என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, January 26, 2012

8 அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய குடியரசு தகவல்கள்

 1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும்வரை ஆங்கிலேயர்கள் தங்களுக்கு சாதகமாக அமைத்திருந்த சட்டங்களே இந்தியாவின் சட்டங்களாக இருந்தது. அதன்பின் இந்தியாவைக் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்வதற்காக இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் இந்திய அரசு ஈடுபட்டது. அதற்காக அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
புதிய அரசியல் சட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு டாக்டர் அம்பேத்காரிடம் ஒப்படைக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் சட்டத்தை 1949 நவம்பரில் அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. அதன்படி 1950 ஜனவரி 26 முதல்  இந்தியா குடியரசு நாடாகியது. இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக கவர்னர் ஜெனரல் ராஜாஜி பொறுப்பேற்க வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இதை எதிர்த்தனர். 1942 இல்  நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ராஜாஜி எதிர்த்தார். எனவே அவரை ஜனாதிபதி ஆக்கக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள்.
1942 இல்  பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையையையும்  ராஜாஜி ஆதரித்தார். இதைக் காங்கிரஸ் எதிர்த்ததால் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ராஜாஜி விலகி இருந்தார். இதன் காரணமாக ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். கவர்னர் ஜெனரல் என்ற பதவி அன்றுடன் முடிவடைந்தது.

இந்தியா சந்தித்த குடியரசுத்தலைவர்கள்

1)டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1950-1962

 
 2)டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967

 
 


3)டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969

 
 
4)வி.வி.கிரி - 1969( மே மாதத்திலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)


 

5)ஹிதாயத்துல்லாஹ் 1969( ஜூலை லிருந்து ஆகஸ்ட் வரை 
தற்காலிகமாக)
 


 
6)வி.வி.கிரி - 1969-1974 
7)பகுருதீன் அலி அஹமத் 1974-1977
 


 
8)பி.டி. ஜாட்டி - 1977 ( பிப்ரவரியிலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)9)நீலம் சஞ்சீவ ரெட்டி - 1977-1982 
10)கியானி ஜெயில் சிங் - 1982- 1987

 
11)ஆர்.வெங்கட்ராமன்- 1987-1992
 
12)டாக்டர் சங்கர் தயாள் சர்மா - 1992-1997


 
13)கே.ஆர்.நாராயணன் - 1997-2002 
14)டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்- 2002-2007 
15)பிரதீபா பாட்டில் - 2007 -(ஜூலையிலிருந்து)Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. நல்ல தகவல்கள்...பகிர்வுக்கு நன்றிண்ணே.

  ReplyDelete
 2. சொடுக்கி கேளுங்க‌ள்

  >>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<

  சொடுக்கி கேளுங்க‌ள்

  2. >>>>>
  பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

  இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
  . <<<<<

  .

  ReplyDelete
 3. http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_25.html

  குடியரசு தினத்தை இப்படியும் கொண்டாடலாமே!

  ReplyDelete
 4. ஸலாம் சகோ.ரஹீம் கஸாலி,
  உச்ச ஆளுநராக (கவர்னர் ஜெனெரல்) இருந்தும்கூட...
  'முதல் குடியரசுத்தலைவர் ஆகும் வாய்ப்பை ராஜாஜி எப்படி இழந்தார்'
  என்று தெளிவாக கூறியமைக்கு மிக்க நன்றி சகோ. நல்ல தொகுப்பு. நன்றி.

  ReplyDelete
 5. ASSALAMU ALLAIKUM

  I m the 777777 viewer of your blog...

  ReplyDelete
 6. அருமையான தொகுப்பு ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 7. Arumaiyana Pathivu Sago. Netre vara muyanren. Thangal thalaththai anuga mudiyavillai.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.