என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, January 09, 2012

11 ஏன் என்னாச்சு விகடனுக்கு? or விகடனுக்கு ஒரு வேண்டுகோள்.....விகடன் குழுமத்திலிருந்து இலவசமாக இணையத்தில் கொடுக்கப்படும் இணைய இதழ் யூத்ஃபுல் விகடன் எனப்படும் இளமை விகடன்.
இந்த தளத்தில் கதை, கட்டுரை என்று என் எழுத்துக்களை நிறையவே வெளிவரச்செய்து எனக்கு களம் அமைத்துக்கொடுத்தது. இன்று வலைப்பதிவராக நான் வலம் வர அச்சாரமிட்டதும் யூத்ஃபுல் விகடன் தான். ஆம்.....இந்த இதழில் வெளிவரும் குட்பிளாக்ஸ் பகுதியை பார்த்ததற்கு பிறகுதான் வலையுலகம் என்றொரு தனியுலகம் இயங்குவதே எனக்கு தெரியும். அதன்பிறகே நானும் பதிவராக மாறி, உங்களை நோகடிக்க ஆரம்பித்தேன்.

இங்கு வெளிவரும் படைப்புகளுக்கு சன்மானம் இல்லையென்றாலும், ஒரு அங்கீராத்திற்காக்வே எழுதுபவர் பலர். அப்படிப்பட்ட தளம் இப்போது ஏறக்குறைய முடங்கிவிட்டதாகவே தெரிகிறது. முன்பெல்லாம் தினமும் தளத்தை புதுப்பித்தபடி(அப்டேட்)  இருப்பார்க்ள். தினம் தினம் புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் அலங்கரிக்கும். ஆனால், இப்போதோ.... அதை விகடன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. புதுப்பிக்கவேண்டும் என்பதற்காக மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் அப்டேட் செய்கிறார்கள். எதற்காக விகடனுக்கு இப்படி ஒரு சுணக்கம் என்று புரியவில்லை.

நான் விரும்புவதெல்லாம்..... மீண்டும் புதுப்பொலிவுடன் யூத்ஃபுல் விகடன் வரவேண்டும். தினமும் அப்டேட் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. வாரந்தோறுமாவது அப்டேட் செய்யவேண்டும். இதை விகடனுக்கு கோரிக்கையாகவே வைக்கிறேன். செய்யுமா விகடன்?

முந்தைய பதிவு

தாக்கப்பட்ட நக்கீரனும்....தறிகெட்ட அ,தி.மு.க.,வினரும்......
Post Comment

இதையும் படிக்கலாமே:


11 comments:

 1. ஸலாம் சகோ.கஸாலி,

  //எதற்காக விகடனுக்கு இப்படி ஒரு சுணக்கம் என்று புரியவில்லை.//---இந்த கேள்விக்கான பதில் பதிவின் முதல் வரியில் உள்ளது...!

  //செய்யுமா விகடன்?//--கட்டணம் எதிர்பார்க்கிறார்கள் போல..!

  ReplyDelete
 2. என்னமோ போங்க.. ஒண்ணும் சொல்லத் தோணலை. வந்ததுக்கு பிரதருக்கு ஓட்டு மட்டும் குத்திட்டுப் போறேன்...

  ReplyDelete
 3. செய்யும்..ஆனா..

  வந்தேன்..வாக்கிட்டேன்..

  கொக்கரக்கோ

  ReplyDelete
 4. மீண்டும் புதுப்பொலிவுடன் யூத்ஃபுல் விகடன் வரவேண்டும். தினமும் அப்டேட் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. வாரந்தோறுமாவது அப்டேட் செய்யவேண்டும். இதை விகடனுக்கு கோரிக்கையாகவே வைக்கிறேன்.

  எதிர்பார்க்கிறோம்..

  ReplyDelete
 5. நல்ல கோரிக்கைதான்.

  ReplyDelete
 6. Niyaayamaana Korikkai. Niraiverinaal Nallathu.

  ReplyDelete
 7. தங்கள் கோரிக்கையை வழிமொழிகிறேன்.

  எனது பதிவு படியுங்கள் -விகடனும் நானும்
  www.nizampakkam.blogspot.com/2011/10/90vikatan.html

  ReplyDelete
 8. a beautiful tamil birthday song
  http://vidhyasagar.com/

  ReplyDelete
 9. அரசியல் பதிவர் கஜாலி நானா...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.