என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, September 05, 2012

21 நான் மட்டும்தான் அப்பாடக்கர் பதிவரா?.....
பிரபல அரசியல் பதிவர், அரசியல் சாணக்கியன், பதிவுலக ’சோ”............
இதெல்லாம் தற்போது எனக்கு கிடைத்திருக்கும் பட்டங்கள். அட.....இதுக்கெல்லாம் நாம தகுதியான ஆள்தானா என்று பார்த்தோம் என்றால் அதுதான் இல்லை.நான் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கரும் இல்லை.  என்னை விட, திறமையான ஆட்களெல்லாம் பதிவுலகில் இருக்கிறார்கள். என்ன அவர்கள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப்போய் நான் கொஞ்சம் பெரியாளாகிவிட்டேன் அவ்வளவுதான். ஆலை இல்லாத ஊருக்கு இழுப்பை பூ சர்க்கரை.
எனக்குத்தெரிந்து, என்னை விட மிகவும் சிறப்பாக அரசியல் பதிவெழுதுபவர் நண்பர் செங்கோவி. அவரின் மன்மத லீலைகள் தொடர் ரொம்ப பிரபலம். தொடர் கதையில் கூட அரசியலை நுழைப்பதில் வல்லவர். எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் முருக வேட்டை என்ற தொடர் எழுதிவருகிறார். படித்துப்பாருங்கள் அவரின் அரசியல் அறிவு புலப்படும். நானா யோசிச்சேன் என்ற கதம்பத்தில் கூட, அரசியலை புகுத்தியிருப்பார். சமீபத்தில்கூட, திமுக / அதிமுக ஆட்சியில் பதிவு எழுதுவது எப்படி? என்ற பதிவை எழுதியிருக்கிறார். சான்சே இல்லை. அருமையான பதிவு. 


இப்போது நானும் அவரும் இணைந்து அரசியல்வாதி என்ற தளத்திலும் பணியாற்றுகிறோம். அந்த தளத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக.....
அரசியல்வாதி என்ற தளம் உங்களின் அரசியல் கேள்விகளுக்காக தீர்வு சொல்லும் ஒருதளம். உங்கள் சந்தேகங்களை arasiyalvaadhi@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பினால் முடிந்தவரை விருப்பு வெறுப்பு இல்லாமலும், அரசியல் சார்பு இல்லாமலும் பதில் கிடைக்கும். நாங்கள் அத்தனை பெரிய அப்பாடக்கர் இல்லை என்றாலும் எங்களால் முடிந்தவரை உங்களின் கேள்விக்கு பதில் தேடி தருகிறோம். அந்த தளத்தின் முகவரி......


உங்கள் ஆதரவை அங்கும் தாருங்கள் நண்பர்களே....


===================

இப்போது என் வலைப்பதைவை ஆண்ட்ராய்டு போனில் தெரியுமாறு வடிவமைத்திருக்கிறேன். உங்களிடம் ஆண்ட்ராய்டு போன் இருந்தால் இந்த லிங்கில் போய் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அல்லது கீழிருக்கும் பார்கோடை(barcode) உங்கள் போனில் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.
Post Comment

இதையும் படிக்கலாமே:


21 comments:

 1. பார் கோடா...? இதுக்கெல்லாம் கோட் வேற கொடுக்கறாங்களாப்பூ? பிரபல அரசியல் பதிவர்கள் பணியாற்றும் அரசியல்வாதி தளம் நிச்சயம் நல்லாவே இருக்கும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. எவ்வளவு பெரிய அடக்காமா...!  ReplyDelete
 3. ////////
  அரசியல் பதிவெழுதுபவர் நண்பர் செங்கோவி. ////////


  அவரின் மன்மத லீலைகள் தொடர் ரொம்ப பிரபலம்

  அப்படியா..?

  ஆனால் தலைப்பு நல்லா இருக்குங்க...

  ReplyDelete
 4. அன்பின் கஸாலி - செங்கோவியின் பதிவுகளையும் அரசியல் வாதி தளத்தினையும் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. //நான் மட்டும்தான் அப்பாடக்கர் பதிவரா?//

  இதில சந்தேகம் வேறா

  ReplyDelete
 6. இரு பிரபலங்களும் இணைந்து மேலும் மிளிரட்டும்... வாழ்த்துகள் அண்ணே

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சகோஸ்

  ReplyDelete
 8. நண்பரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. போட்டுத்தாக்குங்க..

  ReplyDelete
 10. புதியதளம் மாபெரும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 11. நல்லதொரு தகவல்! வாழ்த்துக்கள் நண்பரே!

  இன்று என் தளத்தில்
  பழஞ்சோறு! அழகான கிழவி!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

  ReplyDelete
 12. நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் தான் செங்கோவி அண்ணனை பற்றி என்னிடம் கூறியிருந்தார்

  ReplyDelete


 13. கண்டேன் வலைத் தளத்தை! கருத்திட்டேன்! வந்தேன்!

  ReplyDelete
 14. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
 15. அரசியல்வாதி தளமும் வெற்றி பெறட்டும்.

  ReplyDelete
 16. காளைகள் ரெண்டும் சரியான ஜோடி. ரேக்ளார் வண்டி இனி முழு வேகத்தில் செல்ல என் ஆதரவு.

  ReplyDelete
 17. வணக்கம்,கஸாலி!என்னமோ போங்க;"அந்த"த் தளம் எனக்கு தெரிய மாட்டேங்குது!இது மட்டுமில்ல,நான் பேச நினைப்பதெல்லாம்,கோகுல் மனதில் .................இன்னும் சில தளங்களைத் திறந்தால்,இழுத்து இழுத்து...................ஏன் என்று தெரியவில்ல.பலரிடம் முறையிட்டும் பயனில்லை.அந்த "கொம்" மாற்றிய பின் தான் இந்தத் தொல்லை.என்னவென்று கொஞ்சம் பாருங்களேன்/சொல்லுங்களேன்?

  ReplyDelete
 18. நீங்கள் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.