என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, June 28, 2013

9 அண்ணா.தி.மு.க.,வில் பரிதி......எப்படி நடந்தது இந்த மாற்றம்?
1991-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,சார்பில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இருவர். அதில் ஒருவர் கலைஞர். இன்னொருவர் எழும்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம் வழுதி. அதிலும் கலைஞர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த இடத்திற்கு செல்வராஜ் என்பவரை நிறுத்தி வெற்றிபெற செய்தார். அந்த செல்வராஜோ வை.கோ., தி.மு.க.,வை விட்டு விலக்கப்பட்டதும் அவர் பின்னால் சென்றார். அந்த நேரத்தில் கட்சிக்கும், கொடிக்கும் வைகோ உரிமை கொண்டாடியபோது சட்டசபையில் திமுக-1 என பரிதியும், தி.மு.க-2 என செல்வராஜும் செயல்பட்டார்கள். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில்தனியொரு ஆளாக சட்டமன்றத்தில் தி.மு.க.,வின் குரலை பிரதிபலித்தார் பரிதி. அதனாலேயே சட்டசபையில் அண்ணா.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களால் பரிதியின் வேஷ்டிகூட உருவப்பட்டது. அன்று பேண்ட் போட ஆரம்பித்தவர்தான் இன்றுவரை அதை கழட்டவில்லை. அந்தநேரத்தில், பரிதியை சிங்கமாகவும், அண்ணா.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களை நரியாகவும் சித்தரித்து பல நரிகளுக்கிடையே ஒரு சிங்கம் கர்ஜிப்பதுபோல் ஒரு கார்ட்டூனை போட்டது முரசொலி.

ஆரம்பத்தில் காளிமுத்து ஜானகி அணியில் இருந்தபோது ஜெயலலிதாவை பால்கனி பாப்பா, பால்கனி பாவை, ஜானகியம்மாளை பார்த்தால் கையெடுத்து கும்பிட தோன்றும், ஜெயலலிதாவை பார்த்தால் கைதட்டி கூப்பிட தோன்றும் என்றெல்லால் கடும் விமர்சனம் செய்தார். பின்னாளில் அதே காளிமுத்து அண்ணா.தி.மு.க.,வில் இணைந்து சட்டமன்ற சபாநாயகராக இருந்தபோது, அவரின் வார்த்தைகளை வைத்தே காளிமுத்துவையும், ஜெயலலிதாவையும் ஒருசேர கடுப்பேற்றினார். அப்படிப்பட்டவர் கடந்த தேர்தலில் தே.மு.தி.க.,நல்லதம்பியிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.ஆரம்பத்தில் ஸ்டாலினின் தீவிர ஆதரளராக அறியப்பட்டு இளைஞரணி துணைச்செயலாளராகவும், கழக துணைப்பொது செயலாளராகவும் இருந்தார். 1996-2001 ஆம் ஆண்டு தி.மு.க.,ஆட்சியில் சட்டசபை துணை சபாநாயகராக பணியாற்றிவர் பின்னர் 2006-2011  தி.மு.க.,ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சமீபகாலமாக தயாநிதி மாறன் ஆதரவாளராக மாறினார். ஆறு தடவை எழும்பூரில் ஜெயித்தவர் கடந்த தேர்தலில் தோற்றதற்கு தி.மு.க.,வில் சிலர் பார்த்த உள்ளடி வேலைதான் காரணம் என்று தலைமையிடம் புகார் கூறினார். அவர் கொடுத்த  புகாரின் பேரில் சிலரை தி.மு.க.,விலிருந்து நீக்கினார் கலைஞர். சில நாட்களிலேயே நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டுவந்தார் ஸ்டாலின். இதனால் கடுப்பான பரிதி தான் வகித்த துணைப்பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகினார்.பின்னர் கட்சி நடவடிக்கையிலிருந்தும் ஒதுங்கியே இருந்தார். இப்போது அண்ணா.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.


இது நிச்சயம் தி.மு.க.,விற்கு இழப்புதான். ஒரு மிகப்பெரிய போராளியை தி.மு.க.,இழந்துள்ளது. பரிதி தி.மு.க.,விலிருந்து ஒதுங்கிய போதே அவரை சமாதானப்படுத்தி இருக்கனும். அதை செய்யத்தவறியதால் தி.மு.க. ஒரு அற்புதமான தொண்டரை இழந்துள்ளது. அதேநேரம், அண்ணா காலத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளராக இருந்த இளம்வழுதி என்னும் சுயமரியாதைக்காரருக்கு பிறந்த பரிதிக்கு ஜெயலலிதாவின் தலைமை ஏற்புடையதாக இருக்குமா என்று போகப்போகத்தான் தெரியும்.....பரிதி போனது தி.மு.க.,விற்கு இழப்புதான் என்றாலும் சட்டிக்கு பயந்து அடுப்பில் விழுந்த பரிதியின் நிலையும் பரிதாபத்துக்குரியதுதான். 


Post Comment

இதையும் படிக்கலாமே:


9 comments:

 1. அதிமுகவிற்க்கு போனதற்க்கு பதிலாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து இருக்கலாம்.மறியாதையாவது மிஞ்சி இருக்கும்

  ReplyDelete
 2. ஹாஹா அருமை ஆன உதாரணம்

  ReplyDelete
 3. இறுதியில் சொன்ன பழமொழி அருமை! பரிதி அவசரப்பட்டு விட்டார் என்றே தோன்றுகிறது!

  ReplyDelete
 4. அதிர்ச்சியான செய்தி. இனிமேல் கலைஞரை கண்டபடித் திட்டப் போகிறார்!

  ReplyDelete
 5. அவசரகாரனுக்கு புத்தி மட்டு என்பது சரியாகவே உள்ளது.நாத்திகவாதியான பருதி ஆத்திகவாதியான அம்மையாரிடம் எதை அடகுவைக்க போகிறார் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 6. அவசரகாரனுக்கு புத்தி மட்டு என்பது சரியாகவே உள்ளது.நாத்திகவாதியான பருதி ஆத்திகவாதியான அம்மையாரிடம் எதை அடகுவைக்க போகிறார் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 7. எங்கேயும், எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்!///பா.ம.க பொன்னுசாமியும்................!///கடைசி வரை காத்திராமல்,இப்போதே துண்டு போட்டு வைக்கணுமில்லையா?ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
 8. //சட்டிக்கு பயந்து அடுப்பில் விழுந்த பரிதியின் நிலையும் பரிதாபத்துக்குரியதுதான்//

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.