என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, July 04, 2012

11 தி.மு.க.,வும் தீவிர போர்க்குணமும்.....
தி.மு.க.,ஆளுங்கட்சியாக இருக்கும்போது இல்லாத போர்க்குணம் எதிர்கட்சியாக இருக்கும். அந்தப்போர்க்குணம்தான் இத்தனை வருடங்களை கடந்தும் தி.மு.க.,வை இன்னும் உயிர் துடிப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறது. கடந்த பொதுத்தேர்தலிலும் அதை தொடர்ந்து நடந்த மாநகராட்சி தேர்தலிலும் அந்த கட்சி பெற்ற மரண அடியை தொடர்ந்து உடன்பிறப்புக்கள் கொஞ்சம் மந்த நிலையில் இருந்தார்கள். ஆனால்,அது நேற்றுவரை என்று இன்று நிருபித்துள்ளார்கள்.

சிறை நிரப்பும் போராட்டத்தை தி.மு.க.,அறிவித்ததும் இது பிசுபிசுத்து போய்விடும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனல், அந்த நினைப்பை பொய்யாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகியுள்ளனர். மு.க.ஸ்டாலின், கனிமொழி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்டவர்கள் போக மீதியிருந்த முன்னாள் அமைச்சர்களும் இந்த கைது ஜோதியில் ஐக்கியமாகிள்ளனர்.

அதே நேரம் அழகிரி உள்ளிட்ட சிலமுக்கிய தலைகள் ஆப்செண்ட் ஆகியுள்ளார்கள். ஆனாலும், இந்த போராட்டம் மூலம் தி.மு.க.,விற்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டதாகவே உணர்கிறேன். எமெர்ஜென்சி போன்ற எத்தனையோ அடக்குமுறைகளை கண்டும் அஞ்சாத கட்சி தி.மு.க.என்பதில் ஐயமில்லை. அதனால்தான் அரை நூற்றாண்டை கடந்தும் இன்னும் தி.மு.க.வெற்றி நடை போட்டுவருகிறது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 comments:

 1. தீவிர உடன்பிறப்புக்கள் இருக்கிற வரை தி.மு.க விற்கு கவலை இல்லை...

  அரசியல் கட்சிகள் இருக்கிற வரை உனக்கு கவலை இல்லை.. அவர்களை வைத்து நீ பதிவு தேத்திடுவ...

  மொத்ததில..எல்லாரும் சேர்ந்து நடத்துங்க நடத்துங்க...

  ReplyDelete
 2. மக்களுக்காக மாணவர்களுக்காக போராடிய இயக்கம்.. இப்போது?

  ReplyDelete
  Replies
  1. இப்பவும் மக்களுக்காக தான் போராடுறோம் .. தலைவரின் குடும்ப மக்கள் தமிழர்கள் தானே

   Delete
 3. ////ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்டவர்கள் போக மீதியிருந்த முன்னாள் அமைச்சர்களும் இந்த கைது ஜோதியில் ஐக்கியமாகிள்ளனர்.////
  nice

  ReplyDelete
 4. அழகிரி உள்ளிட்ட சிலமுக்கிய தலைகள் ஆப்செண்ட் ஆகியுள்ளார்கள்.

  ReplyDelete
 5. எளிய மக்களிடம் பதவி அதிகாரம் பயன்படுத்தி அடித்து பிடுங்கிய நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்தால் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தும் தி-----மு க தமிழகத்தின் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு தீர்க்க சிறை நிரப்புவர்கால

  ReplyDelete
 6. வாழும் வள்ளுவரை வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!!

  #யோவ்.. எகத்தாளமா போட்டோ போட்டு இருக்க?ஆட்டோ அனுப்பனுமா என்ன? ஒழுங்கா அந்த போட்டோவ எடுத்துட்டு, பொத்தம் பொதுவா ஒரு மன்னிப்புக் கேட்டுட்டு போய்க்கினே இரு!

  ReplyDelete
 7. இது தி.மு.க ணு ஒரு கட்சி தமிழகத்துல இருக்குனே நடத்துற போராட்டம்..

  புதிய வரவு:7 வயதில் முஸ்லிம் தீவிரவாதியான சிறுவன்-(photo gallery)

  ReplyDelete
 8. வெளங்காதவன்™04-Jul-2012 5:47:00 PM
  வாழும் வள்ளுவரை வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!!
  ////////////////////

  நான் குப்புற விழுந்து கும்பிடுகிறேன் .......................

  ReplyDelete
 9. என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அரசியலை பார்த்து நகைப்பதா ? மக்களை நினைத்து அழுவதா ?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.