என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, February 18, 2013

12 மணியம்மையும், குஷ்புவும், கேடுகெட்ட குமுதம் ரிப்போர்ட்டரும்......

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது கலைஞரின் நிலையும்....... ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிகம் விமர்சிக்கப்படும் ஒருவராகவே அவர் இருக்கிறார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக பத்திரிகை போன்ற ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவோ பெட்டி செய்தியாகவோ கலைஞர் பற்றிய செய்திகள் வராத நாளே இல்லை எனலாம். அவரை ஆதரித்தோ எதிர்த்தோதான் செய்திகளை வெளியிட்டு கல்லா கட்டுகிறார்கள் சிலர். கலைஞர் என்ற மனிதர் இல்லாவிட்டால் பத்திரிகை நடத்தவே முடியாது என்று சொல்லுமளவிற்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் .ஆனால், சமீபகாலமாக பத்திரிகை சுதந்திரம் என்ற பேரில் ஊடகங்கள் கலைஞர் மீது, தங்கள் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதாகத்தான் தெரிகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் கலைஞரையும் குஷ்புவையும் இணைத்து பெரியார் மணியம்மையையோடு சேர்த்து குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கட்டுரை. அதைதனி மனித தாக்குதலின் உச்சம் என்றும் சொல்லலாம்.

ஒரு அரசியல் தலைவரை கட்சி சார்ந்து விமர்சிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து விமர்சிப்பது அழகில்லை. அதுவும் ஒரு யூகத்தின் அடிப்படையில்…..
பத்திரிகைகளுக்கு பத்திரிகை சுதந்திரமும் தெரியவில்லை, ஊடக தர்மமும் விளங்கவில்லை. யாராவது அதைப்பற்றி பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும்.

----------------------

என் பேஸ்புக்கிலிருந்து…….


வீரப்பன் கூட்டாளிகள் என்று நம்பப்படும் நால்வரை கழுவேற்ற துடிப்பதன் மூலம், முந்தைய அப்சல் குருவின் தூக்கை சமன் படுத்த நினைக்கிறது மத்திய அரசு என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது. அடுத்ததாக, பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கான அச்சாரமாகவும் இதை நினைக்கிறேன்.
இதையும் சமன் செய்ய எந்த அப்பாவிகளை கழுவேற்ற போகிறதோ? அதற்கும் ஒரு அப்பாவி கிடைக்காமலா போய்விடுவான்?

---------------------

ஒரு கட்சியின் குரலை பிரதிபலிக்கும் கருணையற்றவர்களை விட, ஒரு தேச மக்களின் குரலை பிரதிபலிக்கும் ஒருவர் தான் ஜனாதிபதியாக வரவேண்டும்.

---------------------

குற்றவாளிகளை வெளியில் உலாவ விட்டு, அப்பாவிகளை கழுவேற்றும் சட்டத்தின் ஓட்டைகளுக்குத்தான் முதலில் தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும்.


---------------------------

கடைசி செய்தி: இடைக்கால தடை!
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் பிப்-20ம் தேதி வரை தூக்கிலிட இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
உறவினர்கள் மனுவை ஏற்று இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவுPost Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. அந்த கட்டுரை காழ்ப்புணர்ச்சியுடன், எவ்வித பொறுப்புணர்வும் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது. நிச்சயம் அனைவரும் கண்டிக்கவேண்டிய விஷயம் இது.

  ReplyDelete
 2. இதே போன்று அம்மாவை பற்றி எழுதுவார்களா? இந்த வீரர்கள்.

  ReplyDelete
 3. கடந்த வருடம் மாட்டுக்கறி சாப்பிடும் மாமின்னு ஒரு கட்டுரையை வெளியிட்ட நக்கீரனின் கதி என்னவென தெரியும் தானே?
  அதைவிட பலமடங்கு மோசமான கட்டுரைதான் ரிப்போர்ட்டர் எழுதியது.

  ReplyDelete
 4. குமுதம் குழுமம் இப்போது கெட்டுவிட்டது! கண்டிக்கத்தக்க விசயம்!

  ReplyDelete
 5. // ஒரு கட்சியின் குரலை பிரதிபலிக்கும் கருணையற்றவர்களை விட, ஒரு தேச மக்களின் குரலை பிரதிபலிக்கும் ஒருவர் தான் ஜனாதிபதியாக வரவேண்டும்.//

  நான் அப்பவே சொன்னேன்.சங்மாவுக்கு வாய்ப்பு தரலாம்ன்னு!

  ReplyDelete
 6. நேற்றைய முந்தைய தினம் சில பத்திரிகைகள் அவதூறுகளைப் பரப்புகின்றன என பொதுவாக கலைஞர் அறிக்கை காணநேர்ந்தது.

  குமுதமா அந்த அவதூறின் அவதாரம்! குமுதத்திற்கு எனது கண்டனங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ராஜ.நடராஜன் அண்ணாச்சி, காந்தி செத்துட்டாரான்னு கேட்கிறீங்களே.... நியாயமா?

   Delete
 7. பத்திரிகை சுதந்திரம் என்பது உண்மையை துணிந்து வெளிப்படுத்துவதற்குரிய அதிகாரமே ஒழிய தாங்கள் விரும்பியதை எழுதும் அதிகாரம் இல்லை என்பதை பத்திரிகையாளர்கள் புரிந்து கொண்டால் சரி.

  ReplyDelete
 8. செங்கோவி!நலமா? அதென்னமோ நீங்க கேட்கிற மாதிரிதான்:) தொலைக்காட்சியின் கீழ் ஓடும் செய்தி பார்த்ததோடு சரி.இதன் உள் விபரமே கஸாலி அவர்களின் பதிவு பார்த்து தெரிந்து கொண்டதுதான்.

  ReplyDelete
 9. ஏய் கேடுகெட்ட குமுதமே.. முதலில் உன் பார்வையை மாற்று

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.