என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, January 11, 2012

30 சபாஷ்....சரியான பதிலடி இதுதான்.....


பக்கத்துவீட்டுக்காரரை
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
வாராவாரம்
சினிமாவுக்கு கூட்டிப்போறாரு.....

எதிர் வீட்டுக்காரரை
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
மாசாமாசம்
வெளியூரு கூட்டிப்போறாரு....

அவங்க ரெண்டுபேரும்
அவங்கவங்க பொண்டாட்டிக்கு
நகையும்,புடவையும் 
வாங்கி குவிக்கிறாங்க...

நீங்க எதுக்குத்தான் 
லாயக்கோ
எனக்குன்னு வந்து
வாச்சிருக்கீங்களே.....
என்று அவ்வப்போது
என்னை திட்டும்
என் மனைவி 
இப்போதெல்லாம் 
 அவர்களைப்பற்றி
வாயை திறப்பதேயில்லை....

எதிர்வீட்டுக்காரரும்
பக்கத்து வீட்டுக்காரரும்
கூட்டணி போட்டு
வேலைக்காரியிடம் 
சில்மிஷம் செய்து
மாட்டிக்கொண்டதிலிருந்து.....

டிஸ்கி:இது ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு...


Post Comment

இதையும் படிக்கலாமே:


30 comments:

 1. ஹா... ஹா... சரியான பதிலடிதான். நம்மவர்களின் அருமை மற்றவர்களைப் பார்த்தால்தானே தெரிகிறது!

  ReplyDelete
 2. அண்ணே இது கவிதையா?இல்லைகதையா?எதுவாக இருந்தாலும் சூப்பர்

  ReplyDelete
 3. முதல் வருகைக்கும் சுடச்சுட பின்னூட்டத்திற்கும் நன்றி கணேஷ் சார்...

  ReplyDelete
 4. NKS.ஹாஜா மைதீன் said...

  அண்ணே இது கவிதையா?இல்லைகதையா?எதுவாக இருந்தாலும் சூப்பர்////

  அதுதான் எனக்கும் புரியல...இருந்தாலும் கவிதைன்னே வகைப்படுத்தியிருக்கும். கவிஞர் பெருமக்கள் என்ன சொல்லப்போறாங்களோ?....

  ReplyDelete
 5. ஸலாம் சகோ.கஸாலி...

  ///டிஸ்கி:இது ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு...///

  யாரு யாரை திருத்தினது..?

  ReplyDelete
 6. முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

  ஸலாம் சகோ.கஸாலி...

  ///டிஸ்கி:இது ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு...///

  யாரு யாரை திருத்தினது..?////

  நான் தான் பதிவை திருத்தினேன்.

  ReplyDelete
 7. அடப்பாவமே மாட்டிக்கினாங்களா ஹிஹி...இன்னும் பயிற்சி வேண்டுமோ ஹிஹி!

  ReplyDelete
 8. { விக்கியுலகம் } said... 7

  அடப்பாவமே மாட்டிக்கினாங்களா ஹிஹி...இன்னும் பயிற்சி வேண்டுமோ ஹிஹி!///

  எதையும் பிளான் செய்யாம செஞ்சா இப்படித்தான்

  ReplyDelete
 9. அவர் மனைவியை வரச்சொல் நானும் சினிமா வுக்கு கூட்டிக்கிட்டு போகிறேன் .வெளியஊருக்கும் கூட்டிக்கிட்டு போகிறேன்

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. அந்த விசத்தில் மட்டும்தான் கணவனிடம் மனைவி அடங்குகிறாள்..உண்மைதான்..சுவை..
  வாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி..
  திராவிட தீபம் தோன்றியது

  ReplyDelete
 12. ஒப்பிடுதல் மிக பெரிய மனத்தாக்கத்தை மிக சுலபமாக செய்து முடிக்கிறது........ அது அதோடு முடிவதில்லை ஒப்பிடுபவரை பதிலுக்கு ஒப்பிட முனைப்பு கொடுக்கிறது....... சிறுவர்கள் மனதில் தாழ்வுமன பாங்கை உருவாகுவதுவும் இதுவே...... துவளும் போதும், தோல்வி உறும் போதும் தோல்விகள் துன்பங்கள் வழமையானவை வென்று உச்சத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நேற்று தோற்றவர்கள் தான் என தட்டி கொடுங்கள்............நீங்கள் எதிர் பார்ப்பதை விட பல மடங்கு பலன் கிடைக்கும்.........அருமையான கருத்து நகைசுவையோடு மனதில் பதிய வைத்து இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
  த. ம.4

  ReplyDelete
 13. மற்றவர்களோடு வாழ்க்கையை ஒற்றுமைபடுத்தி பார்க்க கூடாது....

  இதை அவர்களே புரிந்துகொண்டால் நல்லதுதான்...

  கவிதை வடிவில் அழகு

  ReplyDelete
 14. sennakkalvalasu T.Selvaraju said...

  அவர் மனைவியை வரச்சொல் நானும் சினிமா வுக்கு கூட்டிக்கிட்டு போகிறேன் .வெளியஊருக்கும் கூட்டிக்கிட்டு போகிறேன்////

  அய்யா...இந்த வயசுல ஏன் இப்படி ஒரு ஆசை....பிறர் மனை நோக்குதல் பாவமில்லையா?

  ReplyDelete
 15. மதுமதி said...

  அந்த விசத்தில் மட்டும்தான் கணவனிடம் மனைவி அடங்குகிறாள்..உண்மைதான்..சுவை..
  வாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி..///

  உண்மைதான் மதுமதி.....வருகைக்கு நன்றி

  ReplyDelete
 16. உங்களின் வருகைக்கும் கருத்தாழமிக்க பின்னூட்டத்திற்கும் நன்றி இடி முழக்கம்

  ReplyDelete
 17. கவிதை வீதி... // சௌந்தர் // said...

  மற்றவர்களோடு வாழ்க்கையை ஒற்றுமைபடுத்தி பார்க்க கூடாது....

  இதை அவர்களே புரிந்துகொண்டால் நல்லதுதான்...

  கவிதை வடிவில் அழகு////

  ஒப்பீட்டில் சாதகமும், பாதகமும் கலந்தே இருக்கிறது. எந்த விஷயத்தில் ஒன்றை ஒப்பிடுகிறோம் என்பதை பொறுத்தே அது அமையும்.

  ReplyDelete
 18. ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்! ஆரியர்கள் 'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள் http://www.generationneeds.blogspot.com/சரியான பதிலடிபதிவை கொடுங்கள்..

  ReplyDelete
 19. { ஓசூர் ராஜன் } said...//////

  ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்! ஆரியர்கள் 'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள் http://www.generationneeds.blogspot.com/சரியான பதிலடிபதிவை கொடுங்கள்.////

  இதென்ன பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமா இருக்கு?...

  ReplyDelete
 20. கவிதையோ கதையோ?
  ஆனால் சரிய‍ன தலைப்பு!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. ..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

  அருமையான பதிலடி... ...

  தங்களின் முதல்வருகைக்கு நன்றி

  ReplyDelete
 22. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்ன கொடும சார் இது......?////

  வாங்கண்ணே.... நலமா?

  ReplyDelete
 23. புலவர் சா இராமாநுசம் said...

  கவிதையோ கதையோ?
  ஆனால் சரிய‍ன தலைப்பு!///
  ஒரு புலவரே சொல்லிட்டீங்க...தங்களின் வருகைக்கு நன்றி அய்யா

  ReplyDelete
 24. Kadaisi variyai patditha udane sirippu kubeer nu vanthathu.

  ReplyDelete
 25. இதுக்கு பேர்தான் விழிப்புணர்வு பதிவா?

  ReplyDelete
 26. ஜோக்குக்கு வயது வித்தியாசம் கிடையாது .அதை மட்டும் நகைச்சுவையை எடுத்து கொள்ளும் போது இதையும் எடுத்துக்கொள்ள வீண்டியதுதனே .ஆசையும் கிடையாது தோசையும் கிடையாது

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.