என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, December 26, 2011

4 சு.........னா.........மி - சில நினைவுகள்.......
நான் அப்போது மலேசியாவில் சிரம்பான் என்ற பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். டிசம்பர் 26- ஆம் தேதி காலை சென்னையிலிருக்கும் என் நண்பரிடம் பேசுவதற்காக போன் செய்தேன். அதுவும் எதார்த்தமாக.....

அப்போதுதான் அவர் அந்த விஷயத்தை சொன்னார். சென்னையில் கடல் கடுமையாக கொந்தளித்து விட்டது. மெரினாவிற்கு அருகிலிருக்கும் இடங்களிலெல்லாம் கடல் நீர் புகுந்துவிட்டது. எல்லாம் மிதக்கிறது என்றார். அப்போதெல்லாம் நமக்கு சுனாமி என்ற பெயர் பரிச்சயமானதில்லை என்பதால் கடல் கொந்தளிப்பு என்றே சொன்னார். சாதாரணமான விஷயமாகவே அதை எடுத்துக்கொண்டேன். நிலைமையின் வீரியம் அப்போது எனக்கு புரியவில்லை. எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான மக்களுக்கும் தான்.

அதன்பிறகு வந்த செய்தியெல்லாம் விபரீதமாகவே வந்துகொண்டிருந்தது. இது சென்னையில் மட்டுமல்ல....உலக அளவில் ஏறத்தாழ நிறைய நாடுகளில் இப்படி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது என்று செய்திகள் வந்தவாறு இருந்தது. இதற்கு என்ன பிரச்சினை என்று பார்த்தபோது இந்தோனேசியாவிலிருக்கும் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வந்ததன் தொடர்ச்சிதான் இது என்பதாகவும், அதற்கு சுனாமி என்றும் ஒரு விளங்காத பெயரையும் சொன்னார்கள். சுனாமியை ஆழிப்பேரலை என்று தமிழ்படுத்தியும் சொன்னார்கள்.

எனக்கு தெரிந்த இந்தோனேசியா நண்பர்களிடம் விசாரித்தபோது அங்கு அடிக்கடி இப்படி நிலநடுக்கம் நடப்பது வாடிக்கையான ஒன்று இந்த நிலநடுக்கத்தை ஒரு வழக்கமான நிகழ்வாகவே பார்த்தார்களே தவிர சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.சுனாமி என்ற பெயரையெல்லாம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதன்பிறகே அவர்களுக்கும் அது உரைத்தது. ஆங்காங்கே சீனர்கள் கூடி சுனாமியை பற்றி விவரித்தவண்ணம் இருந்தனர். சுனாமியை என்றால் என்னவென்று அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. அனைத்து இடங்களிலும் சுனாமியை பற்றியே பேச்சாக இருந்தது. நேரம் கூட,கூட சாவு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது.
இந்தோனேசியாவில் அதிக உயிரிழப்பு என்று சொன்னார்கள் தொலைக்காட்சிகளில்...

சென்னை, வேளாங்கன்னி, நாகப்பட்டிணம் போன்ற தமிழக கடற்கரை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள் தமிழக நண்பர்கள்.

மலேசியா ஒரு தீவாக இருந்தபோதிலும் சுனாமியால் அதிகம் பாதிக்காத அதிகம் உரியிழப்பு இல்லாத நாடாக இருந்ததில் மலாய்காரர்கள் முகத்தில் நிம்மதி.
அதேநேரம், மலேசியாவிலிருந்து இந்தோனேசியா உட்பட பல நாடுகளில் படிக்க, சுற்றுலா போனவர்களை பற்றிய கவலையும் அவர்களுக்கு தொற்றியது. அன்றைய பொழுதும் அதற்கடுத்த ஒரு வாரப்பொழுதும் மிகவும் கவலையாக கழிந்தது எனக்கு....

சுனாமி என்ற பெயரையே அறிந்திடாத மக்களின் மனதில் அந்தப்பெயர் அழிக்கவே முடியாமல் பச்சை குத்தப்பட்ட நாள் அது. சுனாமியின் கோரத்தாண்டவத்தை இன்னும் எத்தனை நாள் கழித்தாலும் மறக்கவே முடியாது. ஆற்றவே முடியாத ரணம் அது.


பாரிஸ் தமிழ் பரிசு போட்டி....
 மேலும் விபரங்களுக்கு....
இந்த லிங்கை கிளிக்கவும்
Post Comment

இதையும் படிக்கலாமே:


4 comments:

 1. வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு - நினைத்தாலே தூங்க முடியாது - சுனாமி .

  ReplyDelete
 2. ஆம் நண்பரே சுனாமியின் கோர தாண்டவத்தை எத்துனை நாள் ஆனாலும் மறக்கவே முடியாது.

  ReplyDelete
 3. அது நிகழ்ந்த போது நான் சென்னையில்தான் இருந்தேன் பிரதர். அதுவும் திருவல்லிக்கேணியில். எங்கே சுனாமி நம்மையும் தாக்கிவிடுமோ என்ற பீதியும், பாதிப்பை நேரில் பார்த்ததில் சோகமும்... வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் அது.

  ReplyDelete
 4. சுனாமி வந்த நாளை கண்டிப்பா யாராலும் மறக்க முடியாது., படத்த பார்த்தாலே இன்னும் பதட்டமா இருக்கு/

  எத்தனை குடும்பஙகள் சின்னாபின்னாமாக ஆனது அப்ப..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.