என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, September 26, 2013

30 தி ஹிந்துவில்(தமிழ்) என் கட்டுரை.........

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இஸ்ரேலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் ஏறக்குறைய 62 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
சோமாலியாவை சேர்ந்த அல் ஷபாப் இயக்கத்தை ஒடுக்குவதற்காக ஆப்பிரிக்க ராணுவத்திற்கு உதவிடும் கென்யா ராணுவத்தின் நடவடிக்கைக்கு பதிலடியாக, இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது அல் ஷபாப்.

அதிலும் முஸ்லிம் - முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்த்து, முஸ்லிம் அல்லாதவர்களை மட்டும் கொன்று குவித்துள்ளனர் இந்த மாபாதகர்கள். நிச்சயம் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு துன்பியல் சம்பவம்.

இதில் சம்பந்தப்பட்ட மனித உருவில் இருக்கும் மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இதில் மனிதாபிமானமுள்ள யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

உலகில் எங்கு இத்தகைய சம்பவங்கள் நடந்தாலும் இஸ்லாத்தின் பேரும் சேர்த்தே உருட்டப்படுகிறது. இஸ்லாம் இப்படிப்பட்ட தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
இஸ்லாத்தின் பெயரால், இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் நடத்தப்படும் இந்த கொடூரங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை. போர்க்களத்தில் கூட இஸ்லாம் சில யுத்த தர்மங்களை விதித்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மத குருமார்கள் போன்றவர்களைக் கொல்ல இஸ்லாம் தடை விதித்திருக்கிறது.யுத்த காலங்களிலேயே இந்த சட்டம் என்றால் மற்ற நேரங்களில் எப்படி இருக்க வேண்டும்?

இவ்வுலகில் யாராவது அநியாயமாக ஒருவரை கொலை செய்தால், அது இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும் என்று எச்சரித்துள்ளார் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். மேலும் கொலை என்பது பெரும்பாவங்களில் ஒன்றாகும் என்று சொல்கிறது இஸ்லாம்.

அன்பையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் இஸ்லாமில் இத்தகைய தீவிரவாதத்திற்கு துளியும் இடமில்லை. இப்படி காக்கா, குருவிகளை சுடுவதுபோல் மானாவாரியாக உயிர்களை கொன்று குவிக்க ஒரு போதும் இஸ்லாம் சொல்லவில்லை. அப்படி செய்பவர்கள் இஸ்லாமியர்களும் இல்லை.

கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம்  http://www.rahimgazzali.com

இந்தக்கட்டுரையை தி ஹிந்துவில் படிக்க.....கிளிக் Post Comment

இதையும் படிக்கலாமே:


30 comments:

 1. இணையத்தில் பல இஸ்லாமிய பதிவர்கள் இதைப் பற்றி மவுனம் காக்க இஸ்லாமியரான நீங்கள் ஒருவரே இந்த கொடூரத்தைப் பற்றி துணிச்சலாக குரல் எழுப்பியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இதுபோன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படப்போவது அமைதி விரும்பும் இஸ்லாமியர்கள்தான். இதை எப்படி துப்பாக்கியுடன் தொழுகை செய்யும் கூட்டத்தாருக்கு புரிய வைப்பது?

  ReplyDelete
 2. வாழ்த்துகள்.

  காரிகன் கருத்தை வழிமொழிகின்றேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மனிதம் பேசுகிறது.. மகிழ்ச்சி :)

  ReplyDelete
 5. சலாம்,

  மாஷா அல்லாஹ் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்

  ReplyDelete
 6. உங்கள் ஆதங்கம் கட்டுரை வடிவில்,அதுவும் இந்து(தமிழ்) பதிப்பில் வந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை.மதங்கள் ஒரு போதும் வன்முறையை ஆதரிக்கவில்லை.என்ன செய்ய?ஹூம்!!!

  ReplyDelete
 7. அருமையான கட்டுரை...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. வாழ்த்துகள் ரஹீம் கஸாலி!.

  ஒரு வலைப்பதிவரின் எழுத்துகள் பத்திரிகைகளில் வருவதுதான் மூலமாகவே அவரது எழுத்துகள் அடுத்த உயரத்திற்கு பயணப்படும். அது நாள் வரையில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து உழைப்புக்கு, அதுவே சிறந்த கிரியா ஊக்கியாக இருக்கும்!. வலைப்பதிவோடு நமது எழுத்தை நிறுத்திவிடாமல் வெகுஜன ஊடகத்திலும் எழுதுவதுதான் நமது எழுத்துக்கு நாம் செய்யும் மரியாதை!.

  தொடந்து எழுத வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. வாழ்த்துகள் கஸாலி :)

  ReplyDelete
 10. வாழ்த்துகள் கஸாலி..ஆரம்பமே அசத்தல். நியாயத்தைப் பேசியதற்கு நன்றி.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள். உங்கள் அனுமதி வாங்கி வெளியிட்டார்களா?

  ReplyDelete
 12. வேலையில் இருக்கும் போது உங்கள் பதிவை படித்ததால் வாழ்த்துகள் மட்டும் சொல்லி சென்றுவிட்டேன்.. நான் சொல்ல விரும்புவது இதுதான் நீங்கள் மாற்று மதத்தவர்களும் பாராட்டும் ஒரு நல்ல முஸ்லிம்களில் நீங்களும் ஒருவர் என்பதுதான்
  பாராட்டுக்கள்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. நட் ஷெல் என்று சொல்லக்கூடிய விதத்தில் சொல்லவேண்டியதை நறுக்குத்தெரித்தது போல பட்டுன்னு சொன்னதற்கு என் வாழ்த்துக்கள். ரஹீம் கஸாலி.

  ReplyDelete
 15. நட் ஷெல் என்று சொல்லக்கூடிய விதத்தில் சொல்லவேண்டியதை நறுக்குத்தெரித்தது போல பட்டுன்னு சொன்னதற்கு என் வாழ்த்துக்கள். ரஹீம் கஸாலி.

  ReplyDelete
 16. குட் கஸாலி...உன் கட்டுரை நாளிதழில் வந்தது மிக்க மகிழ்வைத் தருகிறது... இது ஒரு மைல்கல் தான்...

  ReplyDelete
 17. அப்புறம் காரிகன் அன்ட் ஜோதிஜி திருப்பூர்....

  நீங்க ரெண்டு பேரும் உ.பி கலவரம் பத்தி பதிவு போட்டு இருப்பீங்கன்னு உறுதியா நம்புறேன்... லிங்க் தர முடியுமா சகோஸ்????

  ReplyDelete
 18. எங்கையோ கென்யாவில் முஸ்லிம்கள் நடத்திய கலவரத்துக்கு இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் கஸாலி கண்டனத்தை பதிவா வெளியிட்டுட்டார்....

  இந்தியாவில் இருக்கும் உ.பி யில் இந்துக்கள் செய்த கலவரத்துக்கு நீங்க போஸ்ட் போட்டீங்களா????

  லிங்க் தாங்க.....

  லிங்க் இல்லாட்டி கண்ணாடி முன்னாடி போய் நின்னு காறி துப்பிக்கங்க இந்த கமெண்ட் போட்டதுக்காக.....

  ReplyDelete
  Replies
  1. திரு சிராஜ் அவர்களுக்கு,
   உங்கள் கருத்து நியாயமானதே. அதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் நீங்கள் கூறிய அதே "எங்கோ ஒரு"பாலஸ்தீனத்தில், இராக்கில்,ஆப்கானிஸ்தானில், பர்மாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிராக நீங்கள் பொங்கி எழாமல் இருப்பீர்களா என்று கேட்க விழைகிறேன். உ பி யில் நடந்த வன்முறைக்கு கண்டனங்கள் எழாமல் இல்லை. மேலும் தற்போது பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மோடிக்கு எதிராக அணி திரள்பவர்களில் பெருமான்மையானவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களே என்பது உங்களுக்கு தெரியுமா?

   Delete
 19. உண்மையான உணர்வு... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் அண்ணே

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 22. "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகாது, மாறாக, மனிதன் தன் சமூகத்தார்(பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்ற நபிமொழியை மெய்ப்படுத்தியுள்ளீர்கள்.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. Congrats Bro :)

  FYI
  குரானில் திருத்தம் தேவையா? இல்லையா?
  http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/01/blog-post_27.html

  Hope you will find the real solution.

  ReplyDelete
 24. கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துக்கள்.ஒரு சிலரின் தவறுகள் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு அவப் பெயர் தேடித் தருவது வருந்தத் தக்கதுதான்.

  ReplyDelete
 25. 'இஸ்லாம் அமைதி மார்க்கம்' என்பதை (தி ஹிந்து) தமிழில்
  உரக்கச் சொன்னீர்கள் கஸ்ஸாலி!

  ReplyDelete
 26. எங்க ஊர்ல இருந்து ஒரு வைரகல்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.