என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, July 23, 2012

36 பிரணாப் ஜனாதிபதியானதில் யாருக்கு லாபம்? காங்கிரசுக்கா? பிரணாப்புக்கா?.....
ஒரு வழியாக ஜனாதிபதியாகிவிட்டார் பிரணாப். இந்திராகாந்தி மறைந்ததிலிருந்து பிரதமர் கனவில் இருந்தவருக்கு முதல் குடிமகன் அந்தஸ்து கிட்டியிருக்கிறது. முன்பு தான் நிதியமைச்சராக இருந்தபோது ரிசர்வ் பேங்க் கவர்னராக தன்னால் பரிந்துரைக்கப்பட்ட மன்மோகன்சிங் கூட பிரதமாராகிவிட்ட அதிருப்தியில் இருந்த பிரணாப்பை சரிகட்டும் விதமாக இப்போது ஜனாதிபதியாக்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.
இதன் மூலம் காங்கிரஸ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறது.

அதாவது மேலோட்டமாக பார்த்தால் பிரணாப்பை ஜனாதிபதியாக்கியதுபோல் தெரியும். ஆனால், அதனால் பிரணாப்பிற்கு லாபமோ இல்லையோ காங்கிரசிற்குத்தான் லாபம்.

அதிருப்தியில் இருந்தவரை ஜனாதிபதி ஆக்கியது போலும் ஆச்சு, எதிர்காலத்தில் ராகுலை பிரதமராக்குவது போலும் ஆச்சு. இந்திராகாந்தி மறைந்ததும் பிரதமர் பதவி தனக்குத்தான் கிட்டும் என்றிருந்தவருக்கு ராஜிவ்காந்தி பிரதமரானதில் ஏமாற்றமே மிஞ்சியது. உடனே காங்கிரசிலிருந்து வெளியேறி ராஸ்டிரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற கடையை திறந்து அது போனியாகாமல் ராஜீவ் காலத்திலேயே திரும்பவும் காங்கிரஸ் ஜோதியில் ஐக்கியமானார் பிரணாப்.

 அப்போதே இவ்வளவு குட்டி கலாட்டா செய்தவருக்கு ரொம்பவும் ஜூனியரான தான் பார்க்க பிறந்த ராகுலை பிரதமராக பார்ப்பதில் எப்படி உடன்பாடிருக்கும்?.

எதிர்காலத்தில் காங்கிரசில் ராகுல் பெரிய பதவி வகிக்க வேண்டுமானால், பிரணாப் தடையாக இருக்கக்கூடாது. அப்படி தடையாக இருக்கக்கூடாதென்றால் அவரை கட்சியிலிருந்தும் நீக்க முடியாது. வேறு என்ன செய்யலாம் என்று காங்கிரஸ் தீவிரமாக யோசித்ததன் விளைவே இந்த ஜனாதிபதி பதவி.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே காங்கிரசில் நான் பெரிய பதவியை ஏற்கத்தயார் என்று ராகுல் சொன்னதே இதற்கான சாட்சி. இப்போது சொல்லுங்கள் நான் சொல்வது உண்மையா?பொய்யா என்று?......

ஜனாதிபதி பதவி என்றாலே எடுப்பார் கைப்பிள்ளை பதவி என்றும், ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்றும் அவப்பெயர் இருக்கிறது. அந்த அவப்பெயரை இவராவது மாற்றுவாரா அல்லது இவரும் அப்படித்தானா என்று போகப்போகத்தெரியும்......

========================

ஜனாதிபதி ஆனதும் மக்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார் பிரணாப். இதற்கு ஏன் மக்களுக்கு நன்றி என்று தெரியவில்லை. மக்களா இவருக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள்?

அட யாருப்பா இவன் விளங்காதவனா இருக்கான்? மக்கள் பிரதிநிதிகள்தானே எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும்? இவர்கள் வாக்களித்தால் மக்கள் வாக்களித்ததுபோல்தானே என்று சொல்கிறீர்களா? அதுவும் சரிதான். மக்களின் அப்ரண்டீஸ்கள்தான் எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.க்களும்....ஆனால் மக்களிடம் நேரடியாக காங்கிரஸின் வேட்பாளராக போட்டியிட்டிருந்தால் தெரிந்திருக்கும். இப்போது காங்கிரஸ் மேல் மக்கள் இருக்கும் கடுப்பிற்கு சங்மாவே ஜெயித்திருப்பார். பிரணாப்பிற்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது. ஒருவேளை மக்கள் நேரடியாக வாக்களிக்காததற்காக மக்களுக்கு நன்றியை சொல்லியிருப்பாரோ? என்ன எலவோ?

=========================

தேர்தல் முடிந்துவிட்டது, வாக்குகளும் எண்ணியாகிவிட்டது, பிரணாப்பும் ஜனாதிபதியாகிவிட்டார். இதற்கு மேலும், அவரை விடுவதாக இல்லை சங்மா.வெற்றியை எதிர்த்து வழக்கு போடுவதாக சொல்லியிருக்கிறார். அதிலாவது அதிசயம் நிகழும் என்று எதிர்பார்க்கிறாரோ என்னவோ?.....எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் இவரு ரொம்ப நல்லவருப்பா.....

=========================

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்நாட்டில் விழுந்த ஓட்டுக்களில் நாலு ஓட்டு செல்லாத ஓட்டாம்..விளங்கிரும்...இவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதிகள். தி.மு.க.கூட்டணி ஓட்டுக்கள் அப்படியே பிரணாப்பிற்கு விழுந்துள்ளன. அண்ணா.தி.மு.க.,வினரின் ஓட்டுக்களில்தான் இந்த குளறுபடி.... அந்த நாலு சேடப்பட்டியாருக்கும் இருக்கு பூஜை....அதற்காகவே மலையேறிய ஜெயா மலையிறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...

=========================


Post Comment

இதையும் படிக்கலாமே:


36 comments:

 1. பிரணாப்னு இல்ல.. யாரு ஜனாதிபதி ஆனாலும் உனக்கு தான் லாபம்...அத வச்சு மினிமம் 3 போஸ்ட் தேத்திட்றியே???

  ReplyDelete
  Replies
  1. அண்ணே சரியா சொனீங்க ....

   Delete
  2. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல...

   Delete
 2. //ஜனாதிபதி பதவி என்றாலே எடுப்பார் கைப்பிள்ளை பதவி என்றும், ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்றும் அவப்பெயர் இருக்கிறது. அந்த அவப்பெயரை இவராவது மாற்றுவாரா அல்லது இவரும் அப்படித்தானா என்று போகப்போகத்தெரியும்......


  இதிலென்ன உங்களுக்கு சந்தேகம்? நிதி அமைச்சராய் என்ன செய்தாரோ அதை விட சிறப்பாகவே இந்த பணியை செய்வார் :)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... செயல்படுவாருன்னு சொல்றீங்களா? செயல்பட மாட்டாருன்னு சொல்றீங்களா? ஒண்ணுமே புரியல

   Delete
 3. சரியான பார்வையுடன் எளிமையான நடையில் எழுதிருக்கிரீர்கள்.
  நன்றாக இருக்கிறது.

  "எதிர்காலத்தில் காங்கிரசில் ராகுல் பெரிய பதவி வகிக்க வேண்டுமானால்,
  பிரணாப் தடையாக இருக்கக்கூடாது.
  அப்படி தடையாக இருக்கக்கூடாதென்றால்
  அவரை கட்சியிலிருந்தும் நீக்க முடியாது.
  வேறு என்ன செய்யலாம் என்று காங்கிரஸ்
  தீவிரமாக யோசித்ததன் விளைவே இந்த ஜனாதிபதி பதவி"

  ---------------------சூப்பர் வரிகள்....
  .
  "ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே
  காங்கிரசில் நான் பெரிய பதவியை ஏற்கத்தயார்
  என்று ராகுல் சொன்னதே இதற்கான சாட்சி"

  -----------------மிகச்சரியான கருத்து.

  ஆனாலும் பாருங்கள் சகோதரர்.

  நேரு குடும்பத்தின் கடைசி வாரிசு.

  இவரின் காலத்திற்கு பிறகு வரப்போகும் விழைவுகள் குறித்து
  பாசிஸ்டுகள் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. காங்கிரசிற்குத்தான் லாபம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்....அண்ணே...அதுதான் உண்மை.

   Delete
 5. //இந்திராகாந்தி மறந்ததிலிருந்து ///மறைந்த்ததில் இருந்து தானே சரி இல்லை அரசியல் உள்குத்தா சகோ ....
  மன்னிக்கவும் பிழையென்றால் சரி செய்யவும் ...

  ReplyDelete
  Replies
  1. மறைந்ததிலிருந்து என்பதுதான் சரி...தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.....திருத்திவிட்டேன்

   Delete
 6. அவரால உங்களுக்குத்தான் லாபம். அவருடைய சம்பளம் பற்றியும் எழுதி இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. அவருடைய சம்பளம் பற்றிய பதிவல்ல இது என்பதால் தவிர்த்துவிட்டேன்...ஆனாலும், சகோ சிந்தனை இதைப்பற்றி தெளிவாக பின்னூட்டமிட்டுள்ளார் பார்த்துக்கொள்ளுங்கள்.

   Delete
 7. நல்ல அலசல்.....வாழ்த்துக்கள்....... தொடருங்கள்........சமூகத்தின் மீதான உங்கள் விமர்சனங்களை.....நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதிவும் அப்படித்தான் இருக்கு.....வருகைக்கு நன்றி

   Delete
 8. யாருக்கு லாபமோ!ம்க்களுக்கு ஒரு லாபமுமில்லை

  ReplyDelete
  Replies
  1. அதுதான் உண்மை அய்யா....

   Delete
 9. //ஜனாதிபதி தேர்தலில் தமிழ்நாட்டில் விழுந்த ஓட்டுக்களில் நாலு ஓட்டு செல்லாத ஓட்டாம்..விளங்கிரும்.//

  :-)))))))))

  வெளங்கிடும்!

  ReplyDelete
  Replies
  1. உருப்பட்ட மாதிரிதான்

   Delete
 10. ப்ரணாப் முகர்ஜி 13 வது ஜனாதிபதியாமே.
  13 ராசியில்லை என்பார்களே! அவருக்கு தெரியாதா?
  சகாதேவன்

  ReplyDelete
  Replies
  1. எண்களில் என்ன இருக்கு...எண்ணத்தில் தான் எல்லாம் இருக்கு

   Delete
 11. முதல் குடிமகனை தேர்ந்தெடுப்பதிலும் செல்லாத ஒட்டா..! அசிங்கம்.
  நன்றி.(த.ம.13)

  ReplyDelete
  Replies
  1. இவர்களை தேர்ந்தெடுத்ததற்காக நாம்தான் வெட்கப்பட வேண்டும்

   Delete
 12. ரொம்பவும் அருமையா அலசி இருக்கீங்க! பிரணாப் ஜனாதிபதி ஆனதில் ராகுலுக்கும் அன்னைக்கும் அளவற்ற மகிழ்ச்சி என்பதில் சந்தேகம் இல்லை! நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் உங்கள் தளம் வந்துள்ளேன்! சிறப்பான பதிவை படித்து திருப்திஅடைந்தேன்!

  ReplyDelete
  Replies
  1. நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்ததோடு மட்டுமல்லாமல், கருத்தும் சொன்ன உங்களுக்கு நன்றி

   Delete
 13. பிரணாப் ஜனாதிபதி ஆனதுனால யாரூக்கு லாபம்? இதுகூட உங்களுக்கு தெரியலையா? இப்ப தெரிஞ்சுக்குங்க 2 விஷயம்.

  பிரணாப் குடும்பம் அடுத்த 5 வருடம் உலகம் முழுவதும் இலவசமாக சுற்றுலா சென்று வரலாம் அதுமட்டுமல்ல உலக தலைவர்கள் கூட இலவச சாப்பாடு சாப்பிடலாம்

  அடுத்தாக அவ்ரின் டூருக்கு அரேஞ் செய்யும் டிராவல் எஜென்ஸிக்கு அடுத்த 5 ஆண்டு நல்ல லாபம்தான்

  ReplyDelete
  Replies
  1. ஹா....ஹா... இது நல்லா இருக்கே

   Delete
 14. ஸலாம்

  புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கிடைக்கும் வசதிகள்

  புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு மாத சம்பளமாக ரூ.1 1/2லட்சம் கிடைக்கும்.

  பிரமாண்டமான ஜனாதிபதி மாளிகையில் அவர் வசிப்பார்.

  ஜனாதிபதி மாளிகையை பராமரிக்க சுமார் 200 ஊழியர்கள் இருக்கிறார்கள்.

  சிம்லாவிலும், ஐதராபாத்திலும் ஜனாதிபதிக்கு ஓய்வு இல்லங்கள் உள்ளன.

  அவர் பயணம் செய்ய குண்டு துளைக்காத மெர்சிடெஸ் பென்ஸ் கார் வழங்கப்படும்.

  ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், மாத ஓய்வூதியமாக ரூ.75 ஆயிரம் கிடைக்கும்.

  குடியிருக்க அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு பங்களாவும் வழங்கப்படும்.

  மேலும் ஒரு கார், 2 டெலிபோன் இணைப்புகள், ஒரு செல்போன் இணைப்பு ஆகியவையும் வழங்கப்படும்.

  அவருக்கு உதவியாக ஒரு தனிச்செயலாளர் உள்பட 5 ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள்.

  ஊழியர்கள் செலவுக்காக ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.

  விமானத்திலும், ரெயிலிலும் மனைவியுடன் இலவசமாக பயணம் செய்யலாம்.

  நன்றி : ஈமெயில்

  ReplyDelete
  Replies
  1. தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி

   Delete
 15. ஜனாதிபதி பதவிக்கு மரியாதை ஏற்படுத்தியவர்கள் ஒரு சிலரே!அவர்களில் ஒருவராக பிரணாப் இருப்பாரா என்பது கேள்விக் குறியே!

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலாம் நண்பரே....

   Delete
 16. பிண்ணனி சூட்சுமங்களை அலசி ஆராய்ந்துள்ளீர்கள். அருமை. (த.ம.18)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அண்ணே

   Delete
 17. யாருக்கு லாபம்:(

  ReplyDelete
  Replies
  1. பொறுத்திருந்து பாருங்கள் புரியும்

   Delete
 18. அருமையான அலசல் சகோ.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.