என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, March 05, 2014

11 தேர்தலை புறக்கணித்தார் விஜயகாந்த்....
இந்த கட்சியுடன் கூட்டணி சேர்வார், அந்தக்கட்சியுடன் கூட்டணி சேர்வார் என்று எல்லோரையும் குழப்பி வந்த தேமுதிக.,தலைவர் விஜயகாந்த் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...

காங்கிரசை பொருத்தவரையில் அய்யா மூப்பனாருடன் நான் நல்ல நட்பில் இருந்தவன் என்பதாலும் இப்போது அவரது இளவல் ஜி.கே.வாசன் அவர்களுடன் அதே நட்பு தொடர்வதாலும், என் தந்தையார் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர் என்பதாலும் என்னால் ஒரு காலத்திலும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட முடியாது. 

அதேபோல தி.மு.க.,தலைவர் கலைஞர் அவர்களும். அவர் தலைமையில் தான் என் கல்யாணமே நடந்தது. நேற்று என் திருமண ஆல்பத்தை புரட்டிய போது இது என் நினைவுக்கு வந்தது. அத்துடன் நான் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பிரமாண்டமாக ஒரு ஒரு பாராட்டு விழாவை கலைஞர் அவர்களுக்கு நடத்தி தங்க பேனா பரிசளித்தவன் என்பதும், அவரது வசனத்தில் பொருத்தது போதும், மக்கள் ஆனையிட்டால் போன்ற படங்களில் நடித்ததும் எனக்கு சிங்கப்பூரில் இருந்தபோதுதான் நினைவுக்கு வந்தது. அப்படிப்பட்ட தலைவரை எதிர்த்து என்னால் போட்டியிட முடியாது. 

அதேபோல பொன்.ராதாகிருஷ்ணனும், இல.கணேசனும் எனக்கு நல்ல நண்பர்களே...அந்த கூட்டணியில் இருக்கும் வைகோ, தமிழருவி மணியன் போன்றோர் என்னோடு தொடர்பில் இருப்பவர்கள் என்பதாலும் அவர்களுக்கு எதிராக என்னால் போட்டியிட முடியாது. அதேநேரம் யார் ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டாலும் மற்றவர்களை எதிர்க்கும் நிலை வரலாம். எனவே அரசியலில் எல்லோரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் யாருக்கும் பாதகமில்லாமல் இந்த தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்துள்ளேன். என் இலக்கு 2016 சட்டமன்ற தேர்தல்தான். 


என்று கூறியுள்ளார். ஆனால், விஜயகாந்தின் இந்த முடிவுக்கு பின்னால் ஏதோ வலுவான காரணம் உள்ளது என்று நம் பொய்யூர் டைம்ஸ் நிருபர் பொய்யப்பனுக்கு தெரியவர, அவர் தன் சோர்ஸ்களை வைத்து சில தகவல்களை சேகரித்துள்ளார்.  அந்த தகவல்களை வாசகர்களுக்கு தருவதில் பெருமை கொள்கிறோம். 

விஜயகாந்த் நேர்காணல் நடத்தும்போது சீட் கேட்டு வந்தவர்களிடம், ஒருவேளை ஜெயித்தால் என்னை அம்போவென்று விட்டுவிட்டு ஓடிவிடாமல் என் கூடவே இருப்பேன் என்று எழுதிய பத்திரத்தில் கையெழுத்து கேட்டதாகவும், அதற்கு நேர்காணலில் கலந்துகொண்டவர்கள் மறுத்து விட்டதாகவும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

எத்தனை சீட் ஜெயித்தாலும் எப்படியும் நம் கட்சி எம்.பி.க்கள் நம்மை விட்டுவிட்டு தொகுதி நலனுக்காக சோனியாவையோ, மோடியையோ சந்திக்கத்தான் போகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் ஏன் இந்த ஏப்ரல் வெயிலில் அலைந்து வாக்கு சேகரிக்கணும்? நாம் கஷ்டப்பட்டு இவர்களை ஜெயிக்க வைத்தால் இவர்கள் சாதரணமாக நம்மை விட்டு ஓடி விடுவார்கள். ஆகவே இப்போது தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவருக்கு நெருக்கமான ஒரு நண்பர் பேசியதால் விஜயகாந்த் மனசு மாறியதாக தெரிகிறது. 

பின் குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனையே.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 comments:

 1. ஏன் பின்குறிப்பை இன்னும் சின்னதாக போட வேண்டியது தானே...! ஹா... ஹா...

  ReplyDelete
 2. இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

  4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

  லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

  நன்றி...

  ReplyDelete
 3. சலாம்,

  ஏன்ணே இப்படி? :-) :-)

  ReplyDelete
 4. அருமையான முடிவு. அடுத்து உங்களைத்தான் தே.மு.தி.க விற்கு கொள்கைப் பரப்பு செயலாளராக்கலாம்னு இருக்கிறாம் விஜயகாந்த்...ஹா..ஹா...

  "ஏன்யா வெந்த புண்ல வேல பாய்ச்சுறீர்..."

  ReplyDelete
 5. வர..வர.. உங்களோட குசும்புக்கு அளவே இல்லாம போயிடுச்சு...நடத்துங்க..நடத்துங்க... தேர்தல் அறிவிச்சாச்சு....இன்னும் என்னென்னல்லாம் வரப்போகுதோ.. உங்களுடைய பத்திரிக்கையும், நிரூபரும் வாழ்க....வாழ்க...

  ReplyDelete

 6. கற்பனை என்றாலும் நடக்க வாய்ப்புண்டு(!)

  ReplyDelete
 7. இப்படியா ஏமாத்துவீங்க? இன்னிக்கு ஏப்ரல் 1 கூட இல்லையே?

  ReplyDelete
 8. நல்ல கற்பனை.......தலைப்பை பார்த்தது உண்மை என்று நம்பி குழப்பத்தோட இது ஒரு அவசர செய்தியோ என்று படிக்க ஆரம்பித்த பிந்தான் புரிய ஆர்ம்பித்தது. இது நம்ம சகோவின் வழக்கமான குறும்புத்தனம் என்று

  ReplyDelete
 9. நானும் நம்பி தொலைச்சுடேன் ....

  ReplyDelete
 10. Good one Raheem. One minute I thought ..wow .. VijayKanth is really good, till I read the last line of the blog. Very funny.

  Thanks
  Arul

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.