என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, March 07, 2012

13 இளவரசரை வீழ்த்திய இளவரசர்......உ.பி.,தேர்தல் முடிவுகள் ஒரு கண்ணோட்டம்.....

த்திரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் என்று ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றாலும், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் உத்திரப்பிரதேசத்தின் மீதே இருந்தது. அதற்கு காரணம், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் இதுதான். ஏறக்குறைய 17 கோடி பேர்கள் மக்கள்தொகை கொண்ட மாநிலம் இது.
80 நாடாளுமன்ற தொகுதிகளையும், 403 சட்டமன்ற தொகுதிகளையும் அரசியல் ரீதியாகவும், 70 மாவட்டங்களை நிர்வாக ரீதியாகவும் உள்ளடக்கியது இம்மாநிலம்.
இங்கு 7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் நேற்று வெளிவந்தது.  நேற்றுவரை ஆளுங்கட்சியாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜை வெறும் இரட்டை இலக்க தொகுதிகளோடு சுறுக்கிவிட்டு மிகப்பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது முலாயமின் சமாஜ்வாடி.
முதல்வராக இருந்த மாயாவதி மக்களின் வரிப்பணத்தில் தன் கட்சி சின்னமான யானையை சிலைகளாக்கி ஆங்காங்கே  நிறுத்தியதன் மூலம் ஏகப்பட்ட வெறுப்பை சம்பாதித்திருந்தார். அத்துடன் தேசிய ஊரக சுகாதாரத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூபாய்களில் 10,000 கோடி ரூபாயை ஊழல் செய்துவிட்டதாக பத்திரிகைகள் அலறின...இது போதாதா எதிர்கட்சியினருக்கு?....

இந்த விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டன. விளைவு இனிமேல் எழவே முடியாது என்றிருந்த முலாயமை மீண்டும் நான்காவது முறையாக அரியணையில் ஏற்றியிருக்கிறது.
இதற்கிடையில் எப்படியாவது காங்கிரசை மீண்டும் அரியணை ஏற்றுவது என்று சபதம்செய்த இளவரசர் ராகுல் தீவிரப்பிரச்சாரத்தில் குதித்தார். ஒரு மாதத்திற்கு மேல் அங்கேயே முகாமிட்டு, ஏறக்குறைய 200 பொதுக்கூட்டங்களுக்கு மேல் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தார்.


 போதாக்குறைக்கு தன் சகோதரி பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதோதராவையும் கூட்டுசேர்த்துக்கொண்டார். அவர்களின் இரு குழந்தையையும் விட்டுவைக்கவில்லை காங்கிரசின் பிரச்சார வெறி.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போதுகூட 22 எம்.பி.,தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரசால், இப்போது 28 இடங்களுக்கு மேல் பெற முடியாமல் சுருங்கிவிட்டது பரிதாபம். இதில் அஜீத் சிங்கின் கட்சியோடு கூட்டணி வேறு...(இந்த தேர்தலை மனதில் வைத்துதான் அவசர அவசரமாக காங்கிரஸ் கூட்டணியில் சேர்க்கப்பட்டு மத்தியில் விமான போக்குவரத்து துறைக்கு  அமைச்சராக்கப்பட்டார் அஜீத்சிங்).

மக்கள் மத்தியில் காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இன்னொரு முக்கியமான காரணம் அகிலேஷ் யாதவ்.... சோனியாவின் இளவரசரோடு மோதிய முலாயமின் இளவரசர் இவர்.எதிர்காலமே இல்லாத கட்சியாக அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்ட சமாஜ்வாடி கட்சியை அரியணையில் அமரவைத்ததில் பெரும் பங்கு அகிலேஷ் யாதவிற்கு உண்டு. கடுமையான களப்பணிகள் மூலம், தன் தந்தையும், தன் கட்சியும் இழந்திருந்த செல்வாக்கை ஒரு சேர தூக்கி நிறுத்தியவர் இவர்.

இதை உணர்ந்த ராகுல், உ.பி.யில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களின் மனநிலை முலாயமிற்கு சாதகமாக இருந்ததை நான் பார்த்தேன். முலாயமிற்கும், அவரது மகன் அகிலேசிற்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும், உ.பி.,யில் காங்கிரசின் அடித்தளம் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. இந்த தேர்தல் தோல்விக்கு நான்தான் பொறுப்பு என்று பழியை தன் மீது போட்டுக்கொண்டுள்ளார்.காலம் கடந்த ஞானோதயம்.

பி.ஜே.பி.,யை பொறுத்தவரையில் உமாபாரதின் வரவு பெரிய மாற்றத்தை தரவில்லை இங்கு என்பதையே காட்டுகிறது. இத்தனைக்கும் ராமர் பிறந்ததாக சொல்லப்படும் அயோத்தி  இருக்கும் மாநிலம் இது.
இதில் அஜீத்சிங்கின் ராஸ்டிரீய லோக்தளம் கட்சிதான் பரிதாபத்துக்குரியது. ஏற்கனவே 5 எம்.பி.க்களை வைத்திருக்கும் இந்த கட்சிக்கு, காங்கிரசோடு கூட்டணி சேர்ந்ததன் பலன் வெறும் 9 இடங்களே கிடைத்துள்ளது.

மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகள் ஒரேயொரு முடிவைத்தான் சொல்கிறது.அதாவது, மக்களை மறந்து, மதிக்காமல் அதிகார போதையில் யார் இருந்தாலும் அவர்களின் முடிவு இப்படித்தான் அமையும்...அது மாயாவதியாக இருந்தாலும் சரி, ராகுலாக இருந்தாலும் சரி.

மொத்த இடங்கள்: 403
சமாஜ் வாடி: 224
பகுஜன் சமாஜ்: 80
பி.ஜே.பி: 47
காங்கிரஸ்: 28
ராஸ்டிரீய லோக்தளம்: 9
தேசியவாத காங்கிரஸ்: 1
சுயேட்சை/மற்றவர்கள்: 14


Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. மீண்டும் சேம் பிளட்...பட் கொஞ்சம் வித்தியாசம் ...நல்ல அலசல்

  ReplyDelete
  Replies
  1. தேர்தல் என்று வந்துவிட்டாலே நாம் எல்லோரும் சேம் ப்ளட் ஆகிவிடுவோம்

   Delete
 2. nalla alasal!

  nantri thakavalkalukku!0

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே

   Delete
 3. Replies
  1. Rahul out in U.P., I am in happy....இப்படி எதுகை மோனையுடன் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

   Delete
 4. Replies
  1. என்னது ஸ்மைலி போடாம அதிசயமா கமெண்ட் போட்டிருக்கீங்க?...

   Delete
 5. மக்கள் தெளிவாக இருக்கறார்கள்...

  இந்த தேர்தல் மூலம் ராகுலின் எதிர்காலம்தான் இந்த கேள்விகுறியாகியுள்ளது..

  சூடான அலசல்...

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே...தங்களின் வருகைக்கு நன்றி

   Delete
 6. அண்ணாச்சி, இந்தியா ஜனநாயக நாடுதானே....தலைப்பு மிரண்டு போயிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. ஜன நாயக நாட்டில்தான் இருக்கோம்....ஆனால், ராகுலை இளவரசராகத்தானே பார்த்தார்கள் காங்கிரசார்.

   Delete
 7. தற்போது மக்களவை தேர்தல் வந்தால் மூன்றாம் அணிதான் வெல்லும் எனப்படுகிறது சகோ

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.