என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, September 23, 2013

10 ஜெயலலிதாவும் எஸ்.எஸ்.ஆரும்........இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில், சாதனையாளர் விருதை ஜெயலலிதா கையில் முதல் ஆளாய் பெற்றவர் பழம்பெரும் நடிகர் திரு எஸ்.எஸ்.ஆர் என்றழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள். சினிமாக்களில் சிங்கமென கர்ஜித்த இவரை காலம் தள்ளுவண்டியில் உட்கார வைத்திருந்ததை பார்த்ததும் மனம் கணக்கவே செய்தது. அவரைப்பற்றிய சில நினைவுகள்.....
சிவாஜி அறிமுகமான அதே பராசக்தியில்தான் எஸ்.எஸ்.ஆரும் அறிமுகமானார். திராவிட இயக்கத்தின் முதல் நடிகர் எம்.எல்.ஏ., இவர்தான். தி.மு.க.,வின் சார்பில் தேனியில் 1962-ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்றவர்.


பின்னாளில் எம்.ஜி.ஆர்.,அண்ணா.தி.மு.க.,வை துவங்கியபோது அதில் இணைந்து பணியாற்றிவர். ஆண்டிப்பட்டி தொகுதியில், அண்ணா.தி.மு.க.,சார்பில் 1980-ஆண்டு தொகுதில் போட்டியிட்டு வென்று தமிழக சிறு சேமிப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டவர். 1984-ஆம் ஆண்டு தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புத்தரவில்லை என்று அண்ணா.தி.மு.க.,விலிருந்து விலகி எம்.ஜி.ஆர்- எஸ்.எஸ்.ஆர்.,புரட்சிக்கழகம் என்று ஒரு கட்சியையும் துவங்கி நடத்தினார்.


ஜெயலலிதாவிற்கு ஜோடியாக மணிமகுடம் படத்தில் நடித்தவர். எம்.ஜி.ஆர்.,மறைவிற்கு பின் ஜெயலலிதா தலைமையை ஏற்று அண்ணா.தி.மு.க.,வில் பணியாற்றினார். பின் ஜெயலலிதாவோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருநாவுக்கரசோடு சென்று, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர். இப்போது அரசியலை விட்டே ஒதுங்கியிருக்கிறார். அப்படிப்பட்டவர் இன்று ஜெயலலிதா கையில் விருது வாங்கினார். வாங்கியபோது எஸ்.எஸ்.ஆரின் மனநிலையும், அவருக்கு விருது கொடுத்தபோது ஜெயலலிதாவின் மனநிலையும் என்னவாக இருந்திருக்கும்?Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. காலம் செய்த கோலம் தான் இது! பாவம் எஸ்.எஸ். ஆர்!

  ReplyDelete
 2. முக்கனித்தோட்டம் என ஒரு படம் கூட அம்மையாரை
  வைத்து படம் எடுக்க முயன்று அது முடியாமல்
  பாதியில் நின்று போனது என நினைக்கிறேன்
  திராவிட முன்னேற்றக் கழகத்தில் நடிப்பிசைப் புலவர்
  கே ஆர் ராமசாமிக்குப் பின் பொருளாளாராக இருந்தவர்
  என் நினைக்கிறேன்
  எதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும்
  இந்தக் காலச் சூழலில்மாறிப் போனவர் எனக் கருதாது
  கௌரவித்துது கூட பெரிய விஷயமாகப் படுகிறது

  ReplyDelete
 3. விட்டுவிடாமல்...
  அழைத்து விருது கொடுத்து வரை மகிழ்ச்சிதான்...


  ReplyDelete
 4. மு.க. மற்றும் எம்.ஜி .ஆர். இவர்கள் மட்டும் அல்லாமல் அன்றும் இன்றும் ஊடகங்களால் பெரிதும் பின்னுக்கு தள்ளப்பட்டவர்.ஆனால் மக்களின் மனதில் இன்று இருக்கிறார்.

  ReplyDelete
 5. பாத்தியாய்யா,நான் எப்புடி இருக்கேன்? நீ எப்புடி இருக்கே? ன்னு அம்மா மனசுல நினைச்சு சிரிச்சிருப்பாங்க!

  ReplyDelete
 6. Hi rahimgazzali

  thanks for the post

  I read more about S S R

  http://rprajanayahem.blogspot.in/search/label/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

  ReplyDelete
 7. u wanted to say something....kodaikkaanal...lodge......

  ReplyDelete
 8. இந்த அரசியலுக்கும் எனக்கும் ரொம்பதூரம்

  ReplyDelete
 9. alakiya thotram.arumaiyana kural valam.dravida iyakka kolkaikalil aalndha patru.iyakkathukaga edhayum satikkum thunivu.ivai anaithilum m.g.r.ai vida pala madangu uyarvu s.s.r. ilatchiya nadigar ena alaipathu poruthame.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.