என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, June 03, 2013

5 கலைஞர்-90 சில குறிப்புகள்.....அபூர்வ படங்களுடன்.....தி.மு.க.என்றால் திராவிட முன்னேற்ற கழகத்தையும் குறிக்கும். திருக்குவளை முத்துவேல் கருணாநிதி என்பதையும் குறிக்கும்.இன்று தன் 90-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் கலைஞர் பற்றி சில குறிப்புகள்.....

தட்சிணாமூர்த்தி இதுதான் க்லைஞரின் இயற்பெயர். இதனை கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார். அடுத்ததாக, கலைஞரின்  தூக்குமேடை நாடகத்திற்கு தலைமை தாங்கிய  நடிகவேள் எம்.ஆர்.ராதா.சூட்டிய பெயர்தான் கலைஞர். அதுவே நிலையாகிவிட்டது. அண்ணா காலத்தில் தி.மு.க.,வின் பொருளாலராக இருந்தவர் அண்ணா.மறைவிற்கு பின் அந்த கட்சியின் தலைவராகி இந்நாள் வரை தொடர்கிறார். ஒரு கட்சியின் தலைவராக நீண்ட காலமாக தலைவர் பதவியில் உள்ள ஒரே இந்திய அரசியல் தலைவர் இவர்தான்.

முதன்முதலாக 1957-ஆம் ஆண்டு குளித்தலையில் களம் கண்டவர், தொடர்ந்து தஞ்சாவூர், சைதாப்பேட்டை, அண்ணா நகர், துறைமுகம், சேப்பாக்கம், திருவாரூர் என்று தான் போட்டியிட்ட 12 தேர்தல்களிலும் தோல்வியை சந்திக்காதவர். மேலவை உறுப்பினராக இருந்ததால் 1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் அவர் போட்டியிடவில்லை.

அண்ணா தலைமையிலான அமைச்சரைவில்  1967-ஆம் ஆண்டு பொதுப்பணி அமைச்சராக பதவியேற்ற கலைஞர் அண்ணா மறைவை தொடர்ந்து 1969-ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 1971-76, 1989-1991, 1996-2001, 2006-11 என்று ஐந்து முறை முதல்வராக இருந்தவர் 1977-83-இல் எதிர்கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்.,முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமான ராஜமகுமாரி, சிவாஜி அறிமுகமான பராசக்தி என்று இரு ஜாம்பவான்களின் முதல் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். ஜெயலலிதா நடித்த மணிமகுடம் படத்திற்கும் அவர்தான் வசனம்.

சில அபூர்வ படங்கள்.....

கலைஞர் படித்த திருக்குவளை பள்ளி.......
Post Comment

இதையும் படிக்கலாமே:


5 comments:

 1. உண்மையில் அபூர்வ படங்கள் தான்! எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 90 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் கலைஞரை வாழ்த்துவோம்!

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. சலாம், நல்லதொரு பகிர்வு

  ReplyDelete
 4. படங்களும் கலைஞர் பற்றிய குறிப்புகளும் அருமை!
  வாழ்க கலைஞர்! நன்றி!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.