என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, September 21, 2012

36 வானில் பறந்த பதிவர்........
கடந்த திங்கள் கிழமை மலேசியாவிலிருந்து வந்திருந்த நண்பனை பயணம் அனுப்புவதற்காக ஏர்ப்போர்ட் செல்லும் வழியில், ஓரிடத்தில் காருக்கு டீசல் நிரப்ப பெட்ரோல் பாங்கில் காரை நிறுத்தினோம். டீசல் நிரப்பும் இடைவெளியில்  வயதான பெண் ஒருவர் சேவிங் ரேசர் விற்பனை செய்துகொண்டிருந்தார். எங்களிடமும் வந்து கேட்டார். நமக்கோ சேவிங் செய்து பழக்கமில்லை. அதனால், நமக்கு ரேசர் தேவையில்லை.  என் நண்பனும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அந்த பெண்மணியும் எங்களை விடுவதாக இல்லை.

மலேசியாவில் கண் பார்வை இல்லாதவர்கள், வயதானவர்கள் வழக்கமாக இப்படி ஏதாவது ஒரு பொருளை வியாபாரம் செய்வார்கள். அவர்களிடம் பொருட்களை வாங்காவிட்டாலும் நம்மிடம் இருக்கும் ஒரு ரிங்கிட். இரண்டு ரிங்கிட்களை  தானமாக கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள். அதே நினைப்பில் இங்கே வியாபாரம் செய்யும் பெண்ணும் இருப்பாரோ என்று என்னிடம் இருந்த ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினேன். உடனே அந்தப்பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. நாங்கள் ஒரு கம்பேனி பொருளை விற்கிறோம், உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாங்கிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம்ன்னு சொல்லி விடுங்கள். அதை விட்டுவிட்டு இப்படி பிச்சை போட்டு எங்களை கேவலப்படுத்திவிடாதீர்கள் என்றார் முகத்தில் அடித்தது போல..... எங்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. வாழ்க இவர்களின் தன்மானம்.

=================
நேற்றோடு என் தளம் பத்து லட்சம் ஹிட்ஸ்களை கடந்துவிட்டது. அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி .....

=================ஒரு கதை.......

ஒருவனுக்கு திடீரென்று வானத்தில் பறக்கும் சக்தி வந்து விட்டது. அதை தன் மனைவி உட்பட யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தான் அவன். அவ்வப்போது பரந்தும் பறந்தும் பார்ப்பான். அப்படி ஒரு நாள் பறந்து கொண்டிருந்தபோது ஊரே வேடிக்கை பார்த்தது ஆச்சர்யப்பட்டது. அவன் மனைவி உட்பட...., ஆனால் யாருக்கும் தெரியாது பறந்தது இவன்தான் என்று....

பறந்தவன் இரவு வீடு திரும்பும்போது அவன் மனைவி ஓடிவந்து ஏங்க...இன்னைக்கு ஒரு ஆள் வானத்தில் பறந்தார். விமானம் கூட தோற்றுவிடும் போல....அவ்வளவு நேர்த்தியாக பறந்தார் என்று புகழ்ந்தாள்.

தினமும் அவன் பறப்பதும், ஊரே வேடிக்கை பார்த்து ஆச்சர்யத்தில் வாய் பிளப்பதும், இவன் மனைவி அதை புகழ்வதுமாக பொழுது கழிந்தது. ஒரு நாள் இரவு அவன் மனைவி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இவன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் அப்படி பறந்தது நான் தான் என்று சொல்லிவிட்டான்.

அடுத்த நாள் அவன் மனைவி அதை ஊரிலிருப்பவர்களிடம் சொல்லிவிட்டாள். நேற்றுவரை புகழ்ந்தவர்கள் இப்போது அதானே பார்த்தேன். என்னடா ஒரு பக்கம் நொண்டி நொண்டிக்கு பறக்கிறானே, ஒழுங்கா பறக்கக்கூட தெரியலியேன்னு நினைச்சுக்கு இருந்தோம். பறந்தவன் உன் புருஷன் தானா? வேற ஆளா இருந்தா நல்லா பறந்திருப்பான் என்றார்கள்.அதன்பின் அவன் பறப்பதை ஊரே வேடிக்கை பார்த்தது குறைகளுடனும், கிண்டலுடனும். நேற்றுவரை சரியாக பார்த்தவர்களுடன் இப்போது வேறு கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இனி நம்ம கதையும் அப்படித்தான். எங்கேன்னு கேட்கறீங்களா? எங்கேயோ......
ஏதோ சொல்லனும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்.Post Comment

இதையும் படிக்கலாமே:


36 comments:

 1. பத்துலட்சம் ஹிட்ஸ்களுக்கு வாழ்த்துகள்.அந்த மூதாட்டியின் தன்மானம் போற்றப்படவேண்டியஒன்று

  ReplyDelete
 2. பத்து லட்ச்ம் ஹிட்ஸ் என்ற மைல் கல்லிற்க்கு என் வாழ்த்துக்கள்...
  என்னது அதவிட அதிகம் போயி இருக்கும்ல??? ஹா..ஹா..ஹா

  ReplyDelete
 3. சில அரைவேக்காடுகளை தவிர யாரும் அப்படி நினைக்க மாட்டாங்க... அப்படி நினைச்சாலும் ஒன்னும் நட்டமில்லை கஸாலி....

  ReplyDelete
 4. hits kku vaazhthukkal!

  sampavam!
  kathai !

  arumai!

  ReplyDelete
 5. // நாங்கள் ஒரு கம்பேனி பொருளை விற்கிறோம், உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாங்கிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம்ன்னு சொல்லி விடுங்கள். அதை விட்டுவிட்டு இப்படி பிச்சை போட்டு எங்களை கேவலப்படுத்திவிடாதீர்கள் என்றார் முகத்தில் அடித்தது போல..... எங்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. வாழ்க இவர்களின் தன்மானம். //

  வாழ்க அவரின் தன்மானம்... சுயமரியாதை....

  ReplyDelete
 6. மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. உழைத்துப் பிழைக்கும் மூதாட்டியைப் பாராட்டுவோம். பத்து லட்சம் ஹிட்ஸ் கடந்த உங்களை மனம் நிறைய வாழ்த்துகிறேன் தம்பி. கடைசில சொல்லியிருக்கற பறந்த கதை நல்லாவே இருக்கு. (உள்ளர்த்தம் எதும் இல்லைதானே...?)

  ReplyDelete
 8. பார்வையாளர்களின் வருகை விரைவில் நூறு இலட்சமாக வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 9. //சிராஜ்21-Sep-2012 11:44:00 AM
  பத்து லட்ச்ம் ஹிட்ஸ் என்ற மைல் கல்லிற்க்கு என் வாழ்த்துக்கள்...
  என்னது அதவிட அதிகம் போயி இருக்கும்ல??? ஹா..ஹா..ஹா//

  அண்ணன் சிராஜ் ஒரு பதிவு போட்டாலே லட்சக்கணக்குல சட்டை கிழியுது. அது போதாதா!!

  ReplyDelete
 10. மூதாட்டியின் தன்மானத்தை தாங்கள் கண்டதுபோல், நாலைந்து வருடத்திற்கு முன் நான் ஒரு மாற்றுத்திறனாளியிடன் கண்டேன். உன்மையில் இவர்களின் உழைப்பு வனங்கத்தக்கவை.

  மில்லினியர் கஸாலி மல்டி மில்லினியர் ஆக வாழ்த்துக்கள். :-)))

  ReplyDelete
 11. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... தூள் கிளப்புங்க பாஸ்...

  ReplyDelete
 12. பத்து லட்சம் ஹிட்ஸ் இக்கு என் வாழ்த்துக்கள் .........

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 13. கடைசியா போட்ட பதிவுக்கும் இந்த பதிவின் கடைசி கதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என தோன்றுகிறது பொதுவா நீங்க அரசியல் பதிவு போடுவீங்க அதுபோல் கடந்த பதிவும் ஒரு அரசியல் பதிவுதான் மத உணர்வை சீண்டி அதன் மூலம் ஹிட்ஸ்,அரசியல் ஆதாயம் காண துடிக்கும் ஒரு சாரார் களின் சூழ்சியை அலசிய பதிவு

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் அண்ணே!
  கதை சூப்பர்

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் கசாலி பாய்,
  அந்த மூதாட்டியின் தன்மானத்துக்கு ஒரு லால் சலாம்.
  வாழ்ந்து கெட்ட குடும்பமாக இருக்க வாய்ப்பிருக்கிறது அவர்களின் கஷ்ட காலம் அவர்களை தெருவில் இறக்கிவிட்டிருகிறது, அதனால்தான் தாங்கள் தர்மம் செய்ய முன் வந்த போது அவர்கள் கோபப்பட்டிருக்கிரார்கள்.
  உங்கள் கதை அருமை,யாரை பத்தியும் கவலைப்படாதிர்கள்.உங்களுக்கு எது சரியா படுதோ அது எழுதுங்க பாய்.

  ReplyDelete
 17. அண்ணா... நேத்து முழுக்க இங்கேயே இருந்து ஸ்க்ரீன் சாட் எடுத்து ஆச்சர்யப்படுத்தலாம்னு நெனச்சேன்! மிஸ் ஆச்சு.... என்ன செய்ய எக்கசக்க வேல... எங்கேயாவது பிரச்சனைன்னா நம்மலதான் நாட்டாம பண்ண கூப்டுதுக... ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 18. அந்த மூதாட்டியை நெனச்சா பெருமையா இருக்கு...

  ReplyDelete
 19. பத்து லட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துகள் அண்ணா...

  ReplyDelete
 20. சலாம் அண்ணே.. !

  பத்து லட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள் :)


  கடைசில அந்த கதைல எனி உள்குத்து??? எங்கேன்னு கேக்குரின்களா? எங்கேயோ..!! எதோ கேக்கனும்ன்னு தோனுச்சு கேட்டுட்டேன் ஹிஹஹி

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் அண்ணே.....

  ReplyDelete
 22. மில்லியனர் ஆகிட்டீங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. பத்துலட்சம் ஹிட்ஸ்களுக்கு வாழ்த்துகள் சகோ..,

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 25. பத்து லட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள் Kazali !!

  ReplyDelete
 26. வாழ்த்துகள்..1000000 விரைவில் 10000000 ஆகட்டும்..

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. பத்து லட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள் கஸாலி

  கதை சூப்பர். பார்பவரின் கண்ணோடமும் மனதில் எண்ணமும் சரியில்லை. விட்டுதள்ளுங்கள். தங்களது எழுத்து பணி தொடரட்டும்.

  செய்யது
  துபாய்

  ReplyDelete
 29. பத்து லட்சத்துக்கும் மேலும் நீங்க நல்லா பறக்கணும் கஸாலி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. 10 லட்சத்துக்கு வாழ்த்துகள் கஸாலி..சீக்கிரம் கோடீஸ்வரனாக வாழ்த்துகள்.........அப்புறம், அந்தக் கதை சூப்பர்!

  ReplyDelete
 31. 10 லட்சத்துக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 32. ஆஹா..... பத்து லட்சமா!!!!! முதலில் எங்கள் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்.

  விரைவில் கோடியாக இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 33. அருமை

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.