என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, July 09, 2012

7 நான் ஈ என்கிற நானி
ஹீரோயினை அடைய வில்லன் விரும்புகிறான். அதற்கு தடையாக இருக்கும் ஹீரோவை கொலைசெய்கிறான்.கொலைசெய்யப்பட்ட ஹீரோ வில்லனை பழிவாங்கிறான். பார்த்துப்பார்த்து பழகிவிட்ட வழக்கமான கதைதான். ஆனால், வில்லனை பழிவாங்க ஹீரோ எடுக்கும் அவதாரம் ஈ. என்று வித்தியாசமான சிந்தனையுடன் களமிறங்கி தன் ஒன்பதாவது படத்திலும் ஜெயித்திருக்கிறார் ராஜமௌலி.

குத்துப்பாட்டு இல்லை, முகம் சுளிக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை, ஆபாசமில்லை. ஒரு டீசண்டான படத்தை கொடுத்து தமிழிலும் இயக்குனராக அறிமுகமாகி முத்திரையை அழுத்தி பதித்துள்ளார் ராஜமௌலி.

சமந்தாவை ஒருதலையாக இரண்டுவருடங்கள் காதலிக்கிறார் நானி(ஹீரோவின் பெயரும், கேரக்டர் பெயரும் ஒன்றுதான்). அவ்வப்போது சமந்தாவை கலாய்க்கவும் செய்கிறார். அவரின் சேட்டைகளை சமந்தா ரசித்தாலும் காதலை சொல்லாமல் இருக்கிறார். இதற்கிடையில் தான்  நடத்தும் ஒரு ஆசிரமத்திற்காக சுதீப்பிடம் நன்கொடை கேட்டு போகும் சமந்தாவின் அழகில் மயங்கி அவரைஅடைய நினைக்கிறார் சுதீப். தான் நினைத்ததை சாதித்துவிடும் சுதீப்பிற்கு நானியின் காதல் இடைஞ்சலாக இருக்கிறது. எனவே அவரை கொலைசெய்துவிடுகிறார் . அதன் பிறகு நானி நான் ஈயாக மாறி பழிவாங்குவதே கலக்குவதே கதை.


குறிபார்த்து துப்பாக்கிசுடும் வில்லன், மினியேச்சர் செய்வதோடு மட்டுமல்லாமல் காது கேட்க, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் உடல்மொழிகளை புரிந்துகொள்ளும் ஹீரோயின் என்று கதையின் பிந்தைய தேவைகளை ஆரம்பித்திலேயே சொல்லி லாஜிக் மீறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர்.

இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ வில்லனாக நடித்த சுதீப்தான். ஈயிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படும் இடங்களில் பிச்சு உதறுகிறார் மனுஷன்.
ஈ வரும் காட்சிகளில் கிராபிக்ஸ் என்றே தெரியாத அளவிற்கு, அருமையாக உழைத்திருக்கிறது CG டீம்.
பாடல்களில் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் பின்ணணி இசையில் ஈடா...ஈடா என்று ர்க்கிறார் மரகதமணி....

சமந்தா இந்தப்படத்திற்கு பிறகு தமிழ்,தெலுங்கு,மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் கலக்கப்போவது உறுதி....
நான் ஈ குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவரும் கோல்டன் ஈ.


Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.