என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, January 10, 2012

58 எங்காவது பார்த்ததுண்டா இப்படி ஒரு பாலத்தை?.....வழக்கமாக ஆற்றின்மேல் பாலத்தை பார்த்திருப்பீர்கள். பாலத்தின் மேல் ஆறு பார்த்திருக்கிறீர்களா? அல்லது கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?
பாலத்தின் மேல் தண்ணீர் ஒடும் உல்டாவான பாலத்தைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

பார்க்க ஒரு அணைக்கட்டு போல காட்சியளிக்கும் இந்தப்பாலத்தின் மேல்புறம் தண்ணீர் ஓடும். அப்படியானால் கீழே?.... விவசாயத்திற்காக இந்த பாலத்தின் மேல் ஓடும்  நீரை இரு மதகுகளின்(shutter) வழியே திறக்கப்பட்டு அது கீழே ஊற்றும். அதுவும் ஒரு பக்கம் மட்டுமே... மற்ற பக்கங்களில் ஆடு, மாடு மேய்ந்து கொண்டிருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான பாலம் இது.


 மதகு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு ஊற்றுகிறது
விவசாயத்திற்காக, திறந்து விடப்படும் நீர் ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து ஒரு நீர்வீழ்ச்சியைப்போல ஊற்றும். அதில் தலையை நனைத்தால் மினி குற்றாலத்தில் குளிப்பதுபோல இருக்கும். இதை படித்ததும் அப்படிப்பட்ட பாலம் எங்கிருக்கிறதென்று அறிய ஆவலாக இருக்கிறதா? அந்த பாலத்தை பார்க்க ஆசையாக இருக்கிறதா?

 இது பாலத்தின் கீழ் புறம்
அப்படியானல் நீங்கள் எங்கள் ஊரான அரசர்குளத்திற்குத்தான் வரவேண்டும். ஆம்...அப்படிப்பட்ட பாலம் எங்கள் ஊரில் தான் இருக்கிறது. ஏறக்குறைய எட்டு மாதம் இப்படி தண்ணிர் ஓடும். தினமும் எங்கள் குளியல் இங்குதான். ஆர்ப்பரிப்புடன் ஓடும் இந்த தண்ணீரை எதிர்த்து நீந்துவதே ஒரு உடற்பயிற்சிதான். இங்கு குளித்தால் நேரம் போவதே தெரியாது. கரை ஏறவும் மனம் வராது.

பாசனத்திற்காக மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணையை வந்தடைந்து அங்கிருந்து பல கிளை ஆறுகளாக பிரியும். அப்படி பிரியும்
எத்தனையோ கிளை ஆறுகளில் எங்கள் ஊர் ஆறும் ஒன்று....எங்கள் ஊர் வழியாக செல்லும் இந்த ஆறு, பக்கத்தில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கடலில் கலக்கிறது. இத்தனை அருமையான இந்த பாலம் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


58 comments:

 1. அப்ப இப்பவே கிளம்பி அரசர்குளம் வந்துடலாமா தோழர்..பாலம் பார்ப்பதற்கு அழகு..படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி..த.ம-3சந்தேகம்

  ReplyDelete
 2. மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. உடனே பார்க்கணும்னும் தோணுது. தெளிவான படங்களுடன் விளக்கியது அருமை.

  ReplyDelete
 3. நம்ம ஊரின் பெருமையை உலகறிய செய்து விட்டீர்கள்....நன்றிண்ணே...

  ReplyDelete
 4. { NKS.ஹாஜா மைதீன் }said...

  நம்ம ஊரின் பெருமையை உலகறிய செய்து விட்டீர்கள்....நன்றிண்ணே...

  [ma]நமது ஊரை சேர்ந்த நீ, சிராஜ் எல்லாம் பிரபல பதிவரா இருக்கீங்க....உங்களுக்கு இந்த ஐடியா வரல..... எனக்கு வந்துச்சு. அதான் பதிவிட்டுவிட்டேன். எப்படியோ ஒரு பதிவு தேறிடுச்சு....பதிவுக்கு பதிவுமாச்சு....பாலத்தை பிரபல படுத்தியதும் போலாச்சு...[/ma]

  ReplyDelete
 5. வியப்பு மேலிடச் செய்து விட்டீர்கள். அந்த ஆறு, பாலம் இவைகளின் பெயர்களை எப்ப சொல்வீங்க?

  ReplyDelete
 6. படங்களுடன், உங்கள் ஊரின் பெருமையையும், ஆற்றில் குளிக்கும் சுகத்தையும், அனுபவத்தையும் பதிவிட்டமை ரசிக்கும்படியாக இருந்தது.. நன்றி கஸாலி அவர்களே..!!

  நீங்கள் எடுத்த படங்களா இவை? நன்றாக வந்திருக்கிறது.

  ReplyDelete
 7. { NIZAMUDEEN } said..
  வியப்பு மேலிடச் செய்து விட்டீர்கள். அந்த ஆறு, பாலம் இவைகளின் பெயர்களை எப்ப சொல்வீங்க?

  பெயரை குறிப்பிட மறந்துவிட்டேன். மன்னிக்கவும். இந்த பாலம் 18 தூண்களை கொண்டு அமைக்க பட்டிருப்பதால் 18-ஆம் பாலம் என்று அழைப்போம். கல்லணை கால்வாய் என்று இந்த ஆற்றிற்கு பெயர்.

  ReplyDelete
 8. ஆமாம்...தங்கம் ப்ழனி இந்த புகைப்படங்களை இன்று காலையில் குளிக்கப்போகும்போது நான் தான் எடுத்தேன்

  ReplyDelete
 9. வாருங்கள் தோழர் மதுமதி சேர்ந்து குளிக்கலாம்...ஆமா... நீச்சல் தெரியும்தானே?

  ReplyDelete
 10. வருகைக்கு நன்றி கணேஷ் அண்ணா...
  வாருங்கள் பார்க்கலாம். பிப்ரவரி வரை தான் தண்ணீர் ஓடும். அதன்பின் ஜூலையில் தான் தண்ணீர் வரும்.

  ReplyDelete
 11. வியப்பு

  அரசர் குளத்தில் அதிசயம்

  வெள்ளைகாரன்!?

  ReplyDelete
 12. மிக அருமை நண்பரே. இந்த படமே கண்ணுக்கு குளிச்சியாக உள்ளது. இதே மாதிரியான பாலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. அதன் பெயர் தொட்டிப்பாலம்.

  ReplyDelete
 13. அரசர்குளத்திற்கு பெங்களூலிருந்து எப்படி செல்வது நன்பரே؟

  ReplyDelete
 14. நான் முடிவு பண்ணிட்டேன்ங்க..

  அரசகுளம் வந்தால் உங்களை அடுத்து இந்த பால ஆற்றில் குளிக்க வேண்டும் என்பதே...

  ReplyDelete
 15. பாலா said...

  மிக அருமை நண்பரே. இந்த படமே கண்ணுக்கு குளிச்சியாக உள்ளது. இதே மாதிரியான பாலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. அதன் பெயர் தொட்டிப்பாலம்.////
  அப்படியா? அப்படியானால் எங்கள் ஊருக்கு போட்டியாக அங்கும் ஒரு பாலம்.

  ReplyDelete
 16. Karthik Vasudhevan said...

  அரசர்குளத்திற்கு பெங்களூலிருந்து எப்படி செல்வது நன்பரே////

  அரசர்குளம், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், பெங்களூர்

  ReplyDelete
 17. 8 மாதம் நீர்வருமெனில் கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்.

  ReplyDelete
 18. "என் ராஜபாட்டை"- ராஜா said...

  ஆசார்யமான செய்தி///

  ஆம்... நண்பரே...வருகைக்கு நன்றி

  ReplyDelete
 19. மனசாட்சி said...

  வியப்பு

  அரசர் குளத்தில் அதிசயம்

  வெள்ளைகாரன்!?////

  வருகைக்கு நன்றி மனசாட்சி

  ReplyDelete
 20. கவிதை வீதி... // சௌந்தர் // said...

  நான் முடிவு பண்ணிட்டேன்ங்க..

  அரசகுளம் வந்தால் உங்களை அடுத்து இந்த பால ஆற்றில் குளிக்க வேண்டும் என்பதே...////

  தாராளமாக குளிங்க... யாரு கேட்கப்போறா?

  ReplyDelete
 21. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

  8 மாதம் நீர்வருமெனில் கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்.

  ஆம் நண்பரே....எங்கள் பகுதி விவசாய பகுதி என்பதால் ஜூன் மத்தியிலிருந்து பிப்ரவரி வரை தண்ணீர் வரும்.

  ReplyDelete
 22. அருமையான பதிவு ஆசையா இருகுங்க வந்து பர்ர்க்கவேண்டும் போல

  ReplyDelete
 23. ஸலாம் சகோ.கஸாலி,
  மிக அருமையான பதிவு.

  பொதுவாக ஜெர்மனியில் உள்ள Magdeburg Water bridge பாலத்தைத்தான் எடுத்து போட்டுள்ளீர்களோ என்றுதான் நினைத்து வந்தேன்.

  ஆனால், அது போன்ற ஒன்று நம் நாட்டில் அதற்கு முன்பிருந்தே இருக்கிறது என்பது எனக்கு இப்போதான் தெரியும்.மிக்க நன்றி சகோ.

  அந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம் அரசியல்வாதிகளை விட அதிகமாக நல்ல காரியங்களை நீர்ப்பாசன விஷயத்தில் செய்து இருக்கிறார்கள்.

  அவர்கள் செய்யாமல் மறந்து விட்ட ஒரு விஷயம் வட-தென் நதி நீர் இணைப்பு.

  இனி... என்று நிறைவேறுமோ..?

  ReplyDelete
 24. [@]c686284730292521937[/@]
  நன்றி கஸாலி!

  ReplyDelete
 25. வித்தியாசமான பாலம்தான்
  அருமையாக படத்துடன் விளக்கி இருக்கிறீர்கள்
  இல்லையெனில் புரிவது கடினமே
  ஒரு நல்ல பதிவு தர தாங்கள் எடுத்துக் கொண்டுள்ள
  சிரமங்கள் பிரமிப்பூட்டுகிறது
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. அழகிய படங்கள்! அதிசயமான ஆறு.

  ReplyDelete
 27. இது போன்ற ஒரு பாலம் குமரி மாவட்டம் வில்லுக்குரி என்ற இடத்தில் உள்ளது!

  ReplyDelete
 28. வித்தியாசமான பாலம்தான்.போட்டோஸ் நல்லாருக்கு.

  ReplyDelete
 29. இதே போல நாகர்கோவில் பக்கத்துல மாத்தூர்ங்கற இடத்துல தொட்டிப்பாலம் இருக்கு அதுவும் பாக்க ரம்மியமா இருக்கும்.

  ReplyDelete
 30. sasikala said...

  அருமையான பதிவு ஆசையா இருகுங்க வந்து பர்ர்க்கவேண்டும் போல///
  வாருங்கள் சகோ

  ReplyDelete
 31. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

  ஸலாம் சகோ.கஸாலி,
  மிக அருமையான பதிவு.

  பொதுவாக ஜெர்மனியில் உள்ள Magdeburg Water bridge பாலத்தைத்தான் எடுத்து போட்டுள்ளீர்களோ என்றுதான் நினைத்து வந்தேன். ////

  அங்கெல்லாம் போகத்தேவையில்லை. எங்கள் ஊருக்கு வந்தாலே போதும்

  ReplyDelete
 32. [@]c686284730292521937[/@]
  நன்றி கஸாலி!

  10-Jan-2012 6:05:00 PM
  Delete
  Blogger Ramani said...

  வித்தியாசமான பாலம்தான்
  அருமையாக படத்துடன் விளக்கி இருக்கிறீர்கள்
  இல்லையெனில் புரிவது கடினமே
  ஒரு நல்ல பதிவு தர தாங்கள் எடுத்துக் கொண்டுள்ள
  சிரமங்கள் பிரமிப்பூட்டுகிறது
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்///

  தங்கள் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி

  ReplyDelete
 33. சுவனப்பிரியன் said...

  அழகிய படங்கள்! அதிசயமான ஆறு./////

  ஆமாம் சகோ

  ReplyDelete
 34. சென்னை பித்தன் said...

  இது போன்ற ஒரு பாலம் குமரி மாவட்டம் வில்லுக்குரி என்ற இடத்தில் உள்ளது!////

  அப்படியா....அறிய தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 35. கோகுல் said...
  வித்தியாசமான பாலம்தான்.போட்டோஸ் நல்லாருக்கு.
  இதே போல நாகர்கோவில் பக்கத்துல மாத்தூர்ங்கற இடத்துல தொட்டிப்பாலம் இருக்கு அதுவும் பாக்க ரம்மியமா இருக்கும்.///

  இன்னும் எத்தனை பாலம் தான் எங்கள் ஊருக்கு போட்டியாக இருக்கிறது என்று பார்க்கலாம்

  ReplyDelete
 36. கஜாலி நானா,
  சிறுவயது நினைவுகள் இதமாக வருடிச் செல்கின்றது. நாம் அந்த ஆற்றில் குளித்த நாட்கள், நீச்சல் ஆட்டம் பாட்டம் எல்லாம் நினைவில் நிற்கிறது. உன் கட்டுரையை பார்த்தவுடன் என் மகனையும் அங்கே கூட்டிச் சென்று பழக்க வேண்டும் என்று உறுதி எடுத்து உள்ளேன். இல்லாவிட்டால் மண்ணின் மணத்தை மறந்து விடுவான். மாதம் ஒரு முறை அல்லது அதிக பட்சம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நான் குடும்பத்துடன் ஊருக்கு வர அதுவும் ஒரு காரணம். இல்லாவிட்டால் இந்த தலைமுறை தாய் மண்ணை மறந்து விடுவார்கள்.

  ReplyDelete
 37. Padangalum Seithiyum migavum arumai Gazzali Sir!

  Ithe pola thaan Maaththur Thotti Paalam nu Kanyakumari District la irukku. Vanthaa vaanga. Koottittu poren.

  ReplyDelete
 38. [@]c2253221996285508029[/@]
  I suppose it is what is called."AQUEDUCT"

  ReplyDelete
 39. படங்களும் பதிவும் உடனே அரசர்குளத்துக்கு வரச்சொல்லுதே.

  ReplyDelete
 40. எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டில்பாலம்

  மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது இந்தப் பாலம். இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இப்படி மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.

  தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.

  1971 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலமாகும். இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம்.

  ReplyDelete
 41. நாகர்கோயில் பக்கம் ஒரு பெரிய தொட்டி பாலம் பார்த்து இருக்கிறேன். இந்த பாலமும் அருமையாக உள்ளது.

  ReplyDelete
 42. படங்களுடன் பகிர்வு அருமை..பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 43. [im]http://1.bp.blogspot.com/_RNZE4i7v6tA/TUQ639cncQI/AAAAAAAAAJ8/ijQ8eHD_N_c/s1600/MATHOO4.JPG[/im]

  இதுதான் அந்த மாத்தூர் தொட்டிப்பாலம். ஆனால், இந்த பாலத்தில் குளிக்கமுடியாது என்றே நினைக்கிறேன். ஆனால், எங்கள் ஊர் பாலத்தில் நன்றாக நீச்சலடித்து குளிக்கலாம். தடையில்ல்லை. இங்கு குளிப்பதற்கு லாவகமாக நீந்தவும் தெரிய வெண்டும். இல்லாவிட்டால் வேகமாக ஓடும் நீரின் சுழற்சியில் சிக்கி மாட்டிக்கொள்ள நேரிடும்.

  ReplyDelete
 44. { சிராஜ் } said...

  கஜாலி நானா,
  சிறுவயது நினைவுகள் இதமாக வருடிச் செல்கின்றது. நாம் அந்த ஆற்றில் குளித்த நாட்கள், நீச்சல் ஆட்டம் பாட்டம் எல்லாம் நினைவில் நிற்கிறது. உன் கட்டுரையை பார்த்தவுடன் என் மகனையும் அங்கே கூட்டிச் சென்று பழக்க வேண்டும் என்று உறுதி எடுத்து உள்ளேன். இல்லாவிட்டால் மண்ணின் மணத்தை மறந்து விடுவான். மாதம் ஒரு முறை அல்லது அதிக பட்சம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நான் குடும்பத்துடன் ஊருக்கு வர அதுவும் ஒரு காரணம். இல்லாவிட்டால் இந்த தலைமுறை தாய் மண்ணை மறந்து விடுவார்கள்.///

  நீ மட்டுமல்ல.... வெளி நாட்டில் செட்டிலாகிவிட்ட எத்தனையோ பேர்கள் வருடம் ஒரு முறையாவது நம் ஊருக்கு வருவது நம் ஊரும், வேரும் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

  ReplyDelete
 45. துரைடேனியல் said...

  Padangalum Seithiyum migavum arumai Gazzali Sir!

  Ithe pola thaan Maaththur Thotti Paalam nu Kanyakumari District la irukku. Vanthaa vaanga. Koottittu poren.///

  வருகைக்கு நன்றி நண்பரே...மாத்தூர் தொட்டிப்பாலத்தை பார்க்க எனக்கும் ஆவல்தான்.

  ReplyDelete
 46. suji said...

  [@]c2253221996285508029[/@]
  I suppose it is what is called."AQUEDUCT"////

  ஆம்...உண்மைதான். இதை வாய்க்கால் என்றோ கால்வாய் என்றோதான் அழைப்போம்

  ReplyDelete
 47. suji said...

  [@]c2253221996285508029[/@]
  I suppose it is what is called."AQUEDUCT"////

  ஆம்...உண்மைதான். இதை வாய்க்கால் என்றோ கால்வாய் என்றோதான் அழைப்போம்

  ReplyDelete
 48. Lakshmi said...

  படங்களும் பதிவும் உடனே அரசர்குளத்துக்கு வரச்சொல்லுதே.தாராளமா வாங்கம்மா

  ReplyDelete
 49. Rathnavel said...

  அருமை.

  தங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா...

  ReplyDelete
 50. வருகைக்கு நன்றி செந்தில் வேலாயுதன். நீண்ட நாட்களுக்கு பிறகு வருகைதந்து ஒரு நீண்ட விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி... நான் ஏற்கனவே மாத்தூர் பாலத்தை பற்றி அறிந்திருந்தாலும் அறியாத பல தகவல்களை தந்துள்ளீர்கள்.

  ReplyDelete
 51. Chitra said...
  நாகர்கோயில் பக்கம் ஒரு பெரிய தொட்டி பாலம் பார்த்து இருக்கிறேன். இந்த பாலமும் அருமையாக உள்ளது.//

  நீங்களும் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் வந்துள்ளீர்கள். வருகைக்கு நன்றி...
  நல்லவேளையாக ஸ்மைலி போடாமால் பின்னூட்டம் போட்டிருக்குறீர்.

  ReplyDelete
 52. விக்கியுலகம் said...

  படங்களுடன் பகிர்வு அருமை..பகிர்வுக்கு நன்றி!////

  தங்களின் வருகைக்கு நன்றி மாம்ஸ்

  ReplyDelete
 53. அருமையா இருக்கு சர்..

  ReplyDelete
 54. நம் ஊரின் பெருமைகளை உலகிற்கு வெளிக்கொண்டுவரும் உங்களின் முயற்சியை வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறேன் மாம்ஸ்

  நன்றி உங்கள் பணி தொடர்ந்திட
  அன்பு மாப்பிள்ளை
  சிகா,லெனின்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.