என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, January 16, 2012

13 கண்ணதாசனின் வனவாசமும்- ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலமும்.......35-ஆவ்து புத்தக கண்காட்சியை திருவிழாவை நடத்தும் BAPASI கூட யாரையும் இப்படி அழைத்திருக்காது, அதை விட அதிகமாகவே என்னை அழைத்தான் பிரபல பதிவர் வடை பஜ்ஜி தள அதிபர் நண்பன் சிராஜ். தினமும் போன் போட்டபடி இருந்தான்.
சரி, புத்தக திருவிழாவிற்கு போவோம் என்று ஒருவழியாக முடிவுசெய்து, வியாழக்கிழமை எங்கள் ஊரிலிருந்து சென்னைக்கு கிளம்பினேன். சில புத்தகங்கள் வாங்கவேண்டும் என்ற பட்டியலுடன்.

வெள்ளிக்கிழமை காலை சிராஜுடன் அவன் இல்லம் சென்றேன்.மதியத்திற்கு பின் புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திற்கு நாங்கள் இருவரும் சென்றோம். வார நாட்களிலும் கடுமையான கூட்டம். இன்று இணையத்தளங்களில் பல புத்தகங்கள் pdf  ஃபைலாக கிடைத்தாலும், அதையெல்லாம் மீறி, மக்களிடம் வாசிப்பு பழக்கம் இன்னும் குறையவில்லை என்று பார்த்தவுடன் புரிந்தது. அனைவர் கைகளிலும் புத்தகங்களை தாங்கிய பை சின்னதும், பெரிதுமாய்.....
வாசிப்பு பழக்கம் வாழ்க...

அங்கு யார் யாரை சந்தித்தேன் என்று அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

இப்போது, நான் வாங்கிய புத்தகங்களை பார்த்துவிடுவோம்.

புத்தகத்தின் பெயர் ஆசிரியர் வெளியீடு விலை
பொன்னியின் செல்வன் கல்கி நக்கீரன் 275
 மரண வாக்குமூலம் ஆட்டோ சங்கர் நக்கீரன் 225
ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி சுதர்சன் புக்ஸ் 35
வனவாசம் கண்ணதாசன் கண்ணதாசன் பதிப்பகம் 120
மனவாசம் கண்ணதாசன் கண்ணதாசன் பதிப்பகம் 80
தாயார் சன்னதி சுகா சொல்வனம் 180
மூங்கில் மூச்சு சுகா விகடன் 95
பொக்கிஷம் ரவிபிரகாஷ்,ராஜா(தொகுப்பாளர்) விகடன் 180
காலப்பெட்டகம் ரவிபிரகாஷ்,ராஜா(தொகுப்பாளர்) விகடன் 180
எம்.ஜி.ஆர்.,ஜெயா..இருவர்கதை திருநாவுக்கரசர் நக்கீரன் 65
தெர்மாக்கோல் தேவதைகள் கேபிள் சங்கர் உ பதிப்பகம் 50
அழிக்கப்பிறந்தவன் யுவகிருஷ்ணா உ பதிப்பகம் 50
(அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு)

கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். (இதை நான் முன்பே படித்திருந்தாலும், தொலைந்துவிட்டது) .அந்த புத்தகம் டிஸ்கவரி புக் பேலசில்(ஸ்டால் எண்: 334) கிடைத்ததில் மகிழ்ச்சி. அதைப்போல ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம். நக்கீரனில் அப்போது தொடராக வெளிவந்து மிகுந்த பரபரப்பை கிளப்பியது. நான் அப்போதே தொடர்ச்சியாக படித்திருந்தாலும், ஒரு தொகுப்பாக இப்போது கிடைத்தது. அதையும் வாங்கிக்கொண்டேன். இந்த இரு புத்தகங்களும்  நான் முன்பே எழுதிக்கொண்டுபோன பட்டியலில் இல்லாதது. 

இன்னும் கொல் சொல்வோம்ல.......===============================Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. // திருநாவுக்கரசரின் இருவர் கதை( எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றியது) (ரூ:65)//

  இந்த நூல் எந்த பதிப்பகம் என்று சொல்லமுடியுமா?

  ReplyDelete
  Replies
  1. நக்கீரன் பதிப்பகத்தில் கிடைக்கிறது தலைவரே....////

   Delete
 2. இந்த கதை ஒருவாரம் ஓடுமோ...

  ReplyDelete
  Replies
  1. ஆமா....ஓட்டிட வேண்டியதுதான்

   Delete
 3. படித்தபின்,புத்தகங்கள் பற்றியும் எழுதுங்கள்

  ReplyDelete
 4. சுகாவின் எழுத்து அருமையாக இருக்கும் தம்பி. படிச்சுப் பாருங்க. அவரோட ரெண்டு புத்தகம், விகடன் பொக்கிஷம் எலலாம் நானும் வாங்கினேன். படிச்சுட்டு விமர்சனம் போடுங்க. காத்திருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்..சார். சுகாவின் மூங்கில் மூச்சை சமீபத்தில் ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே படித்துவிட்டேன். தாயார் சன்னதி நன்றாக இருக்குமென கேபிள் சங்கர் சொன்னதால் வாங்கினேன்.

   Delete
 5. வடை பஜ்ஜி தள அதிபரா? அடுத்து பிரதமர், கவர்னர் கூட வருவாங்க போல..

  ReplyDelete
  Replies
  1. கூகுள் புண்ணியத்தில் இதிலாவது அதிபராக இருந்துட்டு போவோமே

   Delete
 6. நீங்கள் வாங்கியதில் பாதி புத்தகங்களை நானும் வாங்கி உள்ளேன். தெர்மக்கோல் தேவதைகள், அழிக்கப் பிறந்தவன் விமர்சனம் போடுங்க. வைட்டிங்.

  ReplyDelete
  Replies
  1. புத்தக விமர்சனங்கள் வரும் ஆனால், வராது.....

   Delete
 7. //ரஹீம் கஸாலிJan 16, 2012 05:32 AM
  புத்தக விமர்சனங்கள் வரும் ஆனால், வராது.....//

  இது என்ன புதிர்?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.