என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, March 01, 2012

24 கைது செய்யப்பட்ட ஸ்டாலினும், அனுப்பி வைத்த கலைஞரும்......ஸ்டாலினை கைதுசெய்ய இந்திராகாந்தி அனுப்பிய போலீஸ் கலைஞரின் இல்லத்தில் நுழைந்தபோது ஸ்டாலின் அங்கில்லை, கலைஞரே வரவேற்றார். தன் மகன் வெளியூர் சென்றிருப்பதாகவும், வந்தவுடன் தகவல் தெரிவிப்பதாகவும் கூறிய கலைஞர் அவர்களை திருப்பியனுப்பினார். பின்னர் ஸ்டாலின் வந்தபோது போலீசார் அவரை தேடிவத விஷயத்தை கூறி சிறை செல்ல தயாராக இருக்கும்படி பணித்து, போலீசாருக்கு தகவலும் சொன்னார். அதன்படி போலீஸ் அங்கு வந்தது ஸ்டாலினை கைதுசெய்ய....

கலங்காத ஸ்டாலின் தன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, தன் மனைவி துர்காவை தேற்றிவிட்டு போலீசாரால் அழைத்து இழுத்து செல்லப்பட்டார்.

ஏற்கனவே சிறையில் ஆற்காட்டார், ஆசைத்தம்பி, சிட்டிபாபு போன்ற தலைவர்கள் இருந்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு சிறைக்குள் அடைக்கப்பட்ட ஸ்டாலின் இரவு முழுவதும் தூங்கவேயில்லை. காலை, 10 மணிக்கு உணவாக கூழ் வழங்கப்பட்டது. பிடிக்காவிட்டாலும் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த கூழை சாப்பிட்டார். மதியம், கட்டிச்சோறும் கீரைத்தண்டு சாம்பாரும் வழங்கப்பட்டது. அதையும் சாப்பிட்டார்.

அடுத்தடுத்த நாட்களில் சிறையில் வழங்கப்பட்ட உணவில் மாற்றம் ஏற்பட்டது. மண்ணையும், மாவையும் கலந்து செய்த இட்லி காலை உணவாகவும், சில நேரங்களில் வேப்பை எண்ணை கலந்த சோறும், சில நாட்களில் உப்பு அதிகமாக கலந்த சோறும் வழங்கப்பட்டது. அதையெல்லாம் தண்ணீரில் அலசிவிட்டு சாப்பிட கற்றுக்கொண்டனர் ஸ்டாலினும், மற்றவர்களும்...

அடுத்துதான் அந்த பயங்கரங்கள் அரங்கேறியது. இரவானதும் ஆசைத்தம்பி,ஆற்காட்டார், சிட்டிபாபு, ஸ்டாலின் ஆகியோர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டனர்.
ஸ்டாலின் உடம்பை பூட்ஸ் கால்களால் தாக்கினர் போலிசார். ஒரு வார்டனால் ஸ்டாலினின் கண்ணம் பதம் பார்க்கப்பட்டது. இதையெல்லாம் கவனித்த சிட்டிபாபு, ஸ்டாலின் மேல் விழுந்து தடுத்தார். அடிகளை தானே வாங்கிக்கொண்டார். பயங்கரமாக தாக்கப்பட்ட சிட்டிபாபு வயிற்றுக்குள் பலத்த காயம் ஏற்பட்டு மரணமடைந்தார்.

அதன்பின்னே படிப்படியாக எமெர்ஜென்சி கொடுமைகள் அகற்றப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இது எதுக்கு இப்பன்னு கேட்கறீங்களா? இன்றைக்கு ஸ்டாலின் பிறந்த நாளாமே...அதான் ஒரு பழைய வரலாற்றை புரட்டிப்போடுவோமேன்னு.....Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. பழைய வரலாறுதான்.. ஆனாலும் புதுசா கொடுத்திருக்கீங்க..!!
  குட் கஸாலி..!!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா

   Delete
 2. ஸ்டாலின் வருங்கால முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதா?

  ReplyDelete
 3. ஸ்டாலின் வருங்கால முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதா?

  ReplyDelete
 4. ஸ்டாலின் வருங்கால முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதா?

  ReplyDelete
 5. ஸ்டாலின் வருங்கால முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதா?

  ReplyDelete
 6. ஸ்டாலின் வருங்கால முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதா?

  ReplyDelete
  Replies
  1. கேள்வி இடம் மாறி வந்துவிட்டதாக நினைக்கிறேன். அதுசரி....அதுக்கு ஏன் இத்தனை தடவை?

   Delete
 7. Replies
  1. இப்படி விளம்பரம் செய்வதை நிறுத்துடா வெண்ணை

   Delete
 8. சிறைக்கு செல்ல திமுக-வில் யாரும் தயங்கியது இல்லை...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்...ஊழல்செய்தும்

   Delete
 9. ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு இல்லை ........... ஏன் கட்சியை கூட கைப்பற்றி தக்க வைப்பது கடினம் என்று சொல்கிறேன் .. இது என் கணிப்பு இதுதான் நடக்கும் .

  ReplyDelete
  Replies
  1. இதென்ன...பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமா இருக்கு?

   Delete
 10. மாமா உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் நன்றி மாப்ஸ்

   Delete
 11. nalla irukku!
  ungaludaya parisu!

  ReplyDelete
 12. //அஞ்சா சிங்கம்Mar 1, 2012 07:11 AM
  ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு இல்லை ........... ஏன் கட்சியை கூட கைப்பற்றி தக்க வைப்பது கடினம் என்று சொல்கிறேன் .. இது என் கணிப்பு இதுதான் நடக்கும் .//

  ஆனால் 'தமிழ்நாட்டின் அசல்'தினகரன்' கஸாலி எடுத்த கருத்து கணிப்பின்படி ஸ்டாலினுக்கு 80% ஆதரவு உண்டாமே. என்னவோ போங்க. நமக்கு எதுக்கு அரசியல்..

  ReplyDelete
  Replies
  1. அசல் தினகரன்.....என்னங்கப்பா புது புது பட்டமா கொடுக்குறிங்க...

   Delete
  2. ஏப்பா சிவா...இன்னும் என்னென்ன பட்டம்பா கைவசம் வச்சிருக்கே?....தவனை முறையில் கொடுக்காம எல்லாத்தையும் ஒரு தடவையில கொடுத்திருப்பா

   Delete
 13. அதைக்கேளு ஹாஜா....முடியல

  ReplyDelete
 14. ஏனுங்க எதை பெரிய தியாகமா எழுதரிங்க .கலைஞர் ஆட்சியில் இருந்த போது போலீஸ் ஐ ஜி, மகளை துவம்சம் செய்த கதை தெரியாதா? ஒரு செய்திவாசிப்பவரை டீல் செய்த கதையும் எழுதவேண்டும்.கல்லூரியில்படித்த போது முதல்வர் மகன் கல்லூரி முதல்வர்களையும் பேராசிரியர்களையும் நடத்திய விதத்தையும் குறிப்பிட்டு எழுதுங்கள்.

  ReplyDelete
 15. இந்த சம்பவத்தை பற்றி என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.