என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, December 27, 2012

16 பாலியல் பலாத்காரங்கள்-தீர்வுதான் என்ன?ஒரு பெண் ஆளும் டெல்லியில் ஒரு பஸ்சில் நடந்த கற்பழிப்பிற்காக நாடே கொந்தளித்து போராட்டத்தில் திணறிக்கொண்டிருக்கும் அதேவேளையில், இன்னொரு பெண் ஆளும் தமிழ்நாட்டில், தூத்துக்குடி, விருத்தாச்சலம் என்று தொடர் நிகழ்வாய் தினமும் ஒரு பாலியல் பலாத்காரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், டெல்லி சம்பவத்திற்கு மீடியா கொடுத்த வெளிச்சத்தில் கால்வாசிகூட தமிழக சம்பவங்களுக்கு மீடியா கொடுக்காததுதான் வேதனை. ஒருவேளை, மின்சாரம் இல்லாமல் மாநிலமே இருண்டு விட்டதால், இந்த சம்பவங்களையும் இருட்டடிப்பு செய்துவிட்டார்களோ என்னவோ.....

மீடியாக்கள்தான் கை கொடுக்கவில்லை. மாறாக, நாங்கள் கைகொடுக்கிறோம் என்று சில அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளின் இல்லங்களுக்கே சென்று பண உதவி செய்து விளம்பரங்களை தேடிக்கொள்கிறார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளை பொறுத்தவரையில், இந்த பாலியல் பலாத்காரங்கள் என்பது அரசியல் ஆதாயம்தான். மற்றபடி பாதிக்கப்பட்டவர்கள் மேல் அக்கறையுமில்லை. அனுதாபமுமில்லை.

இதற்கிடையில் இப்படிப்பட்ட பாலியல் குற்றங்கள் குறைய வேண்டுமானால், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும் அல்லது என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று ஒரு சாரரும், பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது அதுதான் பாலியல் குற்றங்களுக்கு முதல் படி என்று ஒரு சாரரும் கூறிவரும் வேளையில்....இல்லை, இல்லை தூக்குத்தண்டனை கூடவே கூடாது. கற்பழித்தவர்களும், கற்பழிக்கப்பட்டவர்களும் என் சகோதரர்களே என்று வாதிடும் அதிமேதாவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். எந்த ஒரு விஷயத்தையும் நியாயப்படுத்தவும், தவறென்று வாதிடவும் ஒரு குழுவினர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னை பொறுத்தவரை நான் மேற்சொன்ன மூன்று தரப்பினரோடும் ஒத்துப்போகிறேன்.

அதாவது தூக்குத்தண்டனையோ என் கவுண்டரோ இந்த குற்றவாளிகளுக்கு கொடுக்கத்தான் வேண்டும். அதைப்போல எல்லா குற்றங்களுக்கும் தூக்குத்தண்டனை என்பது அவசியமில்லை. ஆனால், குற்றங்களின் தன்மையை பொறுத்து தூக்குத்தண்டனையோ ஆயுள் தண்டனையோ, மற்ற தண்டனைகளோ வழங்க வேண்டும் என்பது என் கருத்து. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றால்....அப்போது மட்டும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவா போகிறது என்கிறார்கள் சிலர்.

சட்டங்கள் கடுமையானால், குற்றங்கள் தடுக்கப்படுதோ இல்லையோ ஆனால் குறையும் அல்லவா? நமது நாட்டில் குறையும் என்பதே ஆறுதல்தானே?
மற்ற நாடுகளில் சட்டங்கள் போட்டு, தண்டனைகளை அதிகப்படுத்துவது என்பது குற்றங்களை தடுக்க.....ஆனால், இந்தியாவில் சட்டங்கள் போட்டு தண்டனைகளை அதிகப்படுத்துவதென்பது குற்றங்களை குறைக்க....

அதைப்போல...பெண்களும், தங்களின் ஆடைகளை கண்ணியமாக உடுத்த பழகிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த சமூகமே பெண்களை போகப்பொருளாக பார்க்கும் சமூகம். பெண்களை தெய்வமாகவும் பார்ப்பார்கள்....தேவடியாவாகவும் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட சமூகம் இது. அப்படிப்பட்ட சமூகத்தில் பெண்கள் உடையில் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். ஆடை சுதந்திரம் என்ற பெயரில் அவிழ்த்து போட்டுக்கொண்டு வந்தால் பிரச்சினை தானே?

அடப்போப்பா.....பெண்கள் இழுத்து போர்த்திக்கொண்டு வந்தால் மட்டும் ஏதும் நடக்காதா? என்கிறீர்களா......நடக்கும்தான். சட்டங்கள் கடுமையாக்க படாதவரை இப்படிப்ப பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். அதற்குத்தான் சட்டங்களை கடுமைப்படுத்த சொல்கிறேன்.

ஒரு உதாரணத்திற்கு...... இன்று நாட்டில் எங்கு பார்த்தாலும் திருட்டு அதிகரித்து விட்டது. என்னதான் வலிமையான பூட்டைப்போடு பூட்டியிருந்தாலும் அதை தகர்த்து விட்டு திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள். எப்படித்தான் வீட்டை பூட்டினாலும் திருடத்தானே செய்கிறார்கள் என்பதற்காக யாரும் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்குவதில்லை, வீட்டைவிட்டு வெளியேறுவதில்லை. அதைப்போல்தான் சட்டம் போட்டாலும் குற்றங்கள் குறையவா போகிறது என்பதும்....

Post Comment

இதையும் படிக்கலாமே:

16 comments:

 1. Please do look into this issue which went unnoticed for 4 years. This is more brutal than Delhi gang rape. Please make awareness about this issue and help the poor girl in getting the proper justice.

  http://www.theweekendleader.com/Causes/1470/naked-injustice.html

  ReplyDelete
  Replies
  1. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

   நன்மக்களே!
   வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
   நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
   இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

   பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
   மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
   காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
   இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
   மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
   புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

   மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
   நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
   இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
   வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
   காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
   மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

   -இந்தியன் குரல்

   Delete
 2. அருமையாகச் சொன்னீர்கள் கஸாலி..ஆனால் மூன்றாவது அதிமேதாவிக் கருத்துடன் எப்படி ஒத்துப்போவது?

  ReplyDelete
  Replies
  1. இந்த விஷயத்தில் ஒத்துப்போக முடியாது செங்க்ஸ். இதற்கு தூக்குத்தண்டனைதான் சரி. ஆனால், பொதுவாக தூக்குத்தண்டனை கூடாது என்ற விஷயத்தில் வேண்டுமானால் ஒத்துப்போகலாம்.

   Delete
 3. ‘‘கற்பழிப்புக் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் ‘லுல்லா’வை அறுத்து விட வேண்டும்’’ என்று மறைந்த திரு.சுஜாதா ஒருமுறை சொன்னார். என் கருத்தும் அதுவேதான் தம்பி.

  ReplyDelete
  Replies
  1. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

   நன்மக்களே!
   வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
   நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
   இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

   பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
   மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
   காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
   இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
   மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
   புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

   மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
   நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
   இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
   வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
   காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
   மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

   -இந்தியன் குரல்

   Delete
 4. //எப்படித்தான் வீட்டை பூட்டினாலும் திருடத்தானே செய்கிறார்கள் என்பதற்காக யாரும் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்குவதில்லை,//

  ஆனால் தேவையில்லாமல் வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை வைக்காமல் தவிர்க்கலாமில்லையா?

  ReplyDelete
 5. /// எப்படித்தான் வீட்டை பூட்டினாலும் திருடத்தானே செய்கிறார்கள் என்பதற்காக யாரும் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்குவதில்லை, வீட்டைவிட்டு வெளியேறுவதில்லை. ///

  இப்படி சொல்லி பாருங்கள்...பெண்கள் எவ்வளவுதான் இழுத்து மூடிக் கொண்டு போனாலும் கற்பழிக்கத் தான் செய்கின்றார்கள் என்று யாரும் அரைகுறை ஆடையோடு செல்ல மாட்டார்கள்....ஆனால் கதவு திறந்தே கிடந்தால் திருடனுக்கு கொண்டாட்டம்..அதுபோல அரைகுறை ஆடை சில வக்கிர ஆண்களுக்கு கொண்டாட்டம்...சல்லாபம்..முடிந்தவரை இழுத்து மூடிக் கொண்டு செல்லலாமே..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்தைத்தான் நானும் வலியுறுத்தியிருக்கேன் சார்.

   Delete
 6. Replies
  1. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

   நன்மக்களே!
   வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
   நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
   இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

   பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
   மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
   காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

   சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
   இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
   மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
   புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

   மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
   நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
   இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
   வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
   காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
   மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

   -இந்தியன் குரல்

   Delete
 7. இருபாலரும் இணைந்து இதை சமூக நோக்குடன் விவாதிக்க வேண்டும் இதில் கட்டுப்பாடு சுதந்திரம் என்ற இரு வார்தைகை உபயோகிக்காமல் விவாதிக்க வேண்டும்

  ReplyDelete
 8. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

 9. பொதுவிடங்களில் போர்த்தி மூடிக்கொண்டு போனால் பாலியல் குற்றங்கள் குறையுமென்கிறீர்கள்.

  சிலநாட்களுக்கு முன் பத்திரிக்கைச் செய்தி: நேஷனல் க்ரைம்ஸ் ரிகார்ட் பரோ வுடைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் நடைபெற்ற இக்குற்றங்களின் எண்ணிக்கையில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான சம்பவங்களில் குற்றவாளிகள் பெண்ணுக்கு உறவினர்கள்; அல்லது அதிகம் தெரிந்தவர்கள். குற்றங்கள் பெண் வீட்டிலிருக்கும்போது அல்லது சேர்ந்து வாழும்போது நடைபெற்றிருக்கின்றன. இன்றைய செய்தித்தாளைப் புரட்டினால்கூட இரு சம்பவங்களைப் படிக்கலாம்.

  ஆக, போர்த்தி இழுத்துக்கொண்டு வீட்டில் இருக்கமுடியுமா? வளர்ப்புத்தந்தை, அல்லது தந்தையே, தனயன், அல்லது தந்தையின் நண்பர், மாமா, இவர்கள் போக பள்ளியாசிரியர் இவர்கள்தான் குற்றவாளிகள். இவர்களிடமிருந்து போர்த்தி இழுத்துக்கொண்டு தப்பியுங்கள் என்று சொல்வீர்களா? ஆக, போர்த்தி இழுத்துக்கொண்டால் சரிவருமா? வீட்டிலிருக்கும்போது எளிய உடையில்தானே எவரும் இருப்பர். எளிய உடை என்றால் ஆபாசமான உடையன்று.

  அடுத்து...

  ReplyDelete
 10. என்கவுண்டரில் போடச்சொல்கிறீர்கள். முதலில் என்கவுண்டர் என்பது எப்போது? குற்றவாளி தப்பியோடுகிறான்; அவனைப்பிடிக்க முயலும்போது காவலரைக் கொல்ல வருகிறான். தற்காப்புக்குத்தான் காவலர்கள் என்கவுண்டர் பண்ணுகிறார்கள். அல்லது பண்ணவேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமனற தீர்ப்பின்படி காவலருக்கும் மரணதண்டனை உண்டு.

  இப்போது சொல்லுங்கள் என்கவுண்டர் பண்ணலாமா? நீங்கள் சொல்லக்காரணம் நேரடி விசாரணை தீர்ப்பு வெகுநாட்களாகும் அல்லது குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக வெளிவந்து விடுவார்கள் என்ற நினைப்பில், சரியா?

  அப்படியென்றால் சட்டத்தைதான் மாற்ற வேண்டும். அல்லது என்கவுண்டர் என்ற பதத்துக்கு புதிய பொருளைக்கொடுத்து, குற்றவாளி சாந்தமாக நடந்து உடன் வந்தாலும் கோர்ட்டுக்குப்போகும் வழியில், காவலர் அவனைத்தாராளமாகச்சுட்டுக்கொண்டு சீக்கிரத்தில் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரலாம். (உண்மையில் இன்றைய என்கவுண்டர்கள் இப்படித்தான் நடைபெறுகின்றன) எனவே ஒரு குற்றவாளி பிடிபட்டவுடன் அவன் உறவினர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் பண்ணி, என் உறவினர் என்கவுண்டரில் கொல்லப்படுவார் எனவே நீங்கள் தலையிட வேண்டுமென்கிறார்கள்.

  என்கவுண்டர் வழி சரியென்றால், நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சட்டமும் தேவையில்லை.

  அடுத்து...

  ReplyDelete
 11. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் உறவினர்கள் பெண்ணை அழிப்பதைத் தடுக்கமுடியாது. நடந்தேறிக்கொண்டுதான் இருக்கும். நடைபெறும் குற்றங்களில் ஒரு சிலவைதான் வெளித்தெரிந்து குற்றமென நீதிமன்றத்துக்கு வருகின்றன. மற்றவை அப்பெண்ணோடு அழிந்துவிடும். அப்படிப்பட்டவை ஏராளம். இக்குற்றங்களையும் ஒரு பேருந்தில் ஒரு அன்னியப்பெண்ணை பாலியல் கொடுமை செய்து கொல்லவும் செய்தலைச் சேர்த்துப்பார்க்கக்கூடாது.

  சட்டங்கள் இருவகையினருக்கும் கடுமையாக்கபடுதல் தீர்வுகளில் ஒன்றேயொன்றுதான். போர்த்தியிழுத்துப்போதல் முதல்வகையில் செல்லாதென்று விட்டேன். இரண்டாவது வகை - அதாவது அந்நியப்பெண் - கிராமப்புறங்களில் நடைபெறுவதை தடுக்கவியலாது. அங்கு பெண்கள் அரைகுறை ஆடையில் செல்வதில்லை. தூத்துக்குடி புனிதா பள்ளிச்சிறுமியின் உடையில்தான் இருந்தார்.

  இன்றைய செய்தித்தாளின்படி ஒரு என் ஜி ஓ, வர்மாக்கமிஷனிடம், விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகச்செய்தல் ஒரு வழி என்று கேட்டிருக்கிறது. வர்மாக்கமிசனதான் தில்லி சம்பவத்தை ஆராய அமைக்கப்பட்டிருக்கும் கமிஷன். எவரும் அதனிடம் தன் ஆலோசனைகளை வழங்கலாம். இது வரவேற்கத்தகுந்த ஆலோசனை.

  இப்படிப்பட்ட குற்றங்களின் அடிப்படை, நம் கலாச்சாரத்தில் ஊறியிருக்கிறது. நம் கலாச்சாரம் பெருவாரியாக மதங்களிலிருந்து வருகிறது. நம் மதங்கள் பெண்ணைத் தெய்வமாக ஒரு புறமும், இன்னொரு புறம் அவன் ஆணின் இன்பத்துக்காக, அல்லது நல்வாழவுக்காக படைக்கப்பட்டிருக்கிறாள் என்றும் கடவுள் சொன்னார் என்று சொல்லி மக்களை நம்பவைத்துவிடுகிறது. அதாவது பையனுக்கு அம்மா தெய்வம்; அப்பாவுக்கு அம்மா அடிமை.

  இதனால், ஆண் வர்க்கம், தன் தாயை மாதாவாகவும், தன் மனைவியை படுக்கைப் பொருளாகவும், அந்நியப்பெண்ணை வெறும் சதையாகவும் பார்ப்பது தவறன்று என்று நம்பி வாழ்கிறது. சின்னப்பையனக்ளே சிறுபெண்களைவிட தங்கள் உயர்வாக இறைவனாலேயே படைக்கப்பட்டிருக்கிறதாக நம்பி வளர்கிறார்கள் !

  இஃதொரு அபாயகரமான நம்பிக்கையென்பது இக்குற்றங்கள் வெளிக்காட்டுகின்றன.

  இதை உடைத்து ஒரு புது அல்லது நல்ல பெண் வாழ்விற்கு உகந்த நம்பிக்கையை செயவதே முதல் தீர்வு. மற்ற தீர்வுகள் (சட்டத்தை இறுக்குங்கள், என்கவுண்டரில் போடுங்கள்; பெண்ணை மூடச்சொல்லுங்கள் போன்றவை) முதல் தீர்வு வந்தால் மட்டுமே பலன் தரும்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.