீங்களே தலைவா..!!!

  ReplyDelete
 4. ம்.. 'மதுமதி' சொல்றமாதிரி என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமே..! ஹா..ஹா.

  அதான் நான் இந்த அரசியல் விளையாட்டுக்கே வர்றதில்லை...!!!

  ReplyDelete
 5. குழப்பமான சூழ்நிலையே நீடிக்கிறது...
  அம்மாவின் அமைச்சரவையை மாற்றி அமைத்தார்...

  அதில் சில அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் ஏன் மாற்றப்பட்டோம் என்று அவர்களுக்கு கூட தெரியால் இருக்கலாம்...

  இந்த நிகழ்ச்சியும் வலுவான காரணங்கள் தெரியாமல் யுகங்கள் பல எழுகிறது...

  இன்னும் என்ன நடக்கிறது பொருத்திருந்து பார்ப்போம்

  ReplyDelete
 6. ஜெ. வுக்கு தெரியாமல் சசியால் மறைமுக வேலைக்ள நடைப்பெற்றது என்பதை எனனால் ஏற்றுக்கொள்ள முடியாது...

  அம்மாவிற்கு தெரியாமல் அனுவும் அசையாது.. கட்சிக்குள்

  ReplyDelete
 7. //அப்படின்னா டாஸ்மாக்கே இயங்காதே...சரக்கு சப்ளை செய்யும் மிடாஸ் நிறுவனம் சசிகலாவுக்கு சொந்தமானது என்றுதானே சொல்லுகிறார்கள். ////

  முந்தைய ஆட்சிக்காலத்தில் ஐந்து சதவிகித சரக்கு சப்ளை, இப்போ 35% சரக்கு சப்ளை....மிடாஸ் எப்பவுமே கலக்குது...

  #யோவ், மிடாஸ் சரக்குள குவாலிட்டி இல்லையா!!!!

  :-)

  ReplyDelete
 8. // குழப்பமான சூழ்நிலையே நீடிக்கிறது...
  அம்மாவின் அமைச்சரவையை மாற்றி அமைத்தார்...

  அதில் சில அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் ஏன் மாற்றப்பட்டோம் என்று அவர்களுக்கு கூட தெரியால் இருக்கலாம்...

  இந்த நிகழ்ச்சியும் வலுவான காரணங்கள் தெரியாமல் யுகங்கள் பல எழுகிறது...

  இன்னும் என்ன நடக்கிறது பொருத்திருந்து பார்ப்போம்

  22-Dec-2011 2:09:00 PM
  Blogger கவிதை வீதி... // சௌந்தர் // said...

  ஜெ. வுக்கு தெரியாமல் சசியால் மறைமுக வேலைக்ள நடைப்பெற்றது என்பதை எனனால் ஏற்றுக்கொள்ள முடியாது...

  அம்மாவிற்கு தெரியாமல் அனுவும் அசையாது.. கட்சிக்குள்////

  நீங்க இன்னும் வளரணும் சாரே!!!

  ReplyDelete
 9. உங்கள் செடிக்கு எனது உரம் : நன்று!

  ReplyDelete
 10. கொஞ்ச நாளைக்கு பதிவுக்கு விஷயத்துக்குப் பஞ்சமில்லை!

  ReplyDelete
 11. ல‌ஷ்ம‌ண் கோட்டை தாண்டுவ‌து சீதைக்கே கேடாக் முடிந்த்து. முக வின் குடும்ப‌ங்க‌ள் பாச அலை க‌ரை தாண்டிய‌தால் தான் ம‌க்க‌ள் த‌ண்டித்தார்க‌ள். அவ‌ர்க‌ளின் (மூத்த அமைச்ச‌ர்க‌ள் முத‌ல் க‌வின்சில‌ர்க‌ள் வ‌ரை) அதிகார போதையில் வாங்கிய‌ க‌ல்லூரிக‌ளும், நில‌ங்க‌ளும், சொத்துக்க‌ளும் எல்லை மீறிய‌ போதுதான் ம‌க்க‌ள் இத்தோடு இவ‌ர்க‌ள் போதும் என ஆட்சியை மாற்றினார்க‌ள்.
  கொட‌நாட்டில் ஓய்வெடுத்த‌ ஜெயாவை கோட்டைக்கு அனுப்பிய‌து ம‌ன்னார்குடி கும்ப‌ல் அல்ல‌, த‌மிழ‌க ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள். கால‌ம் ஜெயாவிற்கு பாட‌ம்புக‌ட்டி இருக்கிற‌து. ம‌ன்னார்குடி கும்ப‌ல் "ப‌ழைய‌ குருடி க‌த‌வை திறடின்னு" அதிகார‌ துஷ்பிர‌யோக‌ம் செய்ய‌த் தொட‌ங்கிய‌ செய்தியும், ஜெயாவுக்கு மாற்றாய் (பெங்க‌ளுரு வ‌ழக்கில் உள்ளே போனால்) எந்த‌ கைப்புள்ளையை த‌யார் செய்வது என்கிற‌ அளவிற்கு போன‌ துரோக‌த்தைத்தான் ச‌கோத‌ரியால் ஜீர‌ணிக்க‌ முடியாது, தூக்கியெறியும் அளவுக்கு த‌டால‌டி மாற்ற‌ம் வ‌ந்தது. (த‌ங்க‌ முட்டையிடும் வாத்து க‌தை இங்கும் எங்கும் எப்போதும் பொருந்தும். அதே போல் "மாற்ற‌ம் ஒன்றே மாற்றமில்லாதது" என்ற பொன்மொழியும் வாழ்க‌கை முழுவ‌தும் (வாழ்)வ‌ந்து கொண்டே இருக்கும்.

  ReplyDelete
 12. நல்ல கேள்விகள் .. ஆனால் பதில் ?

  ReplyDelete
 13. Azhagana Nadai Ungalukku. Super post. Athilum antha Kutti Kathai migavum arumai.TM 8.

  ReplyDelete
 14. வாழ்க்கையில் தான் செய்த தவறுகளை ஒரு மாய எரேசரில் அழித்து முதலிலிருந்து தொடங்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் ஜெயாவிற்கு. பயன்படுத்திக்கொள்கிறாரா பார்ப்போம்!

  ReplyDelete
 15. கொஞ்ச நாளைக்கு பதிவுக்கு விஷயத்துக்குப் பஞ்சமில்லை!

  ReplyDelete
 16. சகோ!
  பதிவு அருமை!
  என்னமோ நடக்குது நடக்கட்டுமே!
  எதிர் காலத்தில் அனைத்தும் புரியட்டுமே!

  த ம ஓ 8

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் போல தெரிகிறது... பதிவு சூப்பரப்பு...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.