என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, February 12, 2013

4 ராமதாசும், ஓ..பிஎஸ்.,சும் பின்னே நானும்என் ஃபேஸ்புக்கிலிருந்து........

தேர்தலில் படுத்துக்கொண்டே 110 தொகுதிகளில் ஜெயிப்போம்- ராமதாஸ்.
எந்த தேர்தலை சொல்றீங்க அய்யா. பஞ்சாயத்து போர்டு தேர்தலையா?

===============

தேர்தலில் படுத்துக்கொண்டே 110 தொகுதிகளில் ஜெயிப்போம்-ராமதாஸ்# பேசிட்டு இருக்கேன்ல, அங்கே என்ன சிரிப்பு? ராஸ்கல்.

===============

110 தொகுதிகளில் படுத்திக்கொண்டே ஜெயிப்போம்-ராமதாஸ்# மக்கள் டிவில சொல்ல சொன்ன சேதியை யார்டா அது சிரிப்பொலி,ஆதித்யா டிவியில சொன்னது?

==============

தமிழகத்தில் ஒன்பது விவசாயிகள் இறந்ததற்கு பயிரிழப்பு காரணமில்லை-ஜெயலலிதா#
ஆமாம் பயிரிழப்பு காரணமில்லை. உயிரிழப்புதான் காரணம்.

==============

வறட்சியால் தமிழக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை-ஓ.பி.எஸ்# ஜெயா டிவிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொன்ன ஜெ-யின் உண்மையான தொண்டர்னு நிருபிச்சிட்டீங்க தலைவரே

==============

ஜெயலலிதா சட்டசபையில் பேசுகையில், ஆளுங்கட்சியினர் மேஜையை தட்டுவதை பார்க்கும்போது விரைவில் மேஜையை மாற்றுவதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படலாம் என்று நினைக்கிறேன்.

===============

சட்டசபையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதால் கூட்டத்தொடர் முழுவதும் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட். #
கண்ணியக்குறைவு என்பதை ஜால்ரா குறைவு என்று திருத்தி வாசிக்கவும்.

===============

கவசமெல்லாம் போட்டுக்கு அந்த எம்.எல்.ஏ..எங்கே கிளம்பிட்டாரு? 
வேறெங்கே சட்டசபைக்குத்தான்.

===============

நான் எப்போதும் தவறை ஒப்புக்கொள்வதற்கு வெட்கப்பட்டதே இல்ல.... என் மன சாட்சியிடம் மட்டும்.

================

என் சம்மதம் இல்லாமல் 
எனக்கும் சேர்த்து 
யாராவது எதையாவது 
செய்து தொலைக்கப்போய் 
அதையெல்லாம் 
நியாயப்படுத்த 
காரணம் தேடி 
அலைய வேண்டியிருக்கு.

=================


முக புத்தகம் என்பதை அக புத்தகம் என்று மாற்றி விடலாம் போல. பலரின் மனதில் இருப்பதை காட்டிவிடுவதால்....

================

மணிரத்னத்திற்கு கடல் மேல் அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. நிஜக்கடலை பார்க்க கூப்பிடுபவரைக்கூட இனி திட்ட வேண்டி வந்திடும் போல.

================

இவன் சேட்டை தாங்கமுடியல
கடுமையா சுட்டித்தனம் செய்கிறான்
செம வாலு, என்ன பேச்சு பேசறான் என்று தன் மகனைப்பற்றி வெளியூரில் இருக்கும் கணவனிடம் புகார் செய்யும் எல்லா தாயின் கோபத்திற்கு பின்னாலும் ஒரு பெருமிதம் மறைந்தே இருக்கும்.

==================

எனக்கான சான்றிதழை 
கொடுக்க ஒரு கூட்டமே
அலைந்து கொண்டிருக்கிறது
எதை வைத்து முடிவு 
செய்கிறீர்கள் என்னை?
என் எழுத்தை வைத்தா?
என் பேச்சை வைத்தா?
என் செயலை வைத்தா?
என் நடவடிக்கைகளை வைத்தா?
நீங்கள் எதை வைத்து 
என்னை எடை போட்டாலும் 
ஏமாந்து விடுவீர்கள்.
அதற்கான தகுதியும்
உங்களுக்கு இல்லை.
எனக்கான சான்றிதழை 
வழங்க முழுத்தகுதியும் 
எனக்குத்தான் உண்டு. 
என்னைப்பற்றி என்னை விட 
வேறு யாருக்கு முழுவதுமாய் 
தெரிந்து விடப் போகிறது?
Post Comment

இதையும் படிக்கலாமே:


4 comments:

 1. இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்.?

  தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம். பெண்களை கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம் .

  புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம் .

  இன்னும், இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் .

  யாரும் கேட்க மாட்டார்கள் .

  இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது .

  CLICK >>>>>
  காஷ்மீர். காஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. காஷ்மீரிகளின் வார்த்தைகளில்….


  .

  ReplyDelete
 2. அரசியல் பகடி, வாழ்வியல் கருத்து, தத்துவ முத்துக்கள் எல்லாம் ஒரே பதிவில் கலந்து, வைத்தீர்கள் சிந்தனைக்கு விருந்து.

  ReplyDelete
 3. யோசிப்பு திலகம் பட்டம் உனக்குத்தான்.நல்ல கின்டலும் நையான்டியும்

  ReplyDelete
 4. கலக்கல் கதம்பம்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.