என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, June 27, 2013

19 ராஜ்யசபாவில் ஜெயிக்கப்போவது கனிமொழிதான்.......ஆனால்?ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.,விற்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளது காங்கிரஸ். மேலும், ம.ம.க., புதிய தமிழகம் கட்சிகளும் திமுக.,வையே ஆதரிக்கிறது. இதற்கிடையில் இனி திராவிடக்கட்சிகளிடம் கூட்டணி இல்லை என்று தனி ஆவர்த்தனம் செய்யும் பா.ம.க.விடமும் திமுக.,தன் ஆதரவை கேட்டு முகத்தில் கரியை பூசிக்கொண்டது. ஆரம்பத்தில் காங்கிரசிடம் ஆதரவு கேட்டு, அதை காங்கிரஸ் மறுத்ததன் மூலம் விஜயகாந்த் சரியான வியூகம் அமைக்கத்தெரியாமல் மண்ணை கவ்வியுள்ளதாக சிலர் சொல்கிறார்கள். ஐம்பது வருட பாரம்பரிய கட்சியான திமுக.வே கண்ணீர் விட்டும், காலில் விழுந்தும் பெரிய அவமானங்களை சந்தித்துதான் கனிமொழிக்கு எம்.பி.பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இதில் கத்துக்குட்டியான விஜயகாந்த் என்ன செய்வார்?.

அப்படி என்ன அவமானப்பட்டுவிட்டார் விஜயகாந்த்? இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட்டணியிலிருந்து வெளியேறி, பட்டாசெல்லாம் வெடித்து மீண்டும் அந்தக்கட்சியிடம் சரணாகதி அடைந்தாரா? இல்லையே....


அல்லது திராவிடக்கட்சிகளோடு இனி கூட்டணி இல்லை என்று சொன்னவர்களிடம், எந்த திராவிடக்கட்சி அவர்கள் கூட்டணிக்கு அலைகிறது என்று சொல்லிவிட்டு பதினைந்தே நாளில், அவர்கள் ஆதரவை கேட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பல்பு வாங்கினாரா? இல்லையே.....

இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்த் தன் எம்.எல்.ஏ.க்களில் சில பேரை ஆளுங்கட்சிக்கு பிச்சை போட்டவர். இத்தனை வருட பாரம்பரியமிக்க கலைஞரின் ராஜதந்திரமே பா.ம.க.போன்ற கட்சிகளிடம் எடுபடாமல் போய்விட்ட நிலையில் விஜயகாந்தின் தோல்வி கம்பீரமானதுதான். கவுரமானதும் கூட.காலில் விழுந்தும் கண்ணீர் விட்டும் அவமானம், அசிங்கங்களை துடைத்து எறிந்துவிட்டு பதவி பெறுவதைவிட கவுரமான தோல்வியே சிறந்தது.

பதிவிக்காக காலில் விழுவதும், கழுவி ஊற்றுவதை துடைத்துக்கொண்டு போவதும்தான் அரசியல் என்றால் அது அண்ணா.தி.மு.க.,வினருக்கும் பொருந்தும் அல்லவா? அப்புறம் ஜெ.,காலில் விழுந்தால் மட்டும் அடிமை என்று எந்த அடிப்படையில் விமர்சிக்கிறோம்?

ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.,ஆதரவை கேட்ட தி.மு.க.,வினரிடம்
அவங்கதான் உங்க கூட்டணியிலேயே இல்லையே அவங்கட்ட ஏன் ஆதரவு கேட்கறீங்கன்னு கேட்டால், அதுக்கு அவங்க எங்க கூட்டணியில் இருந்துதானே ஜெயிச்சு இப்ப மூனு எம்.எல்.ஏ., வச்சிருக்காங்க. அதான் கேட்கறோம்னு லாஜிக் பேசறாங்க. சரிதான் நியாயமான லாஜிக்தான். சரி...அப்படின்னா மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் எல்லாம் உங்களை ஆதரிக்குதே..அவங்களும் உங்க கூட்டணியில் நின்னுதான் தலா ரெண்டு எம்எல்.ஏ., வச்சிருக்காங்களா?, அல்லது, போட்டி போட்டால் எல்லாக்கட்சிகளிடமும் ஆதரவு கேட்போம் என்றால் ஏன் ஜெயலலிதாவிடம் கேட்கவில்லை?ராஜ்யசபா தேர்தலில் ஜெயிக்கப்போவது கனிமொழிதான். ஆனால், அந்த ஒரேயொரு  எம்பி பதவிக்காக தி.மு.க.,கொடுத்த விலைதான் மிக அதிகம்......நடுவுல கொஞ்சம் தன்மானத்தை காணாம்.அவ்வளவுதான் சொல்ல தோன்றியது. 


Post Comment

இதையும் படிக்கலாமே:


19 comments:

 1. யோசிக்கவேண்டிய விஷயம்... :-)

  ஆமா..நீங்க தேமுதிக வா ஹி..ஹி...ஹி....

  ReplyDelete
 2. //கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.//

  கரெக்ட்யா.......!

  ReplyDelete
 3. சும்மா இருக்கமாட்டியாப்பா நீ

  ReplyDelete
 4. யோசிக்க வச்சுட்டீங்களே சகோ!

  ReplyDelete
 5. /நடுவுல கொஞ்சம் தன்மானத்தை காணாம்/

  கொஞ்சமா?

  ReplyDelete
 6. விஜயகாந்துக்கெல்லாம் இவ்ளோ Support தேவையில்லைனு நெனக்கிறேன்..

  ReplyDelete
 7. கனி இருக்கிறவரைக்கும் காங்கிரஸ்க்கு கவலை இல்லை.

  ReplyDelete
 8. நீங்க சொன்னது போல விஜயகாந்த்திற்கு இதனால் இழப்பு ஏதுமில்லை, பெருமை தான்.

  ReplyDelete
 9. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!

  ReplyDelete

 10. திரும்பவும் காங்கிரஸ் கூடாரத்தின் கதவைத் தட்டியது தன்மானமில்லைதான்.... சரி...காங்கிரசை விட்டு வெளியே வந்தவுடன் இதுவரை கலைஞரை கழுவி ஊத்தியவர்கள் தலையில் தூக்கி வைத்தா கொண்டாடினார்கள்...அதே வன்மம்,அதே கழுவி ஊத்துதல்... சொல்லப்போனால் இன்னும் அதிகமாகத்தானே இருந்தது. கலைஞரின் வியூகம் தற்போது ஜெயாவின் ராஜ தந்திரத்தை உடைப்பது. விஜயகாந்தின் திமிர்த்தனத்துக்கு பதிலடி கொடுப்பது. அதற்காக காங்கிரசின் காலில் விழவேண்டுமா என்றால், தர்க்க ரீதியாக தவறான பாதையாக தெரிந்தாலும் அரசியல் சதுரங்கத்தில் அவரும் நிலைத்து ஆடவேண்டிய அவசியம் இருக்கத்தான் செய்கிறது.

  சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் எல்லாமே வரும் நாடாளு மன்றத் தேர்தலில் திமுகவிற்கு 4 இடங்கள் கிடைப்பதே அரிது என வெளியிடும் போது வேறு வழியில்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கலாம்... எப்படியாகினும் காங்கிரஸ் கதவைத் தட்டியது பெரும் பின்னடைவு என்பதுதான் நிதர்சனம்.

  ReplyDelete
 11. இது விஜய காந்துக்கு தோல்வியில்லை என எப்படி சொல்ல முடியும்... இதை எந்த தேமுதிகவினராவது ஒத்துக் கொள்வார்களா... 29 எம் எல் ஏவை வைத்திருந்தவர், கூடுதலாக ஐந்து ஓட்டுகள் பெற்றாலே போதும் என்கிற அருமையான சந்தர்பத்தை நழுவவிட்டது அந்தக் கட்சியினருக்கு எப்படி மகிழ்ச்சியைத் தரும்...

  ReplyDelete
 12. திமுகவினருக்கு தன்மானம் காணாமல் போய் ரொம்ப நாள் ஆகிறது! விஜயகாந்துக்கு இது இழப்பில்லை என்றாலும் ஜெயிக்க வேண்டிய ஒன்றை இழப்பது அவரது அரசியல் அறியாமையை அல்லவா புட்டு வைக்கிறது! அலசலுக்கு நன்றி!

  ReplyDelete
 13. ஒரு சில விசயங்களில் நாம் திமுக அபிமானியாக இருந்தாலும் தவறை ஒப்புகொள்ள வேண்டி தான் உள்ளது

  ReplyDelete
 14. இந்த எம்பீ பதவியை பறிக்க அப்படி கனிமொழி என்னத்த பெருசா சாதிச்சுட்டாங்க என்றுதான் புரியமாட்டேங்குது. தன் குடும்பத்துக்காக எவ்வளவு தரம் கெடவும் தான் தயாராக இருப்பதை மீண்டும் ஒரு முறை பட்டவர்த்தனப்படுத்தியிருக்கிறார், தமிழ் வாட்ச்மேன் தாத்தா!

  ReplyDelete
 15. என்னமோ போங்க,கஸாலி!அரசியல்ல நிரந்தர நண்பனுமில்ல,எதிரியுமில்லே ன்னு ...............................(அடடா,எடுத்துக் குடுத்துட்டனோ?)

  ReplyDelete
 16. பாராட்ட வேண்டிய பதிவு.நாடா/மாநிலமா/குடும்பமா .இதில் குடும்பம் தான் என்றால் அவமானம்.மாநிலம் என்றால் பாரத நாடு முக்கியம். அரசியல் தெரிந்தவர்கள் மானம் ,சுய கௌரவம் ,அனைத்தும் விட்டு அரசியல் ஒரு சாக்கடை என்பதைத் தெரிந்து பதவிக்காக எங்கும் குளித்து சாப்பிட்டு வாழ்பவர்கள்.கனி மொளிவேற்றியில் பெருமைப்பட எதுவும் இல்லை. விஜயகாந்தின் தோல்வி அரசியல் ஞானம் இல்லை என்பதை விட வெற்றி பெற்றவர்களிடம் நியாயம்/மனிதாபிமானம் இல்லை.இரண்டு கட்சிகளுமே ஊழலுக்கு பேர் போனவை.விசாரணைக்குழு,இன்னும் குவிப்பு வழக்கு.இதை மீறி தேர்தல் வெற்றிகள்.த.ராஜேந்தர் ,சிவாஜி கணேசனை விட அரசியலில் வெற்றி பெற்றவர் விஜயகாந்த்.அவரின் தன்மானம் கெஞ்சவில்லை.இதுவே ஒரு வெற்றிதானே.

  ReplyDelete
 17. மன்னா் மானிய மசோதா,வங்கிகள் தேசிய மயமாக்குதல் போன்ற பல விசயங்கள் தற்போது 2ஜி க்காக 2009 ல் இலங்கைப் பிரச்னை என எல்லாத்திலும் பதவிக்காக தன்னையே விட்டுக்கொடுத்தவர்.
  தற்போது தனது மகளுக்கு ஒரு எம்பி பதவிக்காக எதுவும் செய்வார்.
  காங்கிரஸ் தனது 5 எம்பிக்கள் ஆதரவு இல்லை என்று சொல்லி இருந்தால் அதிமுகவிடமும் ஆதரவை திரை மறைவில் கேட்டாலும் கேட்டு இருப்பார்
  அரசியலில் இதெல்லாம் சகஜம்தானப்பா
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.