என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, November 05, 2013

16 ஜெயமோகனும் அதிமேதாவித்தனமும்தமிழில் வாசிக்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருவதால் புதினங்களை தமிழிங்கிலீசில் மொழி பெயர்த்து வைக்கவேண்டும் என்று இலக்கியவியாதி என்று ஒரு சாரரால் கொண்டாடப்படும் ஜெயமோகன் கூறியுள்ளார். உருப்பட்ட மாதிரிதான். ஒரு மொழியை படித்து விளங்கிக்கொள்ள வேண்டுமானால் அந்தந்த எழுத்து வடிவத்திலேயே படிப்பதுதான் சிறப்பாக  இருக்கும். அதைவிடுத்து தமிழிங்கிலீஸ் என்பது ஆபத்தான அதேநேரம் அபத்தமான ஒன்று. ஒன்று தமிழில் எழுதவேண்டும், அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும். அதென்ன ரெண்டுங்கெட்டான் தனமாக தமிழிங்க்லீஸ்?

இங்கே முகநூலிலோ, ப்ளாக்கிலோ  ஒரு வரியை தமிழிங்கிலீஸில் கமெண்டாக எழுதியிருந்தாலே அதைப்படிக்க சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் எனக்கு. அதனாலேயே நான் சில பதிவுகளை படிக்காமல் கடந்துவிடுவதுண்டு. இந்த லட்சணத்தில் நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட புதினங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். புதினத்தை வாங்கவே மாட்டார்கள் யாரும். வேண்டுமென்றால் தனது அடுத்த நாவலை தமிழிங்கிலீசில் எழுதி வெளியிட்டு பரீட்சார்த்த முயற்சி செய்து பார்க்கட்டும் ஜெமோ. அவர் தமிழில் எழுதினாலே புரியாது என்பது வேறு விஷயம்.

உதாரணத்திற்கு SAPPITTIYAA என்ற வார்த்தையை தமிழிங்கிலீசில் எழுதி ஒரு குறுந்தகவல் அனுப்புகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், இதை படிப்பவன் சாப்பிட்டியா என்றும் புரிந்து கொள்ளலாம். சப்பிட்டியா என்று அபத்தமாக  புரிந்தும்  தொலைத்துவிடலாம்.  ஆனால் அந்த வார்த்தை நிஜமாகவே சாப்பிட்டியா என்ற அர்த்தத்தில்தான் அனுப்பப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட ஆபத்துகளும் தமிழிங்கிலீஸில் உண்டு. என்னைப்பொருத்தவரை ஒரு கருத்து மாறாமல், வீரியம் குறையாமல் படிக்க வேண்டுமென்றால் அந்தந்த எழுத்து வடிவத்தில் படிப்பதுதான் சிறப்பு.

தமிழிங்க்லீசில் எழுதும்போது லகர ரகர பிரச்சினைகள் சர்வ சாதாரணமாக தலைதூக்கும். உதாரணமாக குளம், குலம் இரண்டுக்குமே தமிழிங்கிலீசில் KULAM என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துவோம். அது சொல்வது குளத்தையா குலத்தையா என்ற குழப்பமே மிஞ்சும். KARI- என்றால் கரி, கறி என்று இரு அர்த்தம் வரும். KARI- வார்த்தை குறிப்பிடுவது கறி(இறச்சி)யையா? அடுப்புக்கரியையா என்ற குழப்பம் வரும்.

ZHA என்ற வார்த்தை தமிழைப்பொறுத்தவை ழ - என்ற எழுத்துக்கு பயன்படுகிறது. ஆனால், ஆங்கிலம் படித்தவர்களுக்கு ZHA என்பது   தான். PAZHAM என்பதை பழம் என்றும், பஸம் என்றும் படித்துவிட வாய்ப்பு உள்ளது. ZHA - ழ என்று படிக்கப்படும்போது ஸ என்றும் படிக்கப்படுகிறது. AZHARUDDIN என்பதை தமிழைப்பொறுத்தவரை அஸாருத்தீன் என்றும் படிக்கலாம். அழாருத்தீன் என்றும் படிக்கலாம்

வெளிமாநிலங்களிலிருந்து பாட வரும் பாடகர்கள் தன் மொழியில் தமிழ் வரிகளை எழுதிவைத்து படிக்கும்போது மன்னிக்கவும் பாடும்போது ஒரு ஜீவனே இல்லாமல் இருப்பது அதனால்தான். இத்தனைக்கும் அந்த பாடகருக்கு திருத்தம் சொல்லிக்கொடுக்க ஒரு முறைக்கு பல முறையாக வாசித்துக்காட்ட பாடலாசிரியரும், இசையமைப்பாளரும் உண்டு. பிரபல பாடகரான கே.ஜே.ஜேசுதாஸ்கூட ஒரு முறை அந்தமான் காதலி படத்திற்காக ”நினைவாலே சிலைசெய்து  உனக்காக வைத்தேன் திருக்கோயிலே ஓடிவா” என்ற பாடலை பாடும்போது அவர் மொழியில் எழுதிவைத்து படித்ததால் திருக்கோவில் என்ற வார்த்தையை  தெருக்கோவிலாக மாற்றி பாடிவிட்டதாக கே.ஜே.ஜே.மீது இன்னமும் குற்றச்சாட்டு உண்டு.  இப்படிப்பட்ட நிலையில் ஜெமோ சொல்வதுபோல் தமிழிங்க்லீசில் புதினம் எழுதினால் அப்புதினத்தை வாங்கும் வாசகர்களோடு அதை எழுதிய ஆசிரியரையும் கூடவே அனுப்பனும். அப்பத்தான் அந்த புதினம் புரியும். ஏன்னா எழுதியவருக்குத்தானே அது எந்த அர்த்தத்தில் எழுதப்பட்டது என்று விளங்கும்.Post Comment

இதையும் படிக்கலாமே:


16 comments:

 1. நாகரிகமான வார்த்தைகளில் அவர் சொன்னது தவறு என்பதை தக்க உதாரணங்களுடன் சொல்லி இருக்கிறீர்கள்.. அருமை

  ReplyDelete
 2. அருமையாக சொன்னீர்கள்! ஜெயமோகன் கருத்தில் எனக்கும் உடன் பாடில்லை! பிரபலம் ஆகிவிட்டாலே உளறல்கள் தானாக வரும் போல! நல்ல பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 3. ஜெய மோகன் அவ்வவ்போது தன் இருப்பை காட்டிக்கொள்ள செய்யம் தந்திரம்!! இதே போலே முன்னே நிறைய தடவை உளறிகொட்டியுள்ளார் பைத்தியங்களின் பிதற்றல்களை கண்டுக்காமல் இருப்பதே சிறந்தது

  ReplyDelete
 4. ஸொம்மாவே தமில்லே பல டைப்கீது.
  அத்த அண்டர்ஸ்டாண்ட் பண்ணவே தல்கீயா நட்க்கவேண்டிகீது.
  அதுலே இப்டீவேறயாபா?
  ஆனா நீ கொட்த்த எக்ஸாம்புல் அல்லாமே ஸூப்பர்பா.
  மொதல்ல இந்த தமிழிங்கிலீசிற்கு ஒரு கோனார் நோட்ஸ பப்லீஸ் பண்ண சொல்லு நைனா அவர்க்கு. அப்பாலிக்கா எயுதுரத பத்தி பாக்கலாம்.

  ReplyDelete
 5. இதுதான் வாய்ப்பென்று அவரை மட்டும்
  குறிவைத்துத் தாக்கும் சிலரைப்போல் அல்லாது
  அவர் கருத்தில் உள்ள குறையினை
  உதாரணங்களுடன் அருமையாக விளக்கியது
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நன்றாக சொன்னீர் நண்பரே, என்னால் உம்மைப் போல் நல்ல வார்த்தைகளைப் பயன் படுத்தமுடியவில்லை. இவரை சாரு திட்டும் போது ”ஏன் இந்த ஆள திட்ட வேண்டும்” என நினைப்பேன். இப்போது சாருக்கு ஒரு சல்யுட் அடித்தால் என்ன என்று தோன்றுகிறது... தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியைக் கொஞ்சமும் அறியாமல் இருக்கும் ஒரு மனிதன் தான் செய்வதை மற்றவரும் செய்யவேண்டும் என நினைப்பதை என்னவென்பது.. பத்திரிகைகள் ஜெயமோகனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது இன்னும் எனக்கு புரியவேயில்லை.

  ReplyDelete
 7. ithu vanmaiyaakak kantikkapata veentiya karuththu....

  இப்படி தமிங்கிலீஸில் எழுத ஆரம்பித்தால், அடுத்த சில வருடங்களில் எதுக்கு வேஸ்ட்டா இப்படி எழுதிக் குழப்பிக்கணும், டைரக்டா இங்கிலீஸ்லயே எழுதிக்கலாமேன்னு எல்லாருக்கும் தோணிடும். இது தமிழை அழிப்பதற்கான வழி..அவரும் தெரிந்தே கொளுத்திப்போட்டிருப்பார் என்று நம்புகிறேன்!.இப்போப் பாருங்க, நீங்ககூட அவரைப்பத்திப் பேசிக்கிட்டிருக்கீங்க!

  ReplyDelete
 8. ஒவ்வொரு சாமான்ய மனிதனுக்கும் இது தவறான கருத்து என்று தெரியும் போது அவ்ளோ பெரிய அப்பா டக்கரான எழுத்தாளர் ஜெயமோகன் இப்படி சொல்வதன் பின்னணிக் காரணம் என்னவென்று யோசிக்க வேண்டும்.
  பெயர் வாங்குதற்காகவா?
  மலையாளத்தை போற்றிக்கொண்டே இருப்பதனாலா?
  அல்லது, தமிழக அரசு இனிமேல் பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என்று சொன்னதனால் இந்த நிலைதான் வரும் என்று forecast ஆக முன்கூட்டி சொல்கிறாரா இந்த சுயமோகன்?

  ReplyDelete
 9. மிகச்சரியாக அந்த இலக்கிய வியாதியஸ்தனுக்கு ‘கொடை’ கொடுத்து உள்ளீர்கள்.நன்றி.

  ReplyDelete
 10. இந்த அபத்தமான யோசனையைச் செயல்படுத்தினால் என்னல்லாம் கஷ்டம் வரும்னு பளிச்சுன்னு மண்டைல உறைக்கற மாதிரி சொல்லி அசத்திட்டீங்க கஸாலி!

  ReplyDelete
 11. எங்க South Asia head பேரு எழிலன் அத அவரு ஆங்கில வரி வடிவில் Ezhilan என்று எழுதுவார் இன்று எங்க அலுவலகம் முழுதும் அவர எசிலன் என்று அழைக்கிறார்கள்

  ReplyDelete
 12. சாருவாவது தமிழர்களுக்கு ஊறு செய்கிறார்.செயமோகர் தமிழுக்கே ஊறு செய்ய நினைக்கிறார்

  ReplyDelete
 13. உன்மை வேறு விதமாக உள்ளது என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகா வேண்டி உள்ளது...... பல வேளைகளில் நம் நண்பர்கள் சாட் வரும்போது தங்கிலிஷ் ல் எழுதினால்தான் தமக்கு படிக்க முடிவதாக கூறும்போது மனதுவலிதாலும் உண்மை நிலை அதுதான். மக்களின் மோகமும் அப்படிதான் உள்ளது. ஆங்கிலவழி கல்வி பயிலும்போது ஒரு பாடம் மட்டுமே தமிழ் படிக்கும்போது தமிழில் எப்படி எழுத படிக்க செய்வார்கள்.

  ReplyDelete
 14. தமிழில் தேர்ந்த எழுத்தாளராகக் காட்டிக் கொள்ளும் ஜெயமோகன், எதோ சரக்கடித்துக் கிறுக்கியது போல் எழுதியதையும் தி இந்துவினர் வெளியிட்டு வாங்கிக் கட்டியுள்ளனர். ஐயா எழுதியது போல அவரின் பதிவில் உள்ள அபத்தங்களை எளிமையாக விளக்கியுள்ளீர்கள். அவற்றை விவரணமாய் விளக்க முடிவு செய்துள்ளேன். முதற்கட்டமாய் இன்றைய பதிவில் சிலவற்றை எடுத்து வைத்துள்ளேன் அடுத்த பதிவில் மேலும் சிலவற்றை விளக்கமளிக்க உள்ளேன், வாசித்து நிறை குறைகளை அறியத்தரவும். நன்றிகள்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.