என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, December 05, 2012

18 நாஞ்சில் சம்பத்தும் ஃபேஸ்புக் ஸ்டேட்டசும்.
தாயகத்திலிருந்து கிளம்பிய புயல், அறிவாலயத்தில் கரையை கடக்கும் என்று பத்திரிகைகளும் வரிந்துகட்டி எழுதிக்கொண்டிருக்கொண்டிருந்த போது, அந்தப்புயல் எல்லோரையும் ஏமாற்றி திசை மாற்றிவிட்டு கார்டனில் கரையை கடந்திருக்கிறது.


கடந்த வாரம் ஜூ.வி.யில் ஒரு பேட்டி அளித்திருந்தார் சம்பத். அதில்
கலைஞரை கபட நாடகம் ஆடுகிறார் என்றும் ஜெயலலிதா நல்லாட்சி புரிகிறார் என்றும் சொல்லியிருக்கும் போதே சம்பத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யூகித்தேன்.


"கலைஞரிடம் இருந்தால் தம்பி. வைகோவுடன் இருந்தால் கம்பி ஜெயலலிதாவிடம் இருந்தால் எம்.பி",என்று அடிக்கடி சொல்வார்ம.தி.மு.க,விலிருந்து  விலகி அண்ணா.தி.மு.க.,வில் இணைந்து எம்.பி.,யான நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். அந்த வார்த்தைகள் காதில் விழுந்திருக்கும் போல. அதைப்போல் ம.தி.மு.க,விலிருந்து விலகிய இன்னொரு பிரபலமான பழ.கருப்பையாவும் இப்போது அண்ணா.தி.மு.க., எம்.எல்.ஏ.,

அதேநேரம் ம.தி.மு.க.,விலிருந்து விலகி தாய்க்கழகமான தி.மு.க.,வில் இணைந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன்,கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொன்.முத்து ராமலிங்கம் ஆகியோர் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்கள். இதையெல்லாம் கூட்டி கழித்து வகுத்து பெருக்கி பார்த்த சம்பத் இந்த முடிவை எடுத்திருப்பார் என்றே நினைக்கிறேன். அரசியல் என்றாலே ஆதாயக்கணக்குதானே.

கட்சியில் இணைந்து உறுப்பினர் அட்டை பெற்றதோடு மட்டுமல்லாமல், கழக இணை கொ.ப.செ.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியில் சேர்ந்த உடனேயே பதவியை பெற்றது சம்பத்தாகத்தான் இருக்கும்.

சரி சம்பத்தின் வரவால் அண்ணா.தி.மு.க,விற்கு லாபமா என்று பார்த்தால் நிச்சயம் லாபமே. அண்ணா.தி.மு.க.,வில் பேச்சாளர் வறட்சியை இவர் ஈடுகட்டுவார். காளிமுத்துவிற்கு பிறகான வெற்றிடத்தை இவர் வெற்றிகரமாக நிரப்பலாம். ஆனால். காளிமுத்துவிற்கு நிகராகவெல்லாம் இவரால் வரவே முடியாது. அப்படி ஒரு அற்புதமான பேச்சாளர் காளிமுத்து.

பார்க்கலாம் சம்பத்  இதே மரியாதையுடன் இருக்கிறாரா அல்லது அவரே அடிக்கடி சொல்வதுபோல் அடிமைகள் கூடாரத்தில் அடிமைகளோடு அடிமையாக ஐக்கியமாகிறாரா என்று....

---

என் ஃபேஸ்புக்கிலிருந்து 

கட்சியில் சேர்ந்த உடனே துணை.கொ.ப.செ.,கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டார் ஜெ- நாஞ்சில் சம்பத்# 
இனிமே பாருங்க இன்பம் இருக்காது வெறும் அதிர்ச்சி மட்டும்தான் இருக்கும்.


கட்சியில் சேர்ந்த உடனே எனக்க துணை கொ.ப.செ., பதவியளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஜெயா- நாஞ்சில் சம்பத் #
இனிமே பாருங்கண்ணே..இதை விட பெரிய பெரிய அதிர்ச்சி எல்லாம் கொடுப்பார் ஜெ.

சுய மரியாதையை இழந்து சிங்கத்திற்கு வாலாய் இருப்பதை விடுத்து, சுயமரியாதையுடன் எலிக்கு தலையாகவே இருந்து தொலைத்திருக்கலாம்.

நல்லவேளையாக நாஞ்சில் சம்பத் தி.மு.க.,வில் சேரவில்லை. சேர்ந்திருந்தால் நாஞ்சிலோடு சேர்த்து கலைஞரையும் திட்டியிருப்பார்கள் இணையத்தில் இப்போது அவரை புகழும் ரத்தத்தின் ரத்தங்கள்.
Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. Good analysis Kazali ! Particularly liked what SS Chandran said (Thambi/ Kambi- MP) . It is true only :)

  ReplyDelete
 2. இனி விடுதலை புலிகளை ஆதரிக்கமாட்டேன் என்று பேசி இருப்பது, சம்பத்தின் ராஜவிசுவாசத்தின் இன்னொரு அத்தாட்சி, ஆகவே இன்னுமொரு அடிமையே சம்பத்.
  நல்ல பகிர்வு நண்பா..

  ReplyDelete
 3. nalla pakirvu!

  arasiyalai piruchi meykireenga...

  paaraattukal.

  ReplyDelete
 4. அற்புதமான அலசல் கஸாலி...

  நீ ஒரு அரசியல் சாணக்கியன் என்பதை அடிக்கொருதடவை நிரூபிக்கிறாய்....

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும், டீக்கடை என்ன ஆச்சு,

   Delete
 5. சும்மா கலக்குறீங்க......
  பதிவுக்கு நன்றி....

  ReplyDelete
 6. நிறுத்தி நிதானமா அலசி ஆராஞ்சி எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. எல்லாமே அரசியல்! பணம் பதவி ஆசை யாரை விட்டது? அருமையான பகிர்வு!

  ReplyDelete
 8. கலைஞருக்கு முடியாமல் போனதாகவும் கேள்விபட்டேன், தொண்டர்கள் கடையை அடைக்க முயன்றதாகவும், கேள்விப்பட்டேன். எல்லாம் சம்பத்தின் கட்சித் தாவலின் காரணமாக இருக்குமோ?

  ம்ம்ம்ம் கலக்குறிங்க.

  ReplyDelete
 9. வணக்கம்,கஸாலி சார்!அருமையாக வாரியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 10. நல்லதொரு அலசல்.

  ReplyDelete
 11. அதிமுகவிற்கு அடுத்த அடிமை சிக்கிடுச்சு...facebook ஸ்டேடஸ் அருமை...

  ReplyDelete
 12. அவருக்கு வேற வழியும் இல்லை..இனி வைகோ அவ்ளோ தானா?

  ReplyDelete
  Replies
  1. வைகோ எப்ப ஓஹோனு இருந்தார் அவ்வளவுதானா என்று கேட்க. அவர் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராக நல்லவராக இருந்தாலும். அரசியல் ரீதியாக அவர் பூஜ்யமே.. மதிமுக வை பொறுத்தவரையில் நாஞ்சில் சம்பத் விலகல் பெரிய பாதிப்பில்லை. காரணம் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ம.தி.மு.க.ஆட்சிக்கு வரப்போவதில்லை.

   Delete
 13. அடடா ...சூப்பர் அலசல் ...!!!
  இனி வைகோ "சைகோ " வாக மாறுவார் ..அஸ்தமனம் ஆரம்பமாகி விட்டது கடைய ஏற கட்டவேண்டியது தான் ......

  ReplyDelete
  Replies
  1. இருக்கவே இருக்கு தாய்க்கழகம். தன் பரிவாரங்களுடன் அங்கே போய் ஐக்கியமாகிட வேண்டியதுதான்.

   Delete
 14. அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளீர்! தம்பி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.