என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, June 15, 2015

3 காக்கா முட்டையும் என் நெருடலும்.....காக்கா முட்டை...
வணிக சினிமாவுக்கான எந்த அடையாளமும் இதில் இல்லை. பெரிய கதாநாயகனோ கதாநாயகியோ இல்லை. கனவு காட்சிகள் இல்லை. காமெடியை தூக்கி நிறுத்த சந்தானம் போன்றவர்கள் இல்லை. குத்துப்பாட்டோ, கவர்ச்சி பாட்டோ இல்லை. இப்படி எத்தனையோ இல்லைகள். ஆனாலும் யதார்த்தத்தை அதன் போக்கிலேயே படமெடுத்ததில் ஜெயிக்கிறார் இயக்குநர். 

சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை ஆகிய இரண்டு சிறுவர்களும் நடிப்பிற்கு முற்றிலும் புதியவர்கள் என்றாலும் எந்த இடத்திலும் அது தெரியாமல் மிக இயல்பாய் எந்தவித போலியுமில்லாமல் நடித்திருக்கிறார்கள். போகிற போக்கில் அனைத்து விஷயத்தையும் சாடிவிட்டு செல்கிறது படம். வணிகமயமாக்கலில் ஆரம்பித்து, மீடியாக்களின் பசி வரை...
பசங்களை அந்த பீட்சா கடை மேனேஜர் அடிச்சிட்டார் என்று கேள்விப்பட்டு ரொம்ப அடிச்சிட்டாங்களா என்று குமுறும் அம்மா, பசங்களை அடிக்கக்கூடாது என்று பாலிசி வைத்திருக்கும் அம்மா, அந்த பீட்சா கடைக்காரன் மட்டும் என் கையில் கிடைத்தால் செத்தான் என்று போலீசிடமே கோபம் காட்டும் அம்மா இறுதியில் தன் பசங்களுக்கு கிடைத்த ஒரு பீட்சாவில் எப்படி சமாதானம் ஆனார் என்றுதான் விளங்கவில்லை. 
'ஏழைகள் என்றால் கை நீட்டி அடித்துவிடுவீர்கள். பின்னாடி சமாதானம் பேசி பீட்சாவை கொடுத்தால் நாங்க ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் மறந்துடணுமா?, சோற்றில் அடித்த பிண்டங்கள் என்பது போல பீட்சாவில் அடித்த பிண்டம்ன்னு நினைச்சுட்டீங்களா?' என பீட்சாக்கடை ஓனரிடம் நாக்கை பிடுங்கற மாதிரி நாலு கேள்வி கேட்டுவிட்டு அவர்கள் கொடுத்த பீட்சாவை மறுத்திருந்தால் காக்கா முட்டை இன்னும் செம டேஸ்டாக மாறியிருக்கும். இது ஒண்ணுதான் எனக்கு நெருடலாக தெரிந்தது.
அந்த பசங்களையும் சுயமரியாதையானவர்களாத்தான் காட்டிருப்பாரு இயக்குநர். எப்படின்னா.... 
ஒரு காட்சியில் ஒரு பணக்கார வீட்டுப்பையன் சில துண்டு பீட்சாக்களை இவர்களிடம் கொடுக்க சின்ன காக்கா முட்டை எடுக்க போவான். பெரிய காக்கா முட்டை அதை தடுத்து அழைத்துக்கொண்டு போவான். அவன் தின்னுட்டு மிச்சத்தை நமக்கு தருவான். அதை நாம் தின்பதா. நாம புதுசா வாங்கிக்கலாம் என்று சுயமரியாதை பேசுவான். ஆனால் இன்னொருத்தன் அடிச்சிட்டு பின்னர் சமாதானப்படுத்த தரும் பீட்சாவை சாப்பிடலாம் போல.....

குறை சொல்லும் நோக்கில் இதை நான் எழுதல. அந்த காட்சியமைப்பு எனக்கு சற்று நெருடலாகவே இருந்தது. நம்ம நம்ம பசங்களை அடித்துவிட்டு சமாதானம் செய்ய ஐஸ்க்ரீம் வாங்கி கொடுப்பது வேறு. மற்றவர்கள் நம்ம பிள்ளையை அடித்துவிட்டு ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுப்பதென்பது வேறு அல்லவா?


Post Comment

இதையும் படிக்கலாமே:


3 comments:

 1. மாறுபட்டு யோசித்திருப்பது
  ரசிக்கவைத்தது

  ஆனால் அப்படிச் செய்திருந்தால்தான்
  செயற்கையாக இருந்திருக்கும்

  அடிக்கப்பட்டதை எண்ண வரும்
  ரோஷத்தை விட தங்கள் புதல்வர்கள்
  ராஜமரியாதையுடன் நடத்தப்படுவதைத்தான்
  எந்தத் தாயும் அதிகம் மதிப்பாள்

  நிச்சயம் அதைக் காரணம்காட்டி தடுக்க
  நினைக்கமாட்டாள் என்பதே எனது கருத்து

  படத்தின் ஒரு வரிக்கதையை கூர்ந்து கவனித்தால்
  பாட்டி தோசைப் போலக் கூட இல்லை யென்பதுதான்
  கவனிக்கத் தக்கது

  அம்மாவின் ரோஷம் அங்கு முக்கியமில்லை

  ReplyDelete
 2. ஏழைகள் எதற்க்கும் பொருத்துக்கொண்டுதான் ஆகவேண்டும் என்பதில் எதிரொலியாக இருக்கலாம்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.