என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, March 27, 2012

16 ஏப்ரலிலிருந்து சென்னைக்கும் ஆப்பு.....துவரை சென்னையில் இரண்டுமணி நேரமும், மற்ற இடங்களில் 10 மணி நேரமுமாக இருந்த மின்வெட்டு இன்னும் அதிகரிக்கும்போல் தெரிகிறது.
தற்போது தினமும் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தி வெறும் 7 ஆயிரத்து 500 மெகாவாட் என்ற அளவில்தான் உள்ளது. இதனால் தினமும் 4 ஆயிரத்து 500 மெகாவாட் வரை பற்றாக்குறை நிலவுவதால் மின்வெட்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. இனி உச்சக்கட்ட கோடைகாலம் வர உள்ள நிலையில் மின் தேவை தினமும் 12 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் அதிகரிக்கும். அப்போது பற்றாக்குறை 5 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் செல்லும் என சொல்லப்படுகிறது.

ஆகவே, இனி சென்னைக்கும் மின்வெட்டின் நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், தினமும் நான்கு மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என்று சொல்கிறார்கள்.
எனக்கிருக்கும் கவலையெல்லாம்.....சென்னைக்கே மின் தடை நான்கு மணி நேரமென்றால், எங்கள் ஊரை போன்ற கிராமப்பகுதிக்கு மின்சாரமே வராதோ?

======================

சங்கரன்கோவில் மக்களுக்கு இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா கொடுத்திருக்கும் பரிசு மின்வெட்டு.
தமிழ்நாடே இருளில் மூழ்கிக்கொண்டிருந்தபோது சங்கரன்கோவில் மட்டும் மின்வெட்டே இல்லாமல் ஜொலித்தது. எல்லாம் இடைத்தேர்தல் மகிமைதான். தேர்தல் முடிந்து வெற்றிபெற்ற கையோடு மற்ற ஊர்களைப்போல் சங்கரன்கோவிலிலும் மின்வெட்டு அமுலுக்கு வந்துவிட்டது. வச்சாங்களா ஆப்பு......

=====================

நேற்று சட்டசபையில் பட்ஜெட் படிக்கும் போது ஒரே ஜெயலலிதா புராணமே பாடினார் ஓ.பி.,
ஜெயலலிதா பேரை சொல்லும்போதெல்லாம் மேஜையை தட்டி ஆராவாரம் செய்தனர் அண்ணா.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்.
பாவம், தட்டி தட்டி எத்தனை பேர் கை வீங்கிப்போய் கட்டுப்போட்டிருக்கிறார்களோ?....Post Comment

இதையும் படிக்கலாமே:


16 comments:

 1. அம்மா பட்ஜெட் இது..

  ReplyDelete
 2. அம்மா புகழ் பாடிய ஒ பி யின் வாய் எப்படி வலித்து இருக்கும்?அவர்களுக்கே வெட்கமாக இருக்காதா?

  ReplyDelete
 3. கஜாலி,

  அனேகமா நீ செம பவரா இருப்பேன்னு நினைக்கிறேன். இப்ப தான் சென்னைக்கு வந்த , உடனே மின்தடைய 2 மணி நேரத்தில இருந்து, 4 மணி நேரம் ஆக்கிட்டாங்க.
  நீ சீக்கிரம் ஊருக்கு கிளம்புற வழியப் பாருப்பா.

  ReplyDelete
  Replies
  1. அடப்பாவி...ஏற்கனவே ஊர்ல 12 மணி நேரம் கரண்ட் இல்லை. இந்த லட்சனத்தில நான் வேறு போனா....சுத்தம், விளங்கிடும்.

   Delete
  2. அதுசரி, நான் பவர்னா பவர் இருக்கனுமே...அப்புறம் ஏன் போகுது?

   Delete
  3. ஊர பத்தி கவலைப்படாத...எல்லாரும் இன்வெர்டார் வச்சி இருக்கானுக. இங்க சென்னைல என் வீட்டில் இல்லை. சோ நீ கெளம்புற வழியப் பாரு.

   Delete
 4. அதுல இன்னொரு விஷயம் தெரியுமா? நான் பவர் என்பதால் பவர் போகல....ஜெயலலிதாவுக்கு பவர் வந்ததால தமிழ் நாட்டுக்கு பவர் போயிருச்சு.

  ReplyDelete
  Replies
  1. பேசாம வார்த்தைச் சித்தர் கசாலி னு பட்டம் கொடுத்திடவா?????

   Delete
 5. நேத்து உன்னைய திட்டி ஹாஜா மச்சான் போஸ்ட் ல கமெண்ட் போட்டு இருக்கேன்... போய் பார்த்துக்க...

  ReplyDelete
 6. பத்து மணி நேரம் மின்சாரம் இல்லாமல்
  வாழப் பழகிவிட்டோம்
  இனி மின்சாரமே இல்லாமல்
  வாழ்த்தான் பழக வேண்டுமோ?

  ReplyDelete
 7. சென்னைக்கு 4 மணிநேரம் என்றால் நமக்கு அவ்வளவுதான் தலைவரே...

  ReplyDelete
 8. போனவாரம் தான் தமிழ் நாட்லேந்து திரும்ப மும்பை வந்தேன். ஈரோடில் 8லேந்து 10-மணி நேரம் கரண்ட்கட்டாகுது. எப்ப போகும் எப்ப வரும்னே சொல்லமுடியல்லே

  ReplyDelete
 9. உண்மை. எனக்கும் எங்க ஊரைப் பத்தி நெனைச்சு ரொம்ப பயம்மா இருக்கு சார். இவங்க திருந்தவே மாட்டாங்க. அமெரிக்காவில நயாகரா நீர்வீழ்ச்சில அந்த நாடு முழுமைக்கும் தேவையான கரண்ட் தயாரிக்கப்படுகிறதாம். அந்த தொழில் நுட்பத்தை அறிந்து இங்கே செயல்படுத்த முனையலாம் இல்லையா. இல்ல...இல்ல..அப்படின்னு புலம்பறதே இவங்களுக்கு வேலையா போச்சு.

  ReplyDelete
  Replies
  1. சகோ துரைடேனியல்,

   /* அமெரிக்காவில நயாகரா நீர்வீழ்ச்சில அந்த நாடு முழுமைக்கும் தேவையான கரண்ட் தயாரிக்கப்படுகிறதாம். அந்த தொழில் நுட்பத்தை அறிந்து இங்கே செயல்படுத்த முனையலாம் இல்லையா. */

   என்ன பண்றது நயாகரா மாதிரி இங்க ஒரு அருவி இல்லாம போனது நம்ம துர்அதிர்ஷ்டம் அப்டின்னு பிளேட்ட திருப்பி போற்றுவாணுக நம்ம அரசியல் வாதிகள்.
   நம்ம MLA க்கள் சட்டசபைல விவாதிக்கிற இலட்சணத்த பாக்கிறீங்க தானே??? இவங்கள வச்சிக்கிட்டு திட்டம் இல்ல, ஒரு சின்ன கட்டம் கூட போடா முடியாது.

   Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.