என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, January 13, 2012

14 பொற்கால ஆட்சியை கொடுத்தது காமராஜரா? அண்ணாவா?சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது... எல்லோரும் காமராஜர் ஆட்சியமைப்போம் என்றுதான் சொல்கிறார்கள். ஏன் யாரும் அண்ணா ஆட்சியமைப்போம் என்று சொல்வதில்லை? காமராஜர்தான் பொற்கால ஆட்சியை கொடுத்தாரா? அண்ணா தரவில்லையா? என்று கேட்டார்.

இது வழக்கமாக எல்லோருக்கும் ஏற்படும் கேள்விதான் என்றாலும் என்னால் சரியான விளக்கம் தரமுடியவில்லை. இருந்தாலும் சமாளித்துவைப்போம் என்று சில விளக்கங்களை கொடுத்தேன். அதாவது.....

தமிழ்நாட்டில் காமராஜர் முதல் அமைச்சராக இருந்தது 1954-லிருந்து 1963 வரை 9 ஆண்டுகள். அண்ணாவோ 1967-லிருந்து 1969 வரை இரண்டு ஆண்டுகள் தான். ஆகவே, தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அண்ணாவை விட காமராஜரே..... அப்படி அதிக நாட்கள் ஆட்சியிலிருந்ததால் அவருக்கு நல்லது செய்யவும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. ஆனால், அண்ணாவோ மிக குறுகிய காலமே ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். அப்படியிருக்கும்போது அண்ணா சிறந்த ஆட்சியை கொடுத்தாரா? காமராஜர் சிறந்த ஆட்சியை கொடுத்தாரா என்ற கேள்வி எழவே கூடாது. ஒரு வேளை காமராஜரை விட, அண்ணா அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்திருந்தால் நிறைய செய்திருப்பாரோ என்னவோ? என்ன  நான் சொன்ன  பதில் சரிதானே.

காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பதற்கான சில காரணங்கள்.

காமராஜர் தண்ணீருக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். அதனால்தான்.....
பரம்பிக்குளம்-ஆழியாறு அணை
கீழ்பவானி நீர்த்தேக்கம்
சாத்தனூர் நீர்த்தேர்க்கம்
மணிமுத்தாறு திட்டம்
வைகை அணைக்கட்டு திட்டம்

போன்றவைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும்,
திருச்சி பாய்லர் தொழிற்சாலை,
ஆவடி ராணுவ டாங்கி தொழிற்சாலை,
நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன்
பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
நீலகிரி ஃபிலிம் தொழிற்சாலை
கிண்டி ஹிந்துஸ்தான் டெலிபிரிண்ட் தொழிற்சாலை
அம்பத்தூர், ராணிப்பேட்டை தொழிற்பேட்டை

முதலியவை காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டவைகள் தான்.
Post Comment

இதையும் படிக்கலாமே:


14 comments:

 1. காமராஜரின் பெருமையை சாதனைகளை ஒரு பதிவில் அடக்கிவிட முடியாது....


  மீண்டும் அதுபோல் தமிழகத்தில் ஒரு ஆட்சி கனவுதான்...

  ReplyDelete
 2. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. உங்க பதில் சர்தான் மாப்ள...விவசாயிக்கு தானே தெரியும் தண்ணியின் அருமை!

  ReplyDelete
 4. திருச்சியில் பி.எச்.இ.எல் ஆரம்பிச்சதும் காமராஜர் ஆட்சியில தானே. எளிமையா பொதுமக்கள்ல ஒருவரா வாழ்ந்த அவர், பொதுமக்களுக்காகவே மக்களில் ஒருவராக சிந்தித்து ஆட்சி நடத்தியவர். அவரைப் போல ஒரு தலைவர் தோன்றணும் என்பது இன்றுவரை நமக்கெல்லாம் கனவாகவே இருந்து வருகிறது.

  ReplyDelete
 5. கிருஷ்ணகிரி அருகில் உள்ள அணையும் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டது தான்! தவிர மத்திய உணவுத் திட்டம், கிராமங்களில் பள்ளிகூடங்கள் ஆரம்பித்து கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர்! இன்றுள்ள தலைவர்கள், ஆட்சியாளர்கள் எல்லோரும் மர்ம வீரர்கள்தான்!

  ReplyDelete
 6. காமராஜ் பொற்காலம்பற்றி சிறியதாகச் சொன்னாலும் சிறப்பாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 7. படிக்காத மேதை பற்றிய ஆய்வு
  மிகவும் சரியாக உள்ளது!
  சுயநலம் இல்லாத கர்ம வீரர்
  அவரே!ஒப்பாரும், மிக்காரும்
  இல்லா ஒருவர்!

  த ம ஓ 5

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. ஆரம்ப கல்விக்கு மட்டும் அல்ல உயர் கல்விக்கும் அவர் செய்த தொண்டு நிறைய. அவரது காலத்தில் தான் IIT சென்னையில் உறுவானது. REC, Trichy தொடங்க வித்திட்டதும் அவர் தான். ஆனால் REC, Trichy தொடங்கியது பக்தவத்சலம் ஆட்சியில் இருக்கும் பொழுது. அதே போல சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் தென் இந்தியாவின் முதல் computer center உறுவானதும் அவரது ஆட்சியில் தான்.

  மத்திய ஆட்சியில் இருந்த அவரது செல்வாக்கினால் இவை அனைத்தையும் அவர் சாதித்ததாக எனது பேராசிரியர் கூறுவார்.

  ReplyDelete
 9. எல்லாம் சரி...மதியஉணவு திட்டத்தை முதன் முதலாக பள்ளியில் அறிமுகப்படுத்திளது காமராஜர்... அதன் பின் M.G.R.சத்துணவு திட்டம் என்று மாற்றினார்,இருவர் ஆட்சியுமே பொற்கால ஆட்சிதான் நல்ல பதிவு அருமை சகோ!

  ReplyDelete
 10. கனவில் கூட அந்த மாதிரி பொற்கால ஆட்சியை பார்க்க முடியாது என்பது இன்றைய நிதர்சன உண்மை! நன்றி சார்!
  இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

  ReplyDelete
 11. இது எல்லாம் தவிர எளிமையின் அடையாளமாக காமராஜரும்,அவரது அமைச்சரவை சகாக்களும் திகழ்ந்தனர்...

  ReplyDelete
 12. இது எல்லாம் தவிர எளிமையின் அடையாளமாக காமராஜரும்,அவரது அமைச்சரவை சகாக்களும் திகழ்ந்தனர்...

  ReplyDelete
 13. Neengal solvathu unmaithan. Athiga Naatkal irunthu irunthaal Anna vum Nanraga Seithiruppaar.

  ReplyDelete
 14. Hyderabad-ku செல்லவிருந்த IIT காமராஜர் முயற்சியால் சென்னைக்கு கிடைத்தது.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.