என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, March 20, 2012

9 சங்கரன்கோவிலில் அண்ணா.தி.மு.க.,தோற்று தி.மு.க.ஜெயித்தால்.....


நடந்து முடிந்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஒருவேளை அண்ணா.தி.மு.க.,தோற்றால்...
ஜெயலலிதாவின் பேட்டி இப்படித்தான் இருக்கும்.


கேள்வி: ஆளுங்கட்சியாக இருந்தும் சங்கரன்கோவிலில் அண்ணா.தி.மு.க., தோற்றுள்ளதே?

ஜெயலலிதா: இது நியாயமான தோல்வியல்ல..வாக்குப்பதிவு எந்திரத்தில் நடந்த முறைகேடுகளே என் கட்சி தோல்விக்கு காரணம். இரட்டை இலைக்கு விழுந்த வாக்குகளை எல்லாம் கருணாநிதியின் கட்சிக்கு விழும்படி எந்திரத்தில் புரோக்ராம் செய்துள்ளார்கள்.

கேள்வி:எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?

ஜெயா: தேர்தலுக்கு முன்பே 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.,ஜெயிக்கும் என்று அழகிரி சொன்னதை நினைவு படுத்த விரும்புகிறேன். வழக்கமாக ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும். அதுதான் நியதி. அதையும் மீறி தி.மு.க.,ஜெயித்துள்ளது எப்படி என்று இப்போது தெரிகிறதா?

கேள்வி: இந்த தோல்விக்கு பொறுப்பேற்று நீங்கள் ராஜினாமா செய்வீர்களா?

ஜெயா: நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? ஒருவேளை தி.மு.க.,ஆளுங்கட்சியாக இருந்தால் கருணாநிதியை ராஜினாமா செய்ய சொல்லி அறிக்கை விட்டிருப்பேன். ஆனால், இப்போது நாங்கள் அல்லவா ஆளுங்கட்சி.

                                                             ======================
ஒரு வேளை தி.மு.க.,ஜெயித்தால்...கலைஞரின் பேட்டி இப்படித்தான் இருக்குமோ?.

கேள்வி: ஆளுங்கட்சியையும் மீறி உங்கள் கட்சி வெற்றி பெற்றிருப்பது பற்றி?

கலைஞர்:இடைத்தேர்தல் என்றாலே எடைத்தேர்தல் என்று தான் அர்த்தம். இந்த தோல்வி ஜெயலலிதாவின் ஒரு வருட அராஜக ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் மதிப்பெண்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் இந்த தேர்தல் முடிவு இருக்கிறது.

கேள்வி: ஜெயலலிதாவை ராஜினாமா செய்யுமாறு கோருவீர்களா?


கலைஞர்: தி.மு.க.,ஜனநாயகத்தின் மீது மதிப்பு வைத்திருக்கும் கட்சி. நாங்கள் யாரையும் ராஜினாமா செய்யுமாறு கேட்க மாட்டோம். அதே நேரம் மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி அவர்களாகவே ராஜினாமா செய்தால் அதை தடுக்க மாட்டோம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


9 comments:

 1. ஒரு வேளை தி.மு.க.,தோற்றால்

  sari paarkavum

  ReplyDelete
  Replies
  1. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே...திருத்திவிட்டேன்.

   Delete
 2. பார்ரா.....

  அரசியல்.....மக்கள் மனநிலை...


  நாளை வரை......

  ReplyDelete
 3. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா... பதிவு எக்ஸலண்ட்

  ReplyDelete
 4. இது உண்மையாக இருக்கக் கூடாதா...ஒரு நப்பாசைதான்.

  ReplyDelete
 5. eppadu boss!
  ippadiyellaam yosikkireenga!

  nallaa irukkuthu!

  ReplyDelete
 6. ஹா.. ஹா.. ஹாஸ்யமான கற்பனை.....

  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.