என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, February 20, 2013

14 பசுமை புரட்சியும், ஜனதா சாப்பாடும், ஜெயலலிதா பிறந்த நாளும்.....
ஜெயலலிதாவின் 65-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 65 லட்சம் மரக்கன்றுகள் நடப்போகிறார்களாமே?

நிச்சயம் இது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால், மரக்கன்றை வைத்ததோடு போய் விடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்....அதன் பின் அது வளர்ந்ததா இல்லையா என்று யாரும் கவனிப்பதேயில்லை. இப்படித்தான் கடந்த வருடம் 64-ஆவது பிறந்த நாளுக்காக 64- லட்சம் மரக்கன்றுகள் நட்டார்கள். நட்டதோடு சரி. நட்டதில் ஒரு பத்து சதவீத கன்றுகளை முறையாக வாரத்திற்கு ஒரு தடவை தண்ணீர் விட்டு பராமரித்து வந்திருந்தாலே இந்நேரம் 6.5 லட்சம் மரக்கன்றுகளாவது நல்ல நிலையில் வளர்ந்திருக்கும். அதை விடுத்து, இந்த வருடம் 65 லட்சம், அடுத்த வருடம் 66 லட்சம் என்று நட்டுவைத்தால் சிலவுதான். இந்த நேரத்தில் கடந்த வருடம் ஜெயலலிதா பிறந்த நாளன்று நான் எழுதியதியே இப்போதும் மீள் பதிவாக தருகிறேன்......
//நேற்று (24-02-2012)  ஜெயலலிதாவின் 64-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது மூலம் ஒரு பசுமை புரட்சிக்கு வித்திட்டுள்ளார் ஜெயலலிதா என்றால் அது மிகையில்லை. இது வரவேற்கத்தக்க ஒன்று....

பிறந்த நாளன்று வீண் ஆடம்பரங்கள் செய்வதை விட, இதைப்போன்று ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்தால் நன்றாக இருக்கும்.
மரக்கன்றுகள் வைத்ததுடன் வேலை முடிந்து விட்டது என்று போய்விடக்கூடாது எம்.ஜி.ஆரின் ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தங்கள்.

அவ்வப்போது அந்த மரக்கன்றுகளுக்கு
தண்ணீர்விட்டு பராமரித்துவந்தால்தான் வைத்த கன்றுகளில் ஒரு ஐம்பது சதவீதமாவது வளர்ந்து உபயோகமாயிருக்கும். இல்லாவிட்டால், நட்டுவச்சேன், பட்டுப்போச்சு கதைதான்.//


அடுத்த வருடமும் இப்படித்தான் எழுதனும் போல.....

======================
மலிவு விலை உணவகங்களை பற்றி?


ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சிகளில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்களை திறந்து வைத்து புதிதாய் ஒரு புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார் ஜெயலலிதா.....
இதுவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். சென்னையில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இது வரப்பிரசாதம் என்பது மிகையில்லை.
சாதாரண ஹோட்டலில்கூட ஒரு இட்லி (குறைந்த பட்ச) விலை 4 ரூபாயும், தயிர் சாதம், சாம்பார் சாதம் 15 ரூபாயும் விற்கப்படும் பட்சத்தில், இந்த மலிவு விலை உணவகங்களில் இட்லி 1 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்கப்படும் என்பதே சாதனைதான்.

ஏற்கனவே மொரார்ஜி தேசாயின் ஆட்சிக்காலத்தில் 1 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கினார்கள். அந்த சாப்பாட்டிற்கு ஜனதா சாப்பாடு என்று பேர். அதைப்போல மத்தியில் மம்தா பானர்ஜீ ரயில்வே அமைச்சராக இருந்த போது பெருநகர ரயில்வே ஸ்டேசன்களில் 10 ரூபாய்க்கு 7 பூரிகளையும், 13 ரூபாய்க்கு சாம்பார் சாதத்தையும் வழங்க உத்தரவிட்டார்.

அதைபோல....கடந்த தி.மு.க.,அரசும் 20 ரூபாய்க்கு சைவ உணவு வழங்க உத்தரவிட்டார்கள். ஆனால், இவை அனைத்தும் நிர்வாக சீர்கேடு காரணமாக மூடப்பட்டு விட்டது. அதைப்போல இப்போது திறக்கப்பட்டிருக்கும் மலிவு விலை உணவங்களையும் மூடிவிடாமல் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்...

இது நீடிக்க வேண்டுமானால்.......
நிச்சயம் இங்கு சாப்பிட வருபவர்கள் அடித்தட்டு மக்களாகத்தான் இருப்பார்கள். நாம் போடுவதைத்தான் இவர்கள் சாப்பிடனும். அதியும் மீறி  இவர்கள் என்ன செய்யமுடியும் என்று ஹோட்டல் ஊழியர்கள் அலட்சியமாக இருக்காமல் நல்ல முறையில் பரிமாறினாலே போதும். ஏனென்றால் ஒரு மனிதனின் வயிறு நிறைவது உணவினால்தான் என்றாலும், அருமையான உபசரிப்பினால்தான் அவனுக்கு திருப்தி ஏற்படும். அதைப்போல் வழங்கப்படும் உணவும் தரத்துடன் இருக்க வேண்டும். தரத்தை பரிசோதிக்கவே சில அதிகாரிகளை நியமித்து திடீர் திடீர்னு சோதனை செய்ய வைக்க வேண்டும். ... அப்படியில்லாமல் முதல் மூன்று நாட்கள் மட்டும் தரத்துடன் இருந்து அதன் பிறகு தரம் குறைந்தால் ஜனதா சாப்பாட்டின் கதிதான் இதற்கும்....Post Comment

இதையும் படிக்கலாமே:


14 comments:

 1. நிர்வாகச் சீர்கேடு இல்லாமல் தொடர்ந்தால், நல்ல திட்டம் தான்.

  ReplyDelete
 2. //ஏனென்றால் ஒரு மனிதனின் வயிறு நிறைவது உணவினால்தான் என்றாலும், அருமையான உபசரிப்பினால்தான் அவனுக்கு திருப்தி ஏற்படும்.
  //

  100 % உண்மை ..

  நல்ல திட்டம் தொடர்கிறதா என பார்ப்போம்

  ReplyDelete
 3. மிக அருமையான திட்டமா இல்லையான்னு போகபோகவே தெரியும்.நிர்வாகம் சீர்கெடாமல் ஆரோக்யமாக செயல்பட்டால் இதற்க்குபெயர் திட்டமில்லை, ஏழைமற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.பொருதிருப்போம் வரமாகுதா அல்லது விரையமாகுதா என்று???

  ReplyDelete
 4. எனக்கும் காலையில் இந்த செய்தி படித்ததும் இதே சிந்தனை தான்!!!!

  நல்லபகிர்வு

  ReplyDelete
 5. நிச்சயம் இங்கு சாப்பிட வருபவர்கள் அடித்தட்டு மக்களாகத்தான் இருப்பார்கள். நாம் போடுவதைத்தான் இவர்கள் சாப்பிடனும். அதியும் மீறி இவர்கள் என்ன செய்யமுடியும் என்று ஹோட்டல் ஊழியர்கள் அலட்சியமாக இருக்காமல் நல்ல முறையில் பரிமாறினாலே போதும். ஏனென்றால் ஒரு மனிதனின் வயிறு நிறைவது உணவினால்தான் என்றாலும், அருமையான உபசரிப்பினால்தான் அவனுக்கு திருப்தி ஏற்படும். அதைப்போல் வழங்கப்படும் உணவும் தரத்துடன் இருக்க வேண்டும். தரத்தை பரிசோதிக்கவே சில அதிகாரிகளை நியமித்து திடீர் திடீர்னு சோதனை செய்ய வைக்க வேண்டும். ... அப்படியில்லாமல் முதல் மூன்று நாட்கள் மட்டும் தரத்துடன் இருந்து அதன் பிறகு தரம் குறைந்தால் ஜனதா சாப்பாட்டின் கதிதான் இதற்கும்....
  சரியான வார்த்தைகள்! மரக்கன்று போல இந்த திட்டமும் பாழாகிடக் கூடாது!

  ReplyDelete
 6. நட்டு வச்சேன் பட்டு போச்சு

  சோறு போட்டேன் குழம்பு ஊத்தி போச்சு.

  அட போப்பா

  ReplyDelete
 7. நல்ல திட்டம்தான், இதில் முறைகேடுகள் நடக்காமல் இருந்தால் சரி.

  ReplyDelete
 8. ethu thodarpai en pathivu http://agaligan.blogspot.in/2013/01/blog-post_9246.html

  ReplyDelete
 9. வாரவேற்க வேண்டியது அருமையான திட்டம்.

  ReplyDelete
 10. அன்புடையீர் வணக்கம்.
  தங்களது எழுத்துக்கள் அனைத்தும் பயனுள்ளதே.ஆனால் இதை முதல்வர் மட்டும் செயல்படுத்த முடியாது.ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அந்த உணர்வு இருக்க வேண்டும்.எல்லாமே அரசுதான் செய்யனும் என்று இருக்கவோ,நினைக்கவோ கூடாது.காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை அரசு இதழில் வெளியிட காரணமாயிருந்த முதல்வரையும் ஒரு வார்த்தை பாராட்டி இருக்கலாம்.
  வாழக வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 11. மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு சட்டத்தை ஒரு அரசு போடும்போது அதை தொய்வில்லாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசின் கடமை. தனி மனிதனுக்கு இருப்பது வெறும் உணர்வு மட்டுமே அரசுக்குத்தான் சட்டமாக்கும் அதிகாரம் இருக்கிறது. அடுத்த பதிவில் நதி நீர் பற்றி ஜெயலலிதாவை பாராட்டித்தான் எழுதிருக்கேன். படிங்க.

  ReplyDelete
  Replies
  1. அன்புடையீர் வணக்கம்.
   மரக்கன்று நடுவது என்பது சாதாரண விசயமல்ல.ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் ஒரு தடவை ஒரு மரக்கன்றை நட்டு அதனை பராமரித்து வந்தாலே
   போதும் அனைத்தும் சரியாகிவிடும்.
   அதைத் தான் அந்த உணர்வைத்தான் ஒவ்வொரு மனிதனிடமும் அந்த இருக்க வேண்டும் என்கிறேன்.
   என்னால் முடிந்த வரை அதை செய்கிறேன்.செய்துகொண்டு இருக்கிறேன்.தாங்களும் அதை செயல்படுத்தலாம்.தங்களது பதிவுகள் மூலம் அதை வலியுறுத்தலாம்.
   வாழ்க வளமுடன்.
   கொச்சின் தேவதாஸ்

   Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.