என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, March 26, 2012

17 என் நண்பரின் டேபிள் மேனர்சும் என் மொழிகளும்.....ஒரு முறை ஒரு திருமண விருந்தில் என்  நண்பர்களோடு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் முன் எங்கள் நண்பர்களில் ஒருவர் விரைவாக சாப்பிட்டுவிட்டு கைகழுவ போய்விட்டார். எனக்கோ சரியான கோபம். சாப்பிட்டு முடித்து வெளியே வந்து அவரிடம் கேட்டேன்.
எல்லோரும் ஒன்றாகத்தானே சாப்பிட உட்கார்ந்தோம். நீ மட்டும் சீக்கிரம் எழுது போய்விட்டாயே...கொஞ்ச நேரம் கம்பேனி கொடுத்திருக்கலாமே?... உனக்கு டேபிள் மேனர்சே தெரியவில்லை” என்றேன். அதற்கு அந்த நண்பர்.... ”அப்படி இல்லை. நான் சீக்கிரம் சாப்பிடுபவன். நான் சாப்பிட்டு முடித்துவிட்டால் உங்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. அப்படி காத்திருந்தால் மெதுவாக சாப்பிடும் சிலர்  நான் காத்திருக்கிறேன் என்பதற்காக அவசம் அவசரமாக சாப்பிட்டுவிடுவார் அல்லது எனக்கு கம்பெனி கொடுப்பதாக நினைத்து பாதியில் எழுந்துவிடுவார். அந்த சிரமத்தை ஏன் நான் கொடுக்க வேண்டும்?. அதான் எழுதுபோய் விட்டேன்” என்றார். அவர் செய்கை எனக்கு நியாயமாக பட்டது.

======================

பொன் மொழிகளல்ல...என் மொழிகள் மாதிரி.....

வாதாடி தோற்கும் அனைவரும் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாமல், பொய்யான வார்த்தகளை போட்டு வாதத்தை தொடரவே செய்கிறார்கள். அல்லது, பட்டென்று கை நீட்டி அடித்துவிட்டு வாதத்தை முடித்து தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்கள்.

=========================

செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்# இப்போதெல்லாம் செவிக்கு நிறைய உணவு கிடைக்கிறது. ஆனால், வயிற்றுக்குத்தான் கிடைத்தபாடில்லை.

====================

கீரைக்காரரிடம்
பேரம் பேசி
கீரை வாங்கும் ஒருவன்
பேரம் பேசாமல்
டாஸ்மாக்கில் சரக்கு
வாங்கிவிட்டு
அப்படியே
பக்கத்து கடையில்
சிகரெட்டும்
வாங்கினான்.
எம்.ஆர்.பி.,யை விட
அதிகமாக கொடுத்து....
Post Comment

இதையும் படிக்கலாமே:


17 comments:

 1. உங்கள் மொழிகள் நச்....

  ReplyDelete
 2. கஸாலி,

  /* அவர் செய்கை எனக்கு நியாயமாக பட்டது. */

  அந்த நல்லவர் நான் தானே????

  ReplyDelete
 3. /* கீரைக்காரரிடம்
  பேரம் பேசி
  கீரை வாங்கும் ஒருவன்
  பேரம் பேசாமல்
  டாஸ்மாக்கில் சரக்கு
  வாங்கிவிட்டு
  அப்படியே
  பக்கத்து கடையில்
  சிகரெட்டும்
  வாங்கினான்.
  எம்.ஆர்.பி.,யை விட
  அதிகமாக கொடுத்து.... */

  இது ஆண்களுக்கு... அப்ப பெண்களுக்கு

  கீரை காரியிடம் பேரம் பேசி,
  சண்டை போட்டு கீரை வாங்கும் ஒருத்தி....
  நகைக்கடையில் பேரம் பேசாமல்
  கேட்ட சேதாரம் செய்கூலி கொடுத்து
  நகை வாங்கினால்..
  டிஜென்ஜி(Decency ????)......

  ReplyDelete
  Replies
  1. உன்னை கேஆர்பி.க்கு மட்டும்தான் எதிர்கவிதை போட சொல்லிருக்கு...எனக்கு அல்ல...

   Delete
 4. மேனர்சும் மொழிகளும் நச்

  ReplyDelete
 5. மொழிகள் அருமை. டேபிளில் காத்திருப்பது நமக்கு வேண்டுமானால் சரியாக படலாம். ஆனால் இன்னும் சாப்பிடாதவர்களை அது அவசரப்படுத்தவே செய்யும். நான் சாப்பிட்டு முடித்து விட்டால், பிறரிடம் சொல்லிவிடு எழுந்து விடுவேன். அதே நேரம் எனக்காக காத்திருப்பவரிடம், நீங்கள் கிளம்புங்கள் நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று சொல்லி விடுவேன். விவாதங்களில் விட்டுக்கொடுப்பதே வெற்றிக்கு ஒரே வழி என்று எங்கோ படித்ததாக நினைவு.

  ReplyDelete
 6. கவிதை நல்லா இருக்கு

  ReplyDelete
 7. மொழிகளும் கவிதையும் அருமை. டேபிள் மானர்ஸை பொறுத்த வரை நானும் வேகமாகச் சாப்பிடும் ஆசாமி என்பதால் உங்க நண்பரைப் போலத்தான்!

  ReplyDelete
 8. கடைசி கவிதை செருப்பால அடித்தது போலிருந்தது.. சூப்பர்ப்

  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
 9. உங்கள் நண்பருடைய லாஜிக் எனக்கு தவறாக படுகிறது... நண்பர்களுக்குள் என்ன சிரமம்...

  ReplyDelete
 10. // என் மொழிகள் //

  யம்ம்மா யம்ம்மா யம்ம்மா யம்ம்மா... யப்ப்பா யப்ப்பா யப்ப்பா யப்ப்பா...

  ReplyDelete
 11. அனைத்தும் அருமை ! குறிப்பாக கவிதை சூப்பர் !

  ReplyDelete
 12. //கீரைக்காரரிடம்
  பேரம் பேசி
  கீரை வாங்கும் ஒருவன்
  பேரம் பேசாமல்
  டாஸ்மாக்கில் சரக்கு
  வாங்கிவிட்டு
  அப்படியே
  பக்கத்து கடையில்
  சிகரெட்டும்
  வாங்கினான்.
  எம்.ஆர்.பி.,யை விட
  அதிகமாக கொடுத்து....// Ennama kavithai eluthuringa boss. spuera irukku,,..
  tamil ulagathirku ungal pol kavingarkal thaan ventum

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.