என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, June 17, 2013

17 பாரதிராஜாவின் வார்த்தையும் மணிவண்ணனின் மரணமும்......மணிவண்ணனின் மரணத்துக்குக் காரணமே, சமீபத்தில்  விகடனில் வெளியான பாரதிராஜாவின் பேட்டிதான்... அவரது கொடூரமான வார்த்தைகளே மணிவண்ணனைக் கொன்றுவிட்டன என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. நிஜமாகவே நடந்தது என்ன? ஒரு ஃப்ளாஷ்பேக்.......

அமைதிப் படை 2-இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பற்றி பேசிய மணிவண்ணன், 'பாரதிராஜாவுக்கு தன்னைத் தவிர யாருமே இயக்குநர் இல்லை என்ற நினைப்பு உண்டு. அதனால் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்," என்று கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த வார விகடனில் மணிவண்ணன் பற்றி ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு .
மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு... வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும். ஒரு ராஜா கதை இருக்குமே... வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. 'இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க'னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க... பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!''என்று பாரதிராஜா தன் கோபத்தை கொட்டியிருந்தார்.இதற்கு மணிவண்ணன் விளக்கம் அளிப்பார் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர் மரணித்து விட்டார். இனி, பாரதிராஜாவே தன்னிலை விளக்கம் அளிக்கலாம். ஆனால், அதை கேட்கவோ பதில் சொல்லவோதான் மணிவண்ணன் இல்லை. ஆனால் அதற்காக பாரதிராஜாதான் மணீவண்ணனை கொன்றுவிட்டார் என்று பேசுவதெல்லாம் டூ மச்....

இறந்தவர்களை தவறாக பேசக்கூடாது என்ற நாகரீகத்திற்காக மணிவண்ணன் பற்றி நல்லவிதமாக எழுதி பாரதிராஜாவை திட்டி எழுதுவதாகவே நான் கருதுகிறேன். ஒருவேளை அவர் உயிரோடு இருந்து பாரதிராஜாவின் கருத்திற்கு எதிர்கருத்து சொல்லியிருந்தால், பாரதிராஜா-மணிவண்ணன் என்று திரையுலகமும், பதிவுலகமும்  உலகம் இரு கூறாக பிரிந்து வாத, பிரதிவாதங்களில் ஈடுபட்டிருக்கும்.

பாரதிராஜா மணிவண்ணனை பிச்சைக்காரன் என்று சொல்லியது தவறுதான் என்றாலும் அந்த ஒரு வார்த்தையே மணிவண்ணனை கொன்றிருக்கும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. பாரதிராஜா அப்படி சொல்லியது தன் கோபத்தின் வெளிப்பாடுதான் என்றாலும், ஒரு மனிதனின் கோபமே சாபமாக மாறி அடுத்தவனை சாகடித்து விடும் என்றால் இந்த உலகத்தில் ஒருவன் கூட உயிரோடு இருக்க முடியாது.

பொதுவாழ்விலும் சினிமாவிலும் எத்தனையோ விமர்சனங்களை பார்த்த மணிவண்ணனை பாரதிராஜா சொன்ன வார்த்தைகளா கொன்றிருக்க முடியும். விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத கோழையல்ல மணிவண்ணன். பாரதிராஜா அப்படி சொன்னதால் மணி தற்கொலை செய்திருந்தால் நீங்கள் சொன்ன காரணங்கள் பொருந்தும். ஆனால் அவரின் இயற்கை மரணத்திற்கு பாரதிராஜா எப்படி பொறுப்பேற்க முடியும்?,

சமீபகாலமாகவே, மணிவண்ணன் தளர்ந்துதான் போயிருந்தார். அமைதிப்படை இரண்டாம் பாகமான நாகராஜசோழன் பாடல் வெளியீட்டு விழாவில் அவரை பார்த்தவர்களால் இதை உணர முடிந்தது. ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்திருந்தவர் சமீபத்தில் முதுகு தண்டுவடத்திலும் ஆப்ரேஷன் செய்திருந்தார். இதனால் அவர் பலவீனமாகவே இருந்தார். அப்படிப்பட்டவர்தான் இப்போது மரணத்தை தழுவியிருக்கிறார். அவர் மரணத்திற்கு பாரதிராஜாவின் வார்த்தை மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வேண்டுமானால், பாரதிராஜாவின் வார்த்தையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த வார்த்தைக்காக பாரதிராஜாவின் மனசாட்சி அவரை உறுத்திக்கொண்டேயிருக்கும் சாகும் வரை.


Post Comment

இதையும் படிக்கலாமே:


17 comments:

 1. அண்ணே கடையில் கூட்டம் அண்ணே அதனால் ப்ரீயா இருக்கும் பொழுது படிக்கிறேன்

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  தெளிவான பார்வை.

  ReplyDelete
 3. ரஹீம் உங்கள் கருத்து மிகவும் சரி. இருந்தாலும் பாரதிராஜா ஊடகங்களில் சக கலைஞர்களை இகழ்வதை தவிர்க்கவேண்டும்.

  ReplyDelete
 4. தெளிவான சிந்தனை

  ReplyDelete
 5. உடல் அளவில் தளர்ந்து இருக்கும் ஒருவர் இது போன்ற வார்த்தைகள் கேக்கும்போது நிச்சயம் மனம் பாதிப்படையும்.அந்த பேட்டியை படித்த பலர் மணிவண்ணனுக்கு தொலைபேசியில் அழைத்தவன்னம் இருந்து இருக்கின்றனர் .அதற்க்கு மணிவண்ணனால் பதில் சொல்லமுடியவில்லி.நிச்சயம் பாரதிராஜாவும் காரனமே

  ReplyDelete
 6. உடல் அளவில் தளர்ந்து இருக்கும் ஒருவர் இது போன்ற வார்த்தைகள் கேக்கும்போது நிச்சயம் மனம் பாதிப்படையும்.அந்த பேட்டியை படித்த பலர் மணிவண்ணனுக்கு தொலைபேசியில் அழைத்தவன்னம் இருந்து இருக்கின்றனர் .அதற்க்கு மணிவண்ணனால் பதில் சொல்லமுடியவில்லி.நிச்சயம் பாரதிராஜாவும் காரனமே

  ReplyDelete
 7. பாரதிராஜாவின் வார்த்தைகள் இவரை கொன்றுவிட்டது என்பது அபத்தம்! மனதை நோகடித்து இருக்கக்கூடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! பொது ஊடகங்களில் பாரதிராஜா மற்றவர்களை இகழ்வதை தவிர்க்கவேண்டும்! நல்ல பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 8. பாரதிராஜா அப்படி சொல்லியது தன் கோபத்தின் வெளிப்பாடுதான் என்றாலும், ஒரு மனிதனின் கோபமே சாபமாக மாறி அடுத்தவனை சாகடித்து விடும் என்றால் இந்த உலகத்தில் ஒருவன் கூட உயிரோடு இருக்க முடியாது.\\ மணிவண்ணன் பகுத்தறிவுவாதி என்று தன்னை சொல்லிக் கொண்டவர் இந்த மாதிரி காரணங்களைச் சொல்வது அவரை/அவருடைய கொள்கையை சிறுமைப் படுத்துவதாகும்.

  \\அமைதிப்படை இரண்டாம் பாகமான நாகராஜசோழன் பாடல் வெளியீட்டு விழாவில் அவரை பார்த்தவர்களால் இதை உணர முடிந்தது.\\ படத்திலேயே அவரது டைமிங் சரியாக இல்லை என்று பல பதிவர்கள் கோடிட்டு காட்டியிருந்தார்கள்.

  ReplyDelete
 9. தற்போது வாய்ப்பில்லாமல் இருக்கும் முன்னாள் பிரபலங்கள் இது போன்று ஏதேனும் உளறுவது வழக்கமாகி விட்டது.

  ReplyDelete
 10. பாரதி ராஜாவை இணையத்தில் போட்டுத் தாக்குவதில் ஒரு நுண் அரசியல் இருக்கிறது. கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால் போன வாரமே அவர் மீதான தாக்குதலை ஆரம்பித்துவிட்டார்கள். இந்த வாரம் மணிவண்ணன் பற்றி அவர் சொல்லியிருந்ததும், மணிவண்ணனின் திடீர் மரணமும் அவர்களுக்கு வாகாகப் போய்விட்டது.
  விகடன் இணையதளத்தைப் பார்த்திருந்தீர்களென்றால் இன்னமும் எப்படியெல்லாம் மோசமாக அவரைத் தாக்கியிருக்கிறார்கள் என்பது தெரியும்.

  பாவம் மணிவண்ணன், பாவம் பாரதிராஜா.

  ReplyDelete
 11. நம் எல்லாரையும் விட, இவரை இப்படி சொல்லிவிட்டோமே? அவரிடம் மன்னிப்பு கேட்கக்கூட வாய்ப்பில்லாமல் போயிடுச்சே னு பாரதிராஜாதான் அதிக மனவருத்தம் அடைவார். நீங்களும் ஏன் போட்டுக்கிட்டு..

  பாரதிராஜவை மணிவண்ணன் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? பேசாமல் இசை வெளியீட்டை செய்துவிட்டுப் போக வேண்டியதுதானே?

  ஒருத்தர் திடீர்னு மரணமடைந்துவிட்டால் அவரை தெய்வமாக்கி எல்லாரையும் அயோக்கியராக்கிவிடுவீங்களா?

  மணிவண்ணனுக்கு சத்யராஜிடம் சேர்ந்ததால் வாய்க்கொழுப்பு அதிகமாயிடுச்சோ என்னவோ. தேவையே இல்லாத "பாரதிராஜா விமர்சனம்" அது!

  I have nothing against mnivaNnan! I did like him a lot. I dont like BR that much either, But DONT DARE to blame BR for his natural demise! I seriously condemn your post!

  ReplyDelete
 12. வணக்கம் நண்பரே
  இப்போதெல்லாம் நான் ஆனந்த விகடன் படிப்பதில்லை, அதனால் எனக்கு பாரதிராஜா என்ன சொன்னார் என்று தெரியவே இல்லை, உங்களிடம் தான் கேட்க வேண்டும் என நினத்திருந்தேன், ஆனால் நீங்களே பதிவாக இட்டுவிட்டீர்கள், அருமையான பகிர்வு, நன்றி.

  ReplyDelete
 13. இன்னொன்றையும் நாம் இங்கே இணைத்தே பார்க்கவேண்டும். விகடன் இதழ் வருவது வியாழக்கிழமை காலையில். மணிவண்ணன் இறந்தது சனிக்கிழமை பகலில். மணிவண்ணனைப் பற்றி பாரதிராஜா விமர்சித்ததற்காக சிலிர்த்துக்கொண்டு எழுந்த சிங்கங்கள் வியாழக்கிழமையிலிருந்தோ அல்லது வெள்ளிக்கிழமையோ பாரதிராஜாவைப் போட்டுக் கிழித்திருக்க வேண்டியதுதானே.

  அந்த இரண்டரை நாட்களும் வேறு என்னென்னவோ சொல்லி பாரதிராஜாவைத் திட்டிக்கொண்டிருந்தார்கள், வேறு விஷயத்திற்காக.

  மணிவண்ணன் இறந்தார் என்ற செய்தி கிடைத்ததும் மொத்தக் கோபத்தையும் மணிவண்ணன் பேரில் திசைதிருப்பி விட்டார்கள்.

  ReplyDelete
 14. எங்க அத்தா கூட தான் தினமும் என்னைய இத விட கேவலமா திட்டுவாரு நான் சாகணும்னா மணிக்கு ஒரு முறை சாக வேண்டும் ஹி ஹி

  ReplyDelete
 15. சாவு என்பது பொதுவானது. எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்.
  பொது வாழ்க்கையில் வந்துவிட்ட பிறகு எந்தவித விமரிசனத்துக்கும் தயாராகவே இருக்கவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே!
  அப்படி பார்த்தால் மண்ணுமோகன் சிங்கும் இட்டாலி அன்னையும் நம் தமிழ் வாட்ச்மேனும் காவிரித்தாயும் என்ன ஆகியிருக்கணும்?

  ReplyDelete
 16. மணிவன்னன் தமிழ் சினிமாவின் யதர்த்த நடிகர் இவர்நடிகராக மட்டும் இருந்து இருந்தால் நாம் பதிவு எழுதவேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கும். ஆனால் இவர் ஒரு பகுத்தரிவுவாதியாக தன்னை முன்னிருத்தியவர் நாகராஜ சோழன் படத்தின் பின்னனி பற்றி புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் பேட்டியின் ஊடே கடவுள் மறுப்புவாதி என்று உங்களை முன்னிருத்துகிறீர்களே என்ற கேள்விக்கு கடவுள் இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறுகிறேன் என்றார். இது என்ன பகுத்தரிவுவாதம் என்று அவரிடம் கேட்க இருந்தேன் அவரின் விதி அவரை முந்திக்கொண்டது சாதியத்தை அவராலும் வெல்ல முடியவில்லை என்பதை அவரின் உடல் தீயிட்டுதகனம் செய்ததில் இருந்து அறிய முடிகிறது. சாதிய ஆதிக்கத்தை ஒழிக்க இஸ்லாம்தான் சரியான தீர்வு என்று அவரின் முன்னோடி கூறியிருப்பதை இவர் எப்படி கவணத்தில் கொள்ளாமல் போனார் என்பது புதிர்தான்.

  சினிமாவில் இப்படி ஒரு எதர்த்தவாதி இருந்தார் என்பது எதிர்வரும் சினிமா தலைமுறைக்கு எடுத்துக்காட்டுதான் கடவுள் மறுப்போடும் இவரின் மரணத்தையும் ஒப்பீடு செய்து பார்க்கவேண்டியது கடவுள் மறுப்புவாதிகளின் கடமை. பிறப்பு வாழ்க்கை மரணம் அதொடு மனித வாழ்வு முற்றுப் பெறவில்லை என்று திருமறை குர் ஆன் கூறுகிறது. இதில் இருக்கும் இஸ்லாம் கூறும் மரணத்திற்குபின் உள்ள வாழ்வை பற்றி அறியுங்கள். http://www.kaleel.net.in/2013/06/blog-post_143.html

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.